2 வயது குழந்தையின் உணவு

என் மகளுக்கு 2 வயது ஆகிறது.சரியாக சாப்பிட மாட்டாள்.ஓல்லியாக இருக்கிறாள்.குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு வகைகள் கூறவும்.

சந்தனா....வீட்டுக்கு வீடு வாசப்படி தாங்க.....குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்காத சரித்திரமே இல்லை.....இங்கு அறுசுவையில் தேடி பாருங்கள் பாதிக்கு மேல் இதனை பத்திய விவாதம் தான் இருக்கும். அறுசுவையில் ஜலீலா மேடம், செல்வி மேடம், மனோ மேடம் குறுப்புகளை தேடி பாருங்க.....நிறைய கிட்ஸ் ரேசிபெஸ் கொடுத்து இருகாங்க...

எப்போவுமே ஒரே உணவே குழந்தைக்கு கொடுக்காதீங்க....வித்தியாசமா ட்ரை பண்ணுங்க....உதாரணத்துக்கு தினம் கொடுக்கும் இட்லியே மாற்றி மாவில் காரட் அல்லது பீன்ஸ் சேர்த்து ஆரஞ்சு இட்லி பச்சை இட்லி என்று கொடுங்க.....தோசை சப்பாத்தி இவற்றை வேறு வேறு ஷேப்பில் போட்டு கொடுங்க....

குழந்தைக்கு ஜூஸ், cookies / biscuits தவிர்திடுங்க.....நிறைய தண்ணீர் கொடுங்க....பழங்கள் காய்கறிகள் கொடுங்க.....சாதம் அதிகம் சாப்பிடவில்லை என்றாலும் பரவாயில்லை.

குழந்தை ஒல்லியாக இருப்பதால் ஒரு பிரச்னையும் இல்லை.....அவர்கள் நன்றாக விளையாடுகிறார்களா அவர்கள் என்று தான் பார்க்க வேண்டும் அப்படி இல்லாமல் சோர்வாக இருந்தால் பிறகு டாக்டரிடம் செல்லுங்கள்.....அவர்களின் வளர்ச்சி பற்றி டாக்டர் எதாவது குறை கூறினால் தான் கவலை படனும். மேலும் குழந்தைக்கு உணவை கட்டாய படுத்த கூடாது. போக்கில் விட்டு பிடிங்கள்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்க நிலைமைதான் என்னுடையதும். எம்பொண்ணு வீட்டில் சுத்தமா சாப்பிட மாட்டா. ஒருவாய் சாதம் வாங்குவா அடுத்து துப்ப தொடங்கிடுவா. மிஸஸ் மூர்த்தி சொல்வது கரைக்ட். கொஞ்சம் வித்தியாசமா கொடுத்தா சாப்பிடுவாங்க.தோசை மாவை ஸ்பூனில் எடுத்து சின்ன சின்னதா ஊத்தி, சுத்தி நல்ல ஆயில் விடுங்க மினி தோசைனு கொடுத்தா சாப்பிடும். எம்பொண்ணுக்கு குட்டி தோசைனு சொன்னா போதும் ஏதோ என் திருப்த்திக்கு எடுத்து சாப்பிடுவா. எப்போ எது பிடிக்கும்னே தெரியாது. திடீர்னு ஒரு ஃபுட் ஐயிட்டம் விரும்புவா 2 நாள் கழிச்சி அத கொடுத்தா திரும்பியே பார்க்க மாட்டா. எனக்கும் மண்டை காயும். எங்கேயாவது போனா அங்க யாராவது ஊட்டி விட்டா நாலு வாய் வாங்குவா. வீட்டில் இருந்தால் டென்ஷந்தான் எனக்கு

என்ன பண்ண எம்பொண்ணுக்கும் இந்த செப்டம்பர் வந்தா 2 வயசு ஆக போகுது. ஒல்லியாகத்தான் இருக்கா. ஊரில் இருந்து வெப்கேமில் பார்க்கும் உறவினருக்கு பதில் சொல்ல முடியல. என்ன இப்படி இருக்கா? இவ்ளோ ஒல்லியா. என்ன பிள்ளை வளர்க்கிற நீனு ஒரே பேச்சுதான். எனக்கு மனசு ரொம்ப சங்கடமாயிடும். என்ன பண்ண கொஞ்சம் வளரட்டும் என்று விட்டு விட்டேன். ஒரே மாதிரி ஃபுட்ட திரும்ப திரும்ப கொடுக்காதீங்க. இப்போ 2 நாளா மேகி நூடுல்ஸ் கொஞ்சம் சாப்பிட்டா. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க சந்தனா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நூடுல்ஸ் குழந்தைக்கு அதிகம் கொடுக்க வேண்டாம்.....ஜீரணம் ஆகா ரொம்ப கஷ்டம்...
நூடுல்ஸ் அவர்களுக்கு செரிமானம் ஆக 2-3 நாட்கள் ஆகும் என்று எங்கோ படித்த ஞாபகம்.அதுவும் இல்லாமல் அதில் உள்ள "taste maker" அவர்களுக்கு நல்லதல்ல.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தனிஷா அக்கா இதே பாடு தான் எங்க வீட்டிலும். மானஸா கூட செப் வந்தா 2 வயசு. மக்கி அடிக்கடி கொடுக்கக்கூடாதுனு எல்லரும் சொல்ராங்க. என்னொட ஒரு பதிவுக்கு தளிகா கூட அதை தான் சொன்னாங்க! ஆனா மானு அதை விரும்பி சாபிட்டா. இப்ப அதை நிறுத்திடேன். எப்பயாவது தான் கொடுக்கிறேன்.

நன்றி

சுபா

20 மாத குழந்தைக்கு (honey bunches of oats with almonds) cereal கொடுக்கலாமா.
Be positive.

Be positive.

நான் எனது 17 மாத குழந்தைக்கு ஹனி பன்ச் சீரியல்ஸ் தான் கொடுக்கிறேன். அவர்களால் பாதாம் மெல்ல முடியாது அப்படியே சேமிக்காமல் மறு நாள் பூபியில் அப்படியே வரும். அதனால் பாதாமை தனியே எடுத்துட்டு வெறும் சீரியல்ஸ் மட்டும் கொடுக்கவும். இவை இல்லாமல் வெவேறு பிலவோரிலும் சீரியல்ஸ் கிடைக்கிறது அதையும் ட்ரை பண்ணவும்.

Ms. Moorthy
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கட்டாயப்படுத்தாமல் இருந்தாலே அதிகம் சாப்பிடாவிட்டாலும் சாப்பாடு மேல் வெறுப்பு வராமல் இருக்கும்
ஆமாம் நூடில்ஸ் குழந்தைகளுக்கு நல்லதே அல்ல..அதை ஒருக்க கொடுத்தா தினசரி கேப்பாங்க.
அதிலுள்ள பொடியும் நல்லதல்ல..செரிக்கவும் தினங்களாகும் எஙிறார்கள்..மட்டுமில்லாமல் எந்த சத்தும் இல்லை சும்மா வயிறு நிரம்பும் அவ்வளவே
அதுக்கு 1 ஸ்பூன் சத்தா எதுவாவது சப்பிட்டால் கூட நல்லது.சப்பாத்தியை நல்ல பாலால் பிசைந்து சாப்ஃடாக சுட்டு நெய் தடவி சரக்கரை தூவி சுருட்டி சேன்ட்விச் போல கொடுத்து பாருங்க...சில பிள்ளைகள் சிறு வயதிலேயே நல்ல கடித்து சபபிட பழகும் சில பிள்ளைகள் லேட்டா இருக்கும்.
என் நிலமை வேற வீட்டில் என்னிடம் மட்டும் வாலாட்டாமல் ஓரளவு ஒரு 10 நிமிஷத்துக்கு சாப்பிடுவா அதுவே வெளிய போனா ஒரு வாய் சாப்பிட மாட்டா..எனக்கு ஒரே கவலையா இருக்கும்..
எங்காவது போகலாம் என்றால் இதுவே ஒரு பயமாகிவிட்டது..சரி சாப்பிடலேன்னா சும்மா இருந்தா கூட பரவாயில்லை உள்ளுக்குள் பசி இருக்கும் அதனால் நொய் நொய் என்று எதையாவது கேட்டு அழுவாள் தவிற ஒரு வாய் உள்ள போகாது.
தற்பொழுது மெல்ல நல்ல நல்ல கதைகள் சொல்லி வெளியே போனாலும் சாப்பிடுபடி பழக்கி கொண்டிருக்கிறேன்..நான் செய்த ஒரு தப்பு யாரும் செய்யாதீங்க.
வெளிய போறதா இருந்தா குழந்தைக்கு வீட்டில் வயிற்றை நிரப்பி விட்டு போவேன் சின்னதாக இருக்கப்ப...அதனால் போன இடத்தில் அதுக்கு வயிறு ஃபுல் சாப்பிடாது...அது அப்படியே வெளியே சாப்பிடாமல் பழகிவிட்டது.
குழிப்பணியாரம் நெய் ஊற்றி சுட்டு கொடுத்து பாருங்க.
இடியப்பம் தெங்காய் பால் சரக்கரை கலந்தோ அல்லது குழம்பு சேர்த்தோ கொடுத்து பாருங்க.
புட்டு என்றால் மிக்சியில் ஒரு திருப்பு திருப்பி ரவை போல பொடித்து நெய் சரக்கரை விட்டு கொடுத்து பாருங்க.
எனக்கு என்றாவது மகள் வயிறு நிறைய சாப்பிட்டால் அன்னைக்கு தாங்காது சந்தோஷம்..
சீரியல்ஸில் பல வகை வருகிறதே அதை கொடுத்தால் அவசரத்துக்கு உதவும்..பிள்ளைகளுக்கு வெரைட்டி தான் முக்கியம்...தினசரி புதியதாய் செய்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்..
நல்ல சாப்பிடும் பிள்ளைகளுக்கு ப்ரச்சனை இல்லை.
குழந்தைகளை முடிந்தளவு தானாக சாப்பிட சிறு வயதிலேயே பழக்க வேண்டும்..அப்ப தான் ஓரளவு இன்டெரெஸ்ட் வரும்.

நாங்கள் துபாயில் வசித்து வருகிறோம். தற்போது விடுமுறைக்கு 2 குழந்தைகளுடன்(8 வயது மகள் மற்றும் ஒன்றே முக்கால் வயது மகன்) சிதம்பரம் வந்துள்ளேன். எனது மகனுக்கு இங்கு வந்த பிறகு பால் ஒற்றுக்கொள்ளாமல் லூஸ் மோஷன் ஆகிறது. நீங்கள் யாரும் இது போல் அனுபவித்து உள்ளீர்களா? எப்படி சமாளித்தீர்கள்?

Love is God.
அன்பே சிவம்.

Love is God.
அன்பே சிவம்.

ஆஹா ஷங்கரி
உங்களுக்குமா...என் மகள் நல்லாவே அனுபவித்திருக்கிறாள்..
அப்ப டாக்டர் எனக்கு சொன்ன அட்வைஸ்..சின்ன பிள்ளைகளை ஊருக்கு கொண்டு போனதும் டக்குன்னு அந்த ஊர் பாலை கொடுத்துடறோம் அதான் காரணமாம்..இங்க என்ன கொடுத்தோமோ பால் பொடி அல்லது லாங் லைஃப் மில்க் அதை ஊருக்கு கொண்டு போய் நம்ப ஊர் பாலுடன் கொஞ்சம் கொஞ்சமா கலந்து 1 வாரம் எடுத்து தான் முழுக்க மாற்றனுமாம்.
ஒன்னும் பயப்பட வேண்டாம் ஒருக்க லூஸ் மோஷன் வாந்தி எல்லாம் வரும்..அப்ப சுத்தமா பால் என்ற அம்சமே கண்ணால் காட்ட கூடாது..வெறும் தண்ணியும் அரிசி கஞ்சியும் சாப்பாடும் அதிலும் தயிர்,மோர் சேத்து தான் கொடுக்கனும்..ஓரளவு சரியானதும் நம்ப ஊர் பால் நல்ல தண்ணீர் கலந்து லேசா கொடுத்து பாக்கனும் ...மெல்ல மெல்ல திக்கா கொடுத்து பார்த்தால் மாறிவிடும்..
பால் மட்டுமின்று நம்ப ஊர் தின்பண்டங்களாலும் அப்படி வருமாம்

மேலும் சில பதிவுகள்