எதையும் சாப்ட பிடிக்கலங்க

எனக்கு இது 3வது மாதம் ங்க... எதயும் சாப்ட பிடிக்கல... எதாச்சும் வித்யாசமா சாப்டா நல்லாயிருக்கும்னு தோணுது... ஆனா என்ன செய்ரதுனு தெரியல ங்க... யாராச்சும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்களேன் தோழிகளே...

yaarachum enakku reply pannunga pa... :( eda saptaalum vomit varuthu:(

குட்மார்னிங் மதுலிகா எப்படி இருக்கீங்க? பொதுவாக கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் நீங்கள் கூறியுள்ள சிம்டம்ஸ் பலருக்கும் இருக்கும் ஆனாலும் போகப் போக நல்ல காரசாரமான உணவுகளோ அல்லது புளிபான உணவு வகைகளோ கட்டாயம் பிடிக்கும். ஆகவே இப்போதைக்கு வயிற்றை காலி போடாமல் சாதாரணமாக உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை லிஸ்ட் போட்டுக் கொண்டு அதை செய்து சாப்பிடுங்க.இந்த நேரத்தில் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் எதையாவது சாப்பிட வேண்டும் அப்போது தான் நல்லா தொடர்ந்து பசியெடுக்கும் இல்லாவிடில் வயிறு மந்தமாகி பிறகு பிரச்சனையில் கொண்டுவிட்டுவிடும். பயங்காட்டுரேன்னு நினைக்காதீங்க கர்பிணிகளுக்கு உணவு மிக மிக முக்கியம் அதனால் தான், மேலும் நம்ம தளத்தில் குறிப்புகளுக்கா பஞ்சம்!! பார்த்து நல்லா செய்து சாப்பிடுங்க. உங்க ஊரில் புளிப்பு மிட்டாய் கிடைக்குமா, அதை வாயில் அடக்கிக் கொண்டால் கூட சிறிது நேரத்தில் பசியெடுக்கும்.நன்றி மீண்டும் சந்திப்போம்.

புளி குழம்பு,முட்டை சாதம்(protein rich),முருங்கை கீரை சூப்(hemoglobin rich),சாப்பிடுங்கள்.குழந்தை ஆரோக்கியமாக பிறக்கனும் என்று மனதில் பதித்து கொண்டால் போதும்,நீங்கள் தானாகவே சத்தான உணவை தேடி தேடி சாப்பிட்டு விடுவீர்கள்.பிடிக்க வில்லை என்று நினைக்காதீர்கள். கஸ்டம் தான். ஆனால் முயற்சி செய்யுங்கள்.ஒரே சமயத்தில் வயிறு நிறைய சாப்பிடாதீர்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முரை வித்தியாசமாக சாப்பிடுங்கள்.
Be Happy

Be Happy

நன்றிகள் தோழி மனோஹரி ...மற்றும் காந்திசீதா... aana nan sapdarean pa... vomit vanduduthu... adaan vithyaasama ethachum recipe solveenga nu nenachi keaten... :)

மேலும் சில பதிவுகள்