அருசுவை தோழிகள் இந்தியா வருகை

மக்களே, தோழிகள் & தோழர்கள் எல்லாருக்கும் வணக்கம். இதில் நம்ம அருசுவை தோழிகள் யாரெல்லாம் இந்தியா வருவது(போகிறது)
தெரியபடுத்தினால் மற்ற தோழிகளுக்கும் பார்க்க பேச நேரில் பார்பதற்க்கு ரொம்ப உதவியாக இருக்கும்.
நாம் எல்லாரும் நேரில் பார்க்க சந்தர்ப்பம் ரொம்ப குறைவு, அதனால் யாரெல்லாம் இந்தியா விசிட் என்று தெரிந்தால் மற்றவர்கள் எல்லாரும் ஒன்று கூடி சேர்ந்து நேரில் பார்க்காலாம்.
நன்றி.

யாரெல்லாம் இப்ப வரும் ஜூலை,ஆகஸ்ட்டில் யாராவது இந்தியா விசிட் இருந்தால் தெரியபடுத்த விரும்பினால் இந்தியாவில் இருக்கும் மற்ற தோழிகள் எல்லாரும் ஒன்று கூடி ஒரு இடம் தேர்வு செய்து
சந்திக்கலாம்,நேரில் பார்க்க ஒரு நல்ல சந்தர்பம்.

இதில் மற்றவர்கள் எல்லாரும் யார் யார் எப்ப போறிங்களோ அவர்கள் தெரியபடுத்தினால் மற்றவர்களுக்கு பார்க்க ஒரு வாய்ப்பு.
எந்த மாதம் வேண்டுமானும் இருக்கலாம் வரும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்,
இந்த மாதங்களில் வேற யாரெல்லாம் போறிங்க தெரிய படுத்தினால் பார்க்கலாம்.
நன்றி. வாங்க வெளிநாட்டில் & இந்தியாவில் இருக்கும் எல்லாரும் இதை பார்த்து பதில் அளிப்பிங்க என்று நினைக்கிறேன்.

ஹாய் விஜி, எப்படியிருக்கிறீங்க? உங்க கூட பேசியும் ரொம்ப நாளாகிட்டது. நான் நலம்.

நான் ஆகஸ்ட் பாதியில் புறப்படுவது உறுதியாகிவிட்டது.இது ப‌ற்றி நானும் இங்கே சொல்ல‌ வேண்டும் என‌ நினைத்தேன்.ஆனால் இங்கே பேசி முடிவு செய்து விட்டு முடியாம‌ல் போய்விட்டால் மிக‌வும் வ‌ருத்த‌மாகிவிடுமோன்னு தான் கொஞ்ச‌ம் த‌ய‌க்க‌ம்...என‌க்கும் எல்லோரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் ச‌ந்தோஷ‌ம் தான்...நானும் முய‌ற்சிக்கிறேன்.

அன்புட‌ன்
உமா.

ரேணு நிங்க எப்ப இந்தியா விசிட்& எவ்வளவு நாட்கள்,சென்னையிலா?

உமா நன்றி. குட் நானும் ஆகஸ்டில் இந்தியாவில் தான் இருப்பேன். முடிந்தால் பார்க்கலாம்.
நிங்க சென்னையா? உங்க ஐடி யார்கிட்டே இருக்கு சொல்லுங்க.

விஜிக்கா,
உங்களுக்கான் என் மூன்றாவது பதிவு எது.
முதல் 2 பதிவுகளை பார்த்தீர்களா?
நான் ஆகஸ்டில் இந்தியாவில் நாம் பார்க்க கூடிய தொலைவில்தான் இருக்கிறேன்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்ககூட இப்பதான் நான் பேசுகிறேன். ரொம்ப சந்தோஷம், சொல்லுங்க எங்க பார்க்கலாம். வாங்க கண்டிப்பா பார்க்கலாம்.

உங்களின் பாகற்காய் தீயலில் ஒரு பின்னூட்டம் போட்டேன்.பாருங்களேன் புரியும்.
நான் நாகர்கோவில்....நான் பின்னூட்டத்தில் சொல்லிய விவரங்கள் பாருங்கள்...அதில் சொல்லியுள்ளவர்....என் கணவரின் தாய்மாமா.
அதை பார்த்துவிட்டு சொல்லுங்கள்..தெரியுமா என்று..
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் விஜி அக்கா,

இப்போது தான் முதன் முறையாக உங்களுடன் கதைக்கிறேன். அருமையான யோசனை. அழகாக திட்டமிடுங்கள். வாழ்த்துக்கள்.

சுபா

ஹாய் விஜி,எப்படி இருக்கீங்க?சமீபகாலமாக நானும் இந்த அருசுவையில் பங்கு கொண்டு வருகின்றேன்.என் பயண தேதியும் குறித்தாயிற்று.துபையிலிருந்து திருச்சி செல்லும் விமானம்.சந்திக்கும் சந்தர்ப்பம் இருந்தால் நானும் அதில் பங்குக் கொள்வேன்.ஊருக்கு சென்ற பின் என்னால் இந்த அருசுவையை தொடர்புக் கொள்ள இயலாது.நான் இருப்பதோ கிராமம்.எனவே கலந்து ஆலோசியுங்கள்.நல்ல யோசனை தந்த விஜி அவர்களுக்கு ஒரு ஓ...போடணும்.நான் மயிலாடுதுறை பக்கம்.(கேள்விபட்டு இருக்கிறீர்களா?)தங்களெல்லாம் எந்த ஊர்?மீண்டும் இப்பக்கம் சந்திப்போம்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்சரா எப்படி இருக்கிங்க நானூம் மயிலாடுதுறை பக்கம் தான்.

என்ன விஜிமா ஷைடில் பிட்டு போட்டு கெட்டு கெதருக்கு ஏற்பாடா சூப்பர் :-D
விஜி நானுங்கோ ஆண்டிபட்டி பக்கமுங்கோ அங்கு பார்க முடியுமா வாரிஹலா?
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்