மசால் பொரி

தேதி: July 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1) முட்டைப் பொரி - 200 கிராம்
2) வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
3) பொட்டுக்கடலை - 25 கிராம்
4) மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்
5) மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
6) மசாலாத் தூள் - 1/2 ஸ்பூன்
7) பெருங்காயத் தூள் - சிறிதளவு
8) கடுகு - 1 ஸ்பூன்
9) கறிவேப்பிலை - சிறிதளவு
10) உப்பு - தேவைக்கேற்ப
11) தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும்.
அதோடு வேர்கடலையும், பொட்டுக்கடலையையும் போட்டு சிறிது வறுக்கவும்.
பின் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மசாலாத் தூள், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை பொட்டு நன்கு கலக்கி அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஒரு மூடியுள்ள டப்பாவில் பொரி, தேவைகேற்ப உப்பு போடவும்.
இதனுடன் அடுப்பிலிருந்து இறக்கிய கலவையையும் சேர்த்து கொட்டி அந்த டப்பாவை நன்கு குலுக்கவும்.
இவ்வாறாக மூடி வைத்திருந்தால் ஒரு வாரத்திற்கு கரகரப்பு குறையாமல் இருக்கும்.
மேலும் சாப்பிட உபயோகிக்கும் போது பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, துறுவிய கேரட், சிறிது மசாலாத் தூள் சேர்த்து சாப்பிட்டால் ருசியாகவும் சத்தாகவும் இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்