ஓட்ஸ் காரக் கொழுக்கட்டை

தேதி: June 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

1) ஓட்ஸ் - 1 கப்
2) தேங்காய் - 1 துண்டு
3) காய்ந்த மிளகாய் - 4
4) கறிவேப்பிலை - சிறிதளவு
5) கடுகு - 1 டீஸ்பூன்
6) உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
7) கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
8) சீரகம் - 1/2 டீஸ்பூன்
9) எண்ணெய் - தேவைக்கேற்ப
10) உப்பு - தேவைக்கேற்ப


 

ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து, ரவை மாதிரி உடைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி, தனியாக சிவக்க வறுக்கவும்.
ஓட்ஸில் உப்பு, தாளித்த பொருட்கள், வறுத்த தேங்காய் பல் போட்டு நன்றாகக் கலக்கவும்.
அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
இதை சிறிய உருண்டைகளாகவோ, நீள வாக்கிளோ உருட்டிக் கொள்ளவும்.
இவ்வாறாக அனைத்தையும் உருட்டிக் கொண்டு, ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சகோதரி சுபா!
சத்தான ஓட்ஸ் காரக்கொழுக்கட்டை. இன்றிரவு செய்திருந்தேன். வீட்டில் அனைவருக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. நேற்று செய்த உங்கள் குடைமிளகாய் தொக்குடன் சாப்பிட்டோம். நல்ல ருசி! நன்றி உங்களுக்கு!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

மிக்க நன்றி இளமதி அக்கா.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஓட்ஸ் காரக் கொழுக்கட்டை செய்வதற்கு எளிமையாகவும் சுவையாகவும் இருந்தது நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்