கர்ப்பமாக இருப்பவரிடம் நடந்து கொள்ளும் முறைகள்

வணக்கம் தோழிகளே... புதுசா ஒரு விஷயத்தை பற்றி பேச வந்திருக்கேன். :) இவளுக்கு வேறு வேளையே இல்லையான்னு கேக்குறீங்க... கேட்டுடுச்சு. என்ன செய்ய... சில நேரத்தில் யாராவது எதையாவது படிச்சு மாத்திக மாட்டாங்களான்னு ஒரு ஆசை... அதான் இப்படிலாம். படிச்சு பார்த்து உங்க கருத்தையும் சொல்லுங்கோ.

1. கர்ப்பமாக இருக்கும் மனைவியிடம், வழக்கமாக காட்டும் கோவத்தை காட்டாமல் இருப்பது நல்ல கணவனுக்கு அழகு.

2. எல்லா மனைவியும் தான் கர்ப்பமானதும் கணவன் தன் மீது அதிகபடியான பாசமும் அக்கரையும் காட்டுவார் என்று எதிர் பார்ப்பது வழக்கம். அதை புறிந்து அவர்களிடம் நடந்து கொள்வது கணவனின் கடமை... அப்படி நடக்க முடியாமல் போனாலும் மனைவியிடம் இது போன்ற நேரத்தில் உங்கள் எரிச்சலையும், கோவத்தையுமாவது காட்டாமல் இருப்பது நல்லது. மன அழுத்தம் காரனமாக மன நோயால் பாதிக்கப்படும் பெண்களும், குறை பிரசவத்தில் பெற்றெடுக்கும் பெண்களை பற்றி உங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் தெரிந்து கொள்ளுங்கள்.

3. பெண்கள் கர்ப்பம் ஆகும்போது பொதுவாக ஹார்மோன் பிரெச்சனைகள் பல ஏற்படும். இது போன்ற நேரத்தில் அவர்களுக்கு மனதுக்குள் புரியாத ஆசைகளும், பயமும் இருக்கும். அவற்றை சுற்றி உள்ள உறவுகள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

4. சில வீடுகளில் இப்படி இருக்கும் மருமகளிடம் தான் மாமியார் தன் ஆத்திரத்தை எல்லாம் காட்டுவார். தயவு செய்து உங்க பிள்ளை தப்பு பண்ணா கூட எடுத்து சொல்லி இந்த சமையத்தில் மனைவியிடம் அக்கரையும், அன்பும் செலுத்த சொல்லுங்கள். அதுவே நல்ல மாமியாருக்கு அழகு.

5. மருமக வாந்தி எடுத்து கஷ்ட படுறா, வேலை பார்க்க முடியல, சமைக்க முடியல... இப்படிலாம் பிள்ளை சொன்னா முக்கவாசி மாமியார் சொல்றது இது தான்... "ஏன்டா நாங்களாம் பிள்ளை பெத்துக்கலயா??? ஊர்ல இல்லாத கர்ப்பமா உன் பொண்டாட்டிக்கு மட்டும்.. இதெல்லாம் இருக்க தான் செய்யும் அதுக்காக சமைக்க மாட்டாளா அவ? போடா... போய் வேலைய பாக்க சொல்லு" (இதெல்லாம் கண் முன் பார்த்து தான் சொல்றேன், இப்படிலாம் பேசுவாங்களான்னு நினைக்காதிங்க.). வேண்டாம் மாமியார்களே வேண்டாம்.... உங்கள் பவரை காட்டும் சமயம் இது அல்ல. எனக்கு தெரிந்த ஒரு பெண் இப்படி சொல்கிறார்கள் என்று முடியாத நிலையில் வேலை பார்த்து, வயிற்று வலி ஏற்பட பயந்து போய் சில வருடங்கள் மன நோயால் பாதிக்க பட்டார்.

6. ஹார்மோன் பிரெச்சனை இருக்கும் கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவத்துக்கு சில மாதங்கள் பின்னும் சரி, எதற்கும் பயபடவோ, மன அழுத்தம் ஏற்படவோ கூடாது என்று டாக்டர்கள் சொல்வது கருவில் இருக்கும் குழந்தையின் நலனை மட்டும் நினைத்து அல்ல, பெண்ணின் ஆரோக்கியத்தையும் நினைத்து தான் என்பதை உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். அது மகள் ஆனாலும் சரி, மருமகள் ஆனாலும் சரி.

7. அம்மா சொல் பேச்சை கேட்கும் பிள்ளைகளே, தவராக அறிவுரை சொன்னால், தாயானாலும் கேட்க வேண்டாமே... உங்களால் ஒரு பெண்ணின் மனதில் தேவை இல்லாத கவலை வேண்டாமே... அவள் சுமப்பது உங்கள் வாரிசை தான் என்பதை மறக்க வேண்டாமே. உங்கள் கோவத்தாலும், அலட்ச்சியத்தாலும் பாதிக்க படுவது யாரோ பெற்ற பெண் மட்டுமில்லை, அவள் வயிற்றில் வளரும் உங்கள் வாரிசும் தான் என்பதை மறக்க வேண்டாம்.

8. அடுப்படி பக்கமே போகாதவராக இருந்தாலும் மனைவிக்கு இந்த சமயத்தில் ஒரு பால் காய்ச்சவாது செய்யலாமே... பலரும் இன்று செய்கிறார்கள், அனைவரையும் நான் குறை சொல்லவில்லை... செய்யாதவர் இதை பார்த்த பின்னாவது செய்யுங்கள். உங்களுக்காக ஆயுள் முழுக்க உழைக்கும் மனைவிக்காக 10 மாதம் உழைப்பதில் தவறு இல்லை தானே?? இதில் உங்கள் மரியாதை கெட்டு விடாது, பல மடங்கு உயரும். உங்கள் மீது உங்க மனைவிக்கு இருக்கும் அன்பு அதிகமாகும்.

9. கர்ப்பமாக இருக்கும் பெண்ணை பார்ப்பவர்கள் எத்தனை மாதம் என்று கேட்பதோடு நிறுத்தி கொள்வது நல்லது. தேவை இல்லாமல் "வயிறு சின்னதா இருக்கே, எனக்கு எப்படி இருந்தது தெரியுமா??? வயிறு பெருசா இருக்கே..."... இது போன்ற விமர்சனம் வேண்டாம்... உள்ளுக்குள் இது போன்ற கேள்விகள் அப்பெண்ணை பயம் கொள்ள செய்யும். தேவை இல்லாமல் குழம்பி போவாள்.

10. அவளுக்கு விருப்பம் இல்லாத உணவை உண்ண சொல்லி கட்டாய படுத்த வேண்டாம். உதரணத்துக்கு, சிலருக்கு மாம்பழம் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது, சிலருக்கு சூடான உடம்பு ஒத்து வராது. அது அந்த பெண்ணுக்கு தெரிந்து வேண்டாம் என்று சொன்னால் விட்டு விடுவது தான் நல்லது... உனக்கு என்ன தெரியும், நாங்களாம் பிள்ளை பெத்துகலயா, சாப்பிடுனு சொல்லி உறவுகள் கட்டாய படுத்த வேண்டாம்.

மொத்தத்தில் இது போன்ற நேரத்தில் ஒரு பெண்னுக்கு தேவை நல்ல அன்பும், பாசமும் தான். ஆண்கள் மற்றும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்... ஒவ்வொரு பெண்ணின் உடலும் வேறு... உங்கள் தாய் 5 பிள்ளைகளை பெற்றிருக்கலாம், உங்க மனைவியும் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது தவறு. உங்க அப்பா 80 வயது வரை நோய் இல்லாமல் இருந்தார், உங்களுக்கு 30 வயதில் நோய் வருகிறதே... அப்படி தான் இதுவும். பெண்ணின் மனம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள். மற்றவரோடு ஒப்பிடும் பழக்கம் சமையலோடு நிறுத்தி விடுங்கள்... கர்ப்பத்தில் கூட வேண்டாமே... ப்ளீஸ். உங்கள் வீட்டு மருமக, உங்க மனைவி, உங்க உறவினர்... யாராக இருந்தாலும் முடிந்தவரை உதவுவோம்.... 1000 இருந்தாலும் பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மருபிறவி இல்லையா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹிஹிஹீ..அருமை வனிதா..நிஜம் தான் சிலருக்கு கர்பகாலம் மற்றவர்களால் கஷ்டமாக அமைந்து விடும்..எனக்கு பிடிக்காத இன்னுமொரு விஷயம் உண்டு.
சில பெண்களுக்கு உடம்பிலும் முகத்திலும் நீர் வரும் ..தெரிந்த பெண் இப்படி நீர் வந்ததும் அவளிடம் பார்ப்பவர்கள் எல்லாம் அய்யோ உன் அழகே போச்சு முகமெ கெட்டு போச்சு என்று சொல்ல ஆரம்பிக்க இவளுக்கு அதுவே பெரும் வருத்தமாகி விட்டது..என்னிடம் ஒரு நாள் கேட்டாள் நிஜமாவே நான் ரொம்ப அசிங்கமாகிட்டேனா என்று..நான் கேட்டேன் நீ என்ன இப்ப அழகிப் போட்டிக்கா தயாராகிட்டிருக்கே எல்லாம் குழந்தை பிறந்துட்டா முகம் பழையபடி வந்துடும் என்று..தயவாக இப்படி பட்ட கமென்டுகளை வழங்காதீர்கள்
வனிதா நீங்க கரெக்டா தான் கேட்டீங்க.என்ன செய்வது பல நாள் இருமலையும் தொண்டைவலியும் பொறுத்து பார்த்தேன் சரியாவேனா என்று மல்லுக்கட்டி சப்பிட முடியாமல் தூங்காமல் என் எடை குறைந்தது மிச்சம்.கடைசியில் ஆன்டிபயாடிக்கால் தான் மாறியது.ஆனால் கர்பகாலத்தில் கேடு விளைவிக்காத ஆன்டிபயாடிக் தான் எஙிறார்கள் கடவுளுக்கு வெளிcச்ஹம்.

வனிதா நான் மெதுவா தானே சொன்னேன் காதுல விழுந்துடிச்சா?:-))
மிகவும் நல்ல கருத்துக்கள், சம்மந்தபட்டவர்கள் படித்தால் நல்லது. நல்ல நல்ல டாப்பிக்கா ஆரம்பிக்கிரீங்கள். நன்றி!
என் பங்குக்கு எனக்கு தோன்றியது,
ஒரு சிலருக்கு ரெஸ்ட் எடுக்கும் படி டாக்டர் அறிவுறுத்தியிருக்கலாம். டாக்டருக்கு என்ன தெரியும் என்ரு,கர்ப்பமான பெண் குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் தான் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொல்லி அவளை அதிக வேலை வாங்குதல் த்விர்க்கலாம்.
கர்ப்பமான நேரத்தில் டெலிவரி பத்தி ஓவராக சொல்லி பயமுறுத்தாமல் இருக்க வேண்டும்.

எனக்கு தெரிந்த பின் வெளிநாட்டில் கூட்டு குடும்பம் தான் அங்கேயே பிரசவத்துக்கு நின்றார் அம்மா அங்கு சென்றார் உதவிக்கு.திரும்பி வந்து அந்தமா ரொம்ப வருந்தினார் மாமியார் தினசரி அந்த பெண்ணை மாடிப்படி ஏறி இறங்க வைப்பாராம் அது குழந்தை எளிமையாக பிறக்க நல்ல எக்செர்சைஸ் என்று.அந்த பெண் ரொம்ப சோர்வா இருக்குமாம் அப்பல்லாம் இப்படியே சோம்பேரித்தனமா இருந்தா எப்படி என்று நல்ல இந்தம்மா முன்னாடியே வேலை வாங்குவாங்களாம்..
அப்படியிருக்க அந்த பெண்ணுக்கு குழந்தை ப்ரீச்..தலை மேலும் கால் கீழுமாக இருந்தது அதனால் மருத்துவர்கள் முன்னமே சிசேரியனுக்கு நாள் குறிக்க சொல்லி விட்டார்கள்..வலி வந்துவிட்டால் பிறகு சிரமமாகிவிடும் என்றார்கள்.அதுக்கும் மாமியார் விடவில்லை ச்சேச்சே அப்படியெல்லாம் ஏதுமில்ல பிரசவ வலி தொன்டங்கும் வரை எல்லா குழந்தையும் அப்படி தான் இருக்கும் வலிக்கும்போது தான் குட்டிக்கரணம் போடுமாம் அதனால் தான் வலிக்கிறது பின்ன சும்மாவா என்று ஹாஸ்பிடலுக்கும் போக விடாமல் பிறகு வலியும் வந்து பல சிக்கலுக்கிடையில் எப்படியோ சிசேரியனில் குழந்தை பிறந்தது.
அந்தம்மா இன்றும் வருந்துவார் கண்முன்னே என் மகளை கொடுமை படுத்தி விட்டார்கள் என்று.
இப்படிபட்ட சாகசங்களை சொந்த மகளுக்கு செய்து பார்க்கலாமே அப்ப மட்டும் ஊரிலே முந்தின ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடுறீங்க?

மிக்க நன்றி தளிகா.... நீங்க சொனது 100% உண்மை. பல மாமியார்கள் இப்படி இருப்பதால் தான் தாய் வீட்டுக்கு அனுப்ப சொல்றாங்க அந்த காலத்தில் இருந்து. ஆனால் சில நேரத்தில் தாய் வீட்டில் இருக்கும் அண்ணன் மனைவி கூட இப்படி தான் நடத்துறார். பெண்ணாய் பிறப்பதை புண்ணியம் என்று நினைத்த நான் இப்போதெல்லாம், பெண் ஜென்மமே பாவ ஜென்மம் என்று நினைக்கும் அளவுக்கு போயிட்டுது. இப்போது இருமல் நின்று விட்டது தானே... மீண்டும் இது போல் நடக்காமல் பார்த்துக்கங்க.

மிக்க நன்றி மாலி... நீங்க சொன்ன இரண்டாவது விஷயத்தை நான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.... தேவை இல்லாமல் பிரசவம் இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று முதல் பிரசவத்துக்கு போகும் பெண்ணை பயம் காட்டுவது. ஊசி போட்டா வலிக்கிதுன்னு சொன்னா, "இதையே தாங்க முடியலன்னா பிரசவ வலி எல்லாம் எப்படி தாங்குவ"னு பேசுறது. இது அடிப்படையா அந்த பெண்ணுக்குள் தேவை இல்லாத பயத்தை ஏற்படுத்தி அவள் உடல் நலனை கெடுக்கும் என்று வயசான கிழவிங்க கூட புரிஞ்சிகிறது இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க சொன்னது ரொம்ப சரி. எல்லாரும் எக்ஸ்பெர்ட் ஆகிடுவாங்க. நம்பள மெரட்டற மெரட்டுல கதி கலங்கிடும். என்னுடைய சொந்த அனுபவம். முதல் முதல் செக் up கு போனபோது அந்த டாக்டர் who was supposed to be such an experienced obstetrician என்னிடம் invasive check up செய்தார். நான் வலியில் துடித்து விட்டேன். வலியில் அழ ஆரம்பிக்க அவருக்கு கோபம் வந்து விட்டது. என் கணவரிடம் உங்கள் மனைவி என்ன கொஞ்சம் கூட வலி பொறுக்க மாட்டாளா? அவளுக்கு caesarian தான் ஆகும். Forget natural birth என்று கடுமையாக பேசினார். அதோடு அவரை பார்க்கவில்லை என்பது ஒரு விஷயம். ஆனாலும் அந்த பயம் என் மனதிலேயே தங்கி விட்டது. கடைசி வரை பெர்பெக்ட் கண்டிஷன் இல் இருந்த உடம்பு கடைசி நாளில் ஒத்துழைக்கவில்லை. caesarian தான் ஆனது. மிகவும் சிரமப்பட்டேன்.

நல்ல டாபிக் ஆரம்பித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் :)

அன்புடன்
உமா

இந்த இழையில் உங்களுக்கு பதிவு போடுவதை வனிதா கண்டுக்க மாட்டங்கன்னு நெனைக்கிறேன். :) மன்னிச்சிகோங்க வனி. இதுக்காக தனி இழை தொடங்க வேண்டாமேன்னு பார்த்தேன்.

எப்படி இருக்கீங்க தளிகா? உடம்பு பரவாயில்லையா? இருமல் அப்படின்னு எழுதி இருந்தீங்களே? இப்போ எப்படி இருக்கு? உடம்புக்கு எதுவும் வராம பார்த்துக்கோங்க. ரீமா sweetie எப்படி இருக்கா? இப்போ எவ்வளவு மாசம் ஆச்சு? எப்போ உங்களுக்கு due? அப்போ அப்போ உங்களை நெனைச்சிப்பேன் :)

Take care of you and look after yourself. 100 hugs to you my little sista! :)

அன்புடன்

ஹாய் உமா
தோ நேற்று முந்தைய நாள் கூட உங்களுக்கு ஒரு பதிவை போடனும் என்று மனதில் நினைத்தேன்.கரெக்டா கேட்டுட்டீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.
இப்ப நல்லா இருக்கேனான்னா கேக்கறீங்க?ஒரே அழுவாச்சியா வருது இல்லாத நோயெல்லாம் ஒன்னு சேந்து இப்ப வந்து படுத்துது.இருமல் இப்பவும் அடிக்கடி இரவில் வந்துடும் அதாவது பரவால சில ஸ்ட்ரேஞ் ஃபீலிங் புதுசு புதுசா..தொண்டை எல்லாம் ரொம்ப வரண்டு தண்ணி இல்லாத மாதிரி ஆகிடுது அடிக்கடி.போதாததுக்கு acidity..இன்னைக்கும் நானா அசிடிட்டியா என்று பார்க்கலாம் என்று எப்படியெல்லாமோ படுத்து உருண்டு பார்த்தேன் ப்ரேயர் சத்தம் கேக்க தான் தெரியுது மணி 4 ஆயிடுச்சு..தொண்டையில் நல்ல காய்ச்ச்ன இரும்பு கம்பிவை விட்ட மாதிரி ஒரு ஃபீலிங் ..இதை எல்லாம் கேட்டு ஒரு த்ரெட் தான் போடனும்னு இருக்கேன்..இதுவும் கர்பகாலத்தில் எல்லோருக்கும் வருவது தானோ என்னவோ..
ஆனால் பகலெல்லாம் எந்த ப்ராப்ளமும் இல்ல ராத்திரி தான் எல்லாமே.செப்டெம்பெர் கடைசியில் டியூ சீக்கிரம் எல்லாம் மாறிடும்னு நம்பிக்கையில் இருக்கேன்.
மகளுக்கு இப்ப சம்மர் வெகேஷன்.இப்போ சில நாள் சமத்து சில நாள் வம்பு இருந்தாலும் முன்ன விட பரவாயில்லை கொஞ்சம் பெரிசாகிட்டாளில்லையா.இங்க வெயில் கொளுத்துதுன்னு சும்மா சொன்னால் பத்தாது கரிந்து விடுவோம்..நான் வெளிய போறதே இல்லை பயந்து.
என் புராணம் பாடி முடிச்சுட்டேன் உமா..உங்கட விஷேஷம் என்னென்ன.ச்சேச்சே வனிதாவா கண்டுக்கமாடாங்க தைரியமா பேசுங்க;-)
கடைசி வரி ரொம்ப எமோஷனலாக்கிடுச்சு என்னை

ஆமாம் உமா உண்மையில் மற்றவர்களை விட நம்மூரில் மருத்துவமனையில் ரொம்ப மனதளவில் தளர்த்தி விடுகிறார்கள்..பேஷன்டா நாம போனால் நாம அவங்க அடிமை போல.
எனக்கொரு மோசமான அனுபவம் நான் 8 மாத கர்பமாக இருக்கும்பொழுது சுடிதார் அணிந்து செக் அப்புக்கு போயிருந்தேன் ஊரில் முதன்முறையாக இங்கிருந்து...இத்தனைக்கும் அதற்கென்றே மெனக்கெட்டு லூசாக மேடெர்னிடி வேர் போல தான் தைத்து போட்டிருந்தேன்.
போனதும் நர்ஸ் திட்ட ஆரம்பித்து விட்டார் இதென்ன சுடிதார் போட்டுகிட்டு சாரீ கட்டிகிட்டு வங்க அடுத்தமுறை இல்லையென்றால் டாக்டர் நல்ல திட்டுவார் சுடிதார் போட்டால் செcக் அப் பன்ன கஷ்டமாம்..நான் முழித்து கொண்டு நின்றேன் சுடிதார் போட்டால் அவங்களுக்கு என்ன அசவுகரியம் சாரீ கட்டினால் அதனால் என்ன சவுகரியம் என்று எனக்கு விளங்கவில்லை.
எனக்கு கட்டி பழக்கமில்லை என்றேன் ஆச்சா போச்சா என்று திட்ட ஆரம்பித்து விட்டார்.அதன் பின் அடுத்த செகப்போடு வேற ஹாஸ்பிடல் மாறி விட்டேன் அங்க ஃப்ராக் போட்டுகிட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க..நம்மூர் பிரசவ வார்ட் நர்சுகள் மற்றும் டாக்டர்கள் சிலர் ஜகஜில்லிகளாக இருக்கிறார்கள் நம்மையும் பயமுருத்தி விடுகிறார்கள்.
மற்றும் அங்கு கண்ட காட்ச்சி இன்றும் வேதனையாக இருக்கிறது..பிரசவ வலியால் உள்ளே அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்காக குடுபம் வெளியே காத்து நிற்கிறது..அங்கு சிறிது நேரத்தில் நர்ஸ் வந்து ரொம்ப சிரமமாக இருக்கு சிசேரியனுக்கு சைன் பன்னி கொடுங்க என்றது தான் அம்மாவோ மாமியாரோ தெரியலை ஒரே கத்த ஆர்ம்பித்து விட்டார் முடியாது என்று...அப்படின்னா பொண்ணும் உங்களுக்கு கிடைக்காது என்று பயமுருத்தி சைன் வாங்கி கொண்டு போனார்கள்..சிறிது நேரத்தில் பெண்குழந்தை பிறந்திருக்கு என்று டாக்டர் வெளியே வர அந்தம்மா போட்ட கூப்பாடு அய்யோ செஞ்சது சிசேரியன் தொலையுதுன்னா பிறந்தது பொண்ணா என்று ஒப்பாரியோ ஒப்பாரி...அங்குள்ளவர்கள் எல்லாம் மனதிற்குள் நல்ல திட்டினார்கள்.
இப்படி இன்னும் ஆட்கள் உண்டு என்று எனக்கு அன்று தான் தெரிந்தது
ஆண் பெண் என்று தீர்மானிப்பது கடவுள் கைய்யில் உள்ளது..அதையும் மீறி குழந்தையின் தாய் தந்தையருக்கு மட்டுமே என்ன குழந்தை என்று ஆசைப்படும் தகுதி உண்டு..ஆனால் பல நல்ல படித்த குடும்பங்களில் கூட சும்மாவே இது பெண் தான் இது ஆண் தான் என்று அனைவரும் தீர்மானமே பன்னி கடைசியில் அந்த பெண்ணுக்கு ஒரு வேளை இது அப்படியில்லா விட்டால் என்ற மன உளைச்சலே வந்துவிடும்.இந்த காலத்திலுமா ஆண் பைத்தியம் பிடித்து அலைவது

ஏன் உங்களுக்கு acidity problem? Antacid எதாச்சும் குடித்து பார்க்கலாமே? ஆனா உங்க கண்டிஷன் காரணமா டாக்டர் கிட்ட கேட்டுத்தான் செய்யணும். ஒரு வேளை ரொம்ப வெய்யில் காரணமா அப்படி இருக்கோ? எனக்கு தெரியலயேம்மா. ஊருக்கு அம்மா கிட்ட போன் பண்ணி கேட்டு பாருங்க. ஏதானும் கை வைத்தியம் சொல்லுவாங்க. வெய்யிலுக்கு குளிர்ச்சியா சாப்பிடனும் போல இருக்கும். ஆனா அதுதான் ஜலதோஷத்துல கொண்டு விட்டுடும். செப்டம்பர்ல due வா? இன்னும் 2 மாசம்தான் இருக்கு!! குட்டி பாப்பா வந்துடும் :)

ரீமா குட்டி நல்லா இருக்கான்னு கேட்டு சந்தோஷமா இருக்கு :) அவளே உங்க குட்டி பாப்பாவை வளர்த்துடுவா கவலைபடாதீங்க :) Girls are quite mature in this aspect.

எனக்கு ஒண்ணும் special விசேஷம்லாம் இல்லப்பா. work is very busy and taxing! பையன் 6th படிக்கறான். அடுத்த வருஷம் high school போகணும். இப்போதான் பிறந்து என் பக்கத்துல படுத்துட்டு விளையாடிட்டு இருந்த மாதிரி இருக்கு :) Time indeed flies!

Keep me posted as to how you're progressing. உடம்பை பார்த்துக்கோங்க. ரீமா குட்டி என் அன்பு முத்தங்கள் :)

அன்புடன்
உமா

மேலும் சில பதிவுகள்