அம்மாவின் கைமணம்

அனைவருக்கும் வணக்கம்.

நாம் அனைவரும் நாமே சமைத்தது தவிர மற்றவர்கள் சமைத்ததையும் சாப்பிடுகிறோம். உதாரணமாக பக்கத்து வீட்டுக்காரர்கள் சமைத்தது, ஹோட்டல் சாப்பாடு.

ஆனால் இவை அனைத்திலிருந்தும் அப்பாற்பட்டது நம் தாய் சமைக்கும் சமையல். அதில் அன்பையும் கலந்து ஊட்டுவதால் நமக்கு அது அமிர்தமாகிறது.

அப்படி நமக்காக அம்மா பார்த்து பார்த்து செய்த சமையலில் அனைத்தும் பிடிக்கும் என்றாலும், சில பதார்த்தங்கள் மிகவும் பிடித்ததாக இருக்கும். அவற்றை பற்றி தான் நாம் இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.

என் அம்மாவின் கைமணத்தில் எனக்கு மிகவும் பிடித்த சில:

1) சின்ன வெங்காய வெத்தக் குழம்பு.
2) வெங்காய காரச் சட்னி.
3) cauli flower வதக்கல்.
4) இட்லி மஞ்சுரியன் (என் குறிப்பில் இருப்பது)
5) வெஜிடபிள் பிரியாணி.

இன்னும் பல பல. வரப் போகும் பதிவுகளில் சொல்கிறேன்.

சுபா

ஆஹா எதை சொல்ல எதை விட
நல்ல பசிக்கும் நேரத்தில் இப்படி ஒரு இழை
என் அம்மா சமைப்பதில் நாங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவது

1)சாம்பார்
2)பாவக்காய் குழம்பு
3)வெண்டக்காய் பொரியல்
4)னூடில்ஸ் & மகரோனி
5)சேமியா பிரியாணி
6)மசாலா பூரி
7)பரோட்டா
8)கத்தரிக்காய் உருளை பொரியல்
9)சிக்கன் ரோஸ்ட்
10)மீன் குழம்பு
11)பஜ்ஜி மற்றும் பருப்பு வடை
12)கோதுமை பாயாசம்
13)கட்லெட்
14)சில்லி கோபி
15)கத்தரிக்காய் வறுவல் மற்றும் உருளை வறுவல்

மேற்கண்ட எதை அம்மா சமைத்தாலும் சரி நாங்கள் கிcச்ஹனிலேயே பரிமாறும் வரை சுற்றிக் கொண்டிருப்போம்..என்னதான் பார்த்து சமைத்தாலும் அதே ருசி நமக்கு அமைவதில்லை..
அம்மாவின் திற்மை என்பது ரொம்ப ஆடம்பர சமியலாக இல்லாவிட்டாலும் சிம்பிலாக ஓரிரண்டு கறியாயிடும் நல்ல அருமையான காம்பினேஷனாக சமைத்து தருவது தான்

இன்னொரு மாசம் போனால் அம்மா கைய்யால் சாப்பிடும் பாகியம் கிடைக்கும் என்று நம்பிகிறேன்.ச்சே ரொம்ப ஆசைய தூண்டிட்டீங்க

மன்னிக்கவும் தளிகா அக்கா. இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை. இப்ப உங்களுக்கு 7 ம் மாதம் தானே? உங்கள் சொந்த ஊர் எது அக்கா?

நீங்க சொன்ன மாதிரி அம்மாக்களுடைய சமையலே தனி தான். உதாரணத்துக்கு என் குறிப்பில் இருக்கும் இட்லி மஞ்சுரியனை நான் செய்வதை விட அம்மா செய்தால் சாப்பிட்டுகிட்டே இருப்பேன்.

சுபா

அம்மாவின் சமயலில் எனக்கு பிடித்தது

1. கத்தரிக்காய் கொத்சு
2. கொத்தமல்லி சட்னி
3. கூட்டாஞ்சோறு
4. தேங்காய்ப்பால் பிரியாணி
5. வாழைக்காய் வறுவல்
6. புளிக்காச்சல்
7. அரச்சி வச்ச குழம்பு
8. அவல் உப்மா
இன்னும் சொல்லிக்கிட்டே போலாம்

vazhga valamudan

தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி அக்கா. இன்னும் தொடரலாம்.

ஹலோ என் பெயர் சாய் அனிதா உங்கள் கூட்டணியில் நானும் சேரலாமா.அம்மாவின் கைமணம் பற்றி கேட்டவுடன் எப்ப ஊருக்கு போய் சாப்பிடலாம் இருந்த எனக்கு அம்மாவின் கைமணம் பற்றி சொல்ல சந்தர்பம் கிடைத்தது.
சாம்பார்
மட்டன் பிரியாணி
உருண்டை குழம்பு
இட்லி சாம்பார்
தக்காளி தேங்காய் சட்னி
சேனைகிழங்கு வறுவல்
வத்தல் குழம்பு
அம்மா சமைத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனிதான்

சாய் அனிதா

தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி சாய் அனிதா. தயங்காமல் பதிவு போடுங்க.

நானும் உறுப்பினரா மட்டும் தான் இத்தனை நாளா இருந்தேன். இப்போ தான் அரட்டைக்குள்ள வந்திருக்கேன். எல்லாரும் நம் அக்காக்கள், தோழிகள் தான். நட்பா பழகி நிறைய தெரிஞ்சுக்கலாம், பகிர்ந்துக்கலாம் வாங்க.
சுருக்கமா சொன்னா வாங்க பழகலாம்.

சுபா

அம்மாவின் சமையலில் எனக்கு பிடித்தது.
முருங்கைக்காய் புளிக்குழம்பு
இரால் எண்ணெய்க்குழம்பு,
வாவல்மீன் குழம்பு,
முருங்கைக்காய், வாழைக்காய், பலாக்கொட்டை சேர்த்த பொரிச்சக்குழம்பு,
இரால், வாழைக்காய் வருவல்,
சொதி,
கெண்டைமீன் குருமா,
பால் கொழுக்கட்டை,
அதிரச மாவு,
வெங்காய குழம்பு......
இன்னும் நினக்க நினைக்க நிறைய ஞாபகத்துக்கு வருகிறது.......

சுபா இப்படி ஒரு பதிவை தொடங்கி அம்மாவை விட்டு தள்ளி இருக்கும் கர்பிணி பெண்களின் ஏக்கத்தை ரொம்பவே தூண்டிடீங்க.....

இருந்தாலும் மனசுக்குள் இருந்ததை மற்றவருடன் பகிர்ந்தால் நன்றாக தான் இருக்கும்....அதுவும் அம்மாவை பற்றி என்றால் பேசி கொண்டே இருக்கலாம். அதுவும் கல்யாணம் ஆகி மருமகள், மனைவி மற்றும் அம்மாவாக ஆகிய பின் நம் உற்ற தோழி ரோல் மாடல் எல்லாமே அம்மா தானே.

அம்மாவின் கைவண்ணத்தில் எல்லாமே அழகு ருசி தான் இருந்தாலும் சில உணவை நாம் அதே மாதிரி செய்தாலும் அந்த ருசி வருவதே இல்லை.....அப்படி சில....

தக்காளி சாதம் (ஆல் டைம் பாவோரிட்)
கத்தரிக்காய் சாதம்
பூரி உருளைகிழங்கு
அடை
மட்டன் கிரேவி
மட்டன் கைமா பிறை
முட்டை போரியல்
இட்லி சாம்பார்
தேங்காய் பால் சாதம்
முருங்கக்காய் சாம்பார்
கத்தரிக்காய் மசாலா
கத்தரிக்காய் கொத்சு
உருளைகிழங்கு பிறை
பூண்டு சட்னி
புதின சட்னி

இன்னும் நிறையா இருக்கு.....

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் சுபா.நலமாக இருக்கீங்களா? நல்ல ஒரு த்ரெட் ஆரம்பித்திருக்கீங்கள்.நன்றி&வாழ்த்துக்கள். என்னோட profile
ல் நான் பிடித்தமான உணவில் அம்மா சமைத்துகொடுத்த உணவு என்றே கொடுத்திருக்கிறேன்.இதன் மூலம் அம்மாவை அவர்கள் சமைத்த உணவை எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.நன்றி.என் அம்மாவின் சமையல் எல்லாமே சூப்பர்.அதில் ஸ்பெஷல் என்றால்
மிக்ஸர்
மைசூர்பா
பூந்தி லட்டு இவை சிற்றுண்டி
சாம்பார்
அவியல்
கூட்டு
அப்பம்
சத்து மா
பொரி மா
இப்படியாக பலபல உணவுகள். நான் ஒவ்வொருநாளும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவர்கள் இவ்வுலகில் இல்லை.என்க்கு சமைக்க தெரியாது. இங்கே வந்துதான் சமைத்து பழகினேன். சமைக்கும் போது அவர்களை நினைத்துக்கொள்வேன். இப்போ அம்மாவின் ஆசீர்வாதம்&அறுசுவையால் மற்றவர்கள் பாராட்டும், கணவரின் பாராட்டுதலும் கிடைக்கிறது.மீண்டும் நன்றி சுபா. அன்புடன் அம்முலு

மேலும் சில பதிவுகள்