கோழிமுட்டைக்கு தோடு இல்லை...ஏன்...? (வீட்டுவளர்ப்பு உயிர்கள்)

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.
எங்கள் வீட்டில் கோழி வளர்க்கிறோம்.4மாதமாக கோழி தோடு இல்லாத முட்டையிடுகிறது.கால்நடை மருத்துவரிடம் காண்பித்து ஊசி போட்டோம்.அதற்கு அடுத்தமாதம் 5 முட்டை தோட்டுடன் போட்டது.இப்போது மறுபடியும் தோடில்லாதமுட்டை இடுகிறது.கால்சியம் சத்துக்குறைவாம்.அதனால் தான் இப்படியாம்.எனவே யாருக்கவது இதனைப்பற்றி தெறிந்தவர்கள் இதற்குரிய மருந்தை சொல்லவும்.

எந்த இழையில் கேட்கணுமென்று எனக்குத்தெரியாததால் இதில் கேட்டுவிட்டேன்.
இதனைப்பற்றி கேட்கலாமா...கூடாதா...என்று ஒரு குழப்பத்தில் இருந்தேன்.கேட்டுவிடலாம் என்று கேட்கின்றேன்.
தோட்டம் வளர்ப்பதுப்பற்றியெல்லாம் இதில் இருக்கிறது.அதான் வீட்டுவளர்ப்பு உயிர்களைப்பற்றிய சந்தேகத்தையும் கேக்கலாமென்று கேட்டுள்ளேன்.

சரியென்றால் இந்த இழையை வீட்டுவளர்ப்பு உயிர்களைப்பற்றிய சந்தேகம் கேட்க வைத்துக்கொள்ளலாம்.

pls

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

மேலும் சில பதிவுகள்