ஆலு கோபி மட்டர் மசாலா

தேதி: July 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

அறுசுவை உறுப்பினரான <b> திருமதி. தனிஷா </b> அவர்கள் நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

 

வேகவைத்த உருளை - 2 (பெரியது)
காலிப்ளவர் - ஒரு கப்
பச்சைபட்டாணி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (சிறியது)
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
பட்டர் அல்லது நெய் - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
தாளிக்க:
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பட்டை - ஒரு சின்ன துண்டு
பிரிஞ்சி இலை - ஒன்று
பொடிவகைகள்:
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். காலிப்ளவரை வெந்நீரில் போட்டு எடுத்து சிறிய பூக்களாக உதிர்த்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
ப்ரைபேனில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் காளிப்ளவரை போட்டு அரை தேக்கரண்டி மிளகாய்தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும். ப்ரவுன் நிறமானதும் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே பேனில் மீண்டும் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அரை தேக்கரண்டி மிளகாய்தூள், உப்பு போட்டு நல்ல பிரட்டி விடவும். கிழங்கு கொஞ்சம் முறுகலானவுடன் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
பேனில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பச்சைபட்டாணியை போட்டு 2 நிமிஷம் நன்கு பிரட்டி விடவும். விரும்பினால் அனைத்து காய்கறிகளையும் நிறைய எண்ணெய் ஊற்றி டீப் ப்ரை செய்தும் எடுத்து கொள்ளலாம்.
ப்ரை பேனில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சீரகம், பிரிஞ்சிஇலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும். பின்பு அதில் வெங்காயம் சேர்த்து ப்ரவுன் நிறம் வரும் வரை வதக்கவும்.
பின்பு தக்காளி சேர்த்து வதக்கி விட்டு பொடிவகைகள் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கும் வரை கிளறவும்.
தாளித்தவை நன்கு வதங்கியதும் பொரித்து வைத்த காய்கறிகளை சேர்த்து 3 நிமிடம் நன்றாக கிளறி விடவும்.
காய்கறியில் மசாலா சேர்ந்தவுடன் மல்லி இலையை தூவி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி மூடிபோட்டு 5 நிமிடம் தீயை குறைத்து வைக்கவும். தண்ணீர் வற்றி கிரேவி பதம் வந்ததும் இறக்கவும். மேலே பட்டர் போட்டு பரிமாறலாம்.
சுவையான ஆலு கோபி மட்டர் மசாலா தயார். இதை சப்பாத்தி, நாண், ப்ரைடு ரைஸ், வெஜ் பிரியாணிவுடன் சாப்பிட நன்றாக இருக்கும். காய் வகைகளை சிறியதாக நறுக்கி சேர்த்தால் ப்ரெட் சாண்ட்விச் செய்யலாம். தண்ணீரை குறைத்து ஊற்றி நல்ல திக்காக வைத்தால் ஸ்டஃப்டு சப்பாத்தி செய்யலாம். நார்மலாக இதில் அனைத்து காய்கறிகளையும் எண்ணெயில் பொரித்துதான் எடுப்பார்கள். இது குறைவான எண்ணெயில் செய்யும் முறை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.கண்டிப்பாக இந்தவாரம் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

சவுதி செல்வி

சவுதி செல்வி

நல்ல குறிப்பு,
பாராட்டுக்கள் .....தனிஷா.

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

என்ன தம்பி ,அஃப்ரா எல்லாரும் நலமா?ஹைத்ராபாத் சிக்கன் பிரியாணிக்கு அப்புறம் வேறு ஏதும் குறிப்பு கொடுத்தாயா?என் கண்ணில் படாமல் போயிருக்கக்கூடாதேன்னு கேட்டேன்.தனியாக வதக்கி வதக்கி காய்களை சேர்ப்பது புது முறையாக இருக்கு.அசத்தல்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் தனிஷா நலமாப்பா? ரொம்ப நாள் கழிச்சு குறிப்பு குடுகுரிங்கன்னு நினைக்கிரேன். இல்லைனா என்னை திட்டாதப்பா.....

ஒருவேலை ஊருக்கு போயி இருந்ததனால நான் பாக்கலையான்னு தெரியலை.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் தனிஷா
நல்லா புது விதமான ரேசப்பி குடுத்திருக்கிரிங்கள் குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

தனிஷா அழகாகச் செய்திருக்கிறீங்கள். இதுதான் முதல் குறிப்போ? நன்றாக இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தனிஷா நலமா?

ரொம்ப அருமை அதுவும் காலிபிளவர்,உருளை வதக்கி சேர்த்தால் சுவை அபாரமாக இருக்கும், வதக்கிய காலிபிளவரை சும்மா சாப்பிட்டாலே நல்ல இருக்கும்.

கொடுங்க இதுபோல் கலக்கலான குறீப்புகளை.

Jaleelakamal

அப்ரா குட்டியும்,நீங்களும் நலமா?சூப்பரான குறிப்பு,அதுவும் அனைத்தையும் தனிதனியா வதக்கி செய்வது நல்லாயிருக்கு.

செல்வி, இளவரசி நன்றிப்பா.

ஆசியாக்கா வீட்டில் அனைவரும் நலம். அப்ராவுக்குத்தான் பீவரா இருக்கு. அங்கு அனைவரும் நலமா. பிரியாணிக்கு பிறகு இந்த குறீப்புதான். என் டிஜிட்டல் கேமராவை ஊரில் வச்சுட்டு வந்துட்டேன். ஹேண்டிகேமில் ரொம்ப க்ளீயரா வர மாட்டேங்குது. ஒரு மாதிரி மஞ்சளா இருக்கு. அதனால்தான் அனுப்புவதில்லை. இந்த முறை எடுத்துட்டு வரனும்.

அதிரா ரொம்ப நன்றி. நான் ஏற்கனவே ஹைத்ரபாத் பிரியாணி கொடுத்திருக்கேன்.

சுகா நன்றிப்பா உங்க பாராட்டுக்கு.

ப்ரபா எப்படி இருக்கீங்க. உங்களிடம் பேசி ரொம்ப நாள் ஆச்சு. நானும் ரொம்ப நாள் கழிச்சிதான் இந்த குறிப்ப கொடுத்தேன்.

ஜலிலாக்கா உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. உங்கள மாதிரி எல்லாம் கலக்க முடியாது. ரொம்ப நன்றியக்கா உங்க அன்புக்கு.

மேனு எப்படி இருக்கீங்க. ஷிவானி குட்டி நலமா? அப்ராவுக்கு சளி, பீவர் அதனால் இங்கு வந்து ஒரு வாரம் ஆச்சு. நன்றீ மேனு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

Hi Danisha,

I ate this recipe only at restaurants. I just want do this at home. Hope it comes well. And also please tell how much we need all the things if we are doing this recipe for a party around 30 people.

Thanks

Megala Sampath

எண்ணமே செயலுக்கு வித்து.