சன்னா வடை

தேதி: June 29, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1) சன்னா - 1 கப்
2) இஞ்சி - 1 சிறிய துண்டு
3) பச்சை மிளகாய் - 5 (அல்லது) 6
4) கொத்தமல்லி (அல்லது) புதினா - சிறிதளவு
5) சோள மாவு (அல்லது) அரிசி மாவு - 1/2 டீஸ்பூன்
6) சோயா மாவு - 1 டீஸ்பூன்
7) எண்ணய் - பொரிக்க தேவையான அளவு
8) உப்பு - தேவையான அளவு


 

சன்னாவை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி (அல்லது) புதினா சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இந்த அரைத்த கலவையில் உப்பு, மேற்கூறிய மாவு சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டிப் பொரித்து எடுக்கவும்.
சுவையான சன்னா வடை ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சுபா.நான் நலமாயிருக்கிறேன்.நன்றி.நேற்று உங்க குறிப்பிலிருந்து சன்னாவடை,ஓட்ஸ் காரக்கொழுக்கட்டை 2ம் செய்திருந்தேன்.2மே நல்ல டேஸ்டாக இருந்தது.நன்றி சுபா.

செய்து பார்த்து கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி அம்முலு அக்கா.