கோதுமை பாதாம் பர்பி

தேதி: July 4, 2009

பரிமாறும் அளவு: 20

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 100 கிராம்.
பாதாம் தூள் - 50
சர்க்கரை - 125 கிராம்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்


 

முதலில் வாணலியில் நெய்யை சிறிது ஊற்றி, கோதுமை மாவை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பின் அதிலேயே பாதாம் தூளை போட்டு இடையிடையே நெய்யை ஊற்றி பச்சை வாசனை போகும்வரை (3 நிமிடங்கள்) நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்.
கிளறிய மாவு நன்றாக வறுபட்டதும் (பார்ப்பதற்கு தயிர் தன்மை வரும்வரை) கிளறி அடுப்பை அணைக்கவும்
அதே நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு சர்க்கரையை போட்டு கிளறி மிதமான தீயில் ஒரு கம்பி பாகு வரும்வரை கொதிக்க விடவும்.
ஒரு கம்பி பாகு வந்ததும் உடனே மாவு கலவையில் கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளற ஓரிரு நிமிடங்களில் வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக ஆரம்பிக்கும்.
அப்போது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.


கோதுமையில் கால்சியம், இரும்பு மற்றும் நார்சத்து உள்ளது. பாதாமிலும் புரோட்டீன், கால்சியம், நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் பல சத்துக்கள் உள்ளது. இது நம் கெட்ட கொழுப்பு சத்தை(LDL) குறைத்து நல்ல கொழுப்பு சத்தை (HDL) அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆகவே நாமும் சாப்பிடுவோம் நாளொரு பாதாம்.
இந்த அளவுக்கு கிட்டதட்ட 20 துண்டுகள் போடலாம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் செய்தால் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் எளிதாக செய்து நிறைய பேருக்கு கொடுக்கலாம். இதில் பாகு பதம், கொட்டும் பக்குவம் மட்டும் சரியாக பார்த்து கொண்டால் ஸ அருமையான சாப்டான பர்பி ரெடி பத்தே நிமிடங்களில்.

மேலும் சில குறிப்புகள்