ரைஸ் க்ரிஸ்பி கட்லெட்

தேதி: June 30, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1) சாதம் - 1 கப்
2) வேர்க்கடலை (வறுத்துப் பொடித்தது) - 1/2 கப்
3) உருளைக் கிழங்கு (வேக வைத்தது) - 1 (நடுத்தர அளவு)
4) இஞ்சி-பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
5) மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
6) மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
7) கொத்தமல்லித் தழை - சிறிதளவு
8) உப்பு - தேவையான அளவு
9) எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

வேர்க்கடலைப் பொடி, உருளைக் கிழங்கு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கை தனியாக நன்றாக மசித்துக் கொள்ளவும். இதையும் அந்த கலவையுடன் நன்றாகக் கலக்கவும்.
அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்தவுடன் சின்ன சின்ன சதுரங்களாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
தட்டியதை வேர்கடலைப் பொடியில் புரட்டி எடுக்கவும்.
எண்ணெயை காய வைத்து, மிதமான தீயில், புரட்டி எடுத்ததைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்