ஈசி க்ரீம் கேரமெல்

தேதி: July 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

 

1) பால் - 2 கப்
2) முட்டை - 2
3) சர்க்கரை - 1/2 கப்
4) வென்னிலா எசன்ஸ் - சில துளிகள்


 

அடி கணமான பாத்திரத்தில் 1/4 கப் சர்க்கரையும், 1 மேஜைக் கரண்டி தண்ணீரும் கலந்து குறைந்த தீயில் வைத்து அடுப்பில் வைக்கவும்.
பொன்னிறமான கேரமெல் வடிவம் வரும் வரை கலக்கிக் கொண்டிருக்கவும்.
இப்பொது மீதமுள்ள சர்க்கரை, முட்டை, வென்னிலா எசன்ஸ் அனைத்தையும் ஒரு பத்திரத்தில் கொட்டி நன்றாக அடிக்கவும்.
காய்ச்சி ஆறவைத்த குளிர்ந்த பாலில், அடித்த கலவையை ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
இதை அந்த கேரமெல் கலவையின் மேல் ஊற்றவும்.
இப்பொது மூடி வைத்து குக்கரில் வைத்து 1/2 மணி நேரம் வேக விடவும்.
க்ரீம் கேரமெல் தயார். இதை ஃப்ரிட்ஜில் வைத்து குளிந்தவுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்