தக்காளி தயிர்ப்பச்சடி

தேதி: July 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

1) தக்காளி - 3
2) பச்சை மிளகாய் - 3
3) பெரிய வெங்காயம் - 1
4) கொத்தமல்லி - சிறிதளவு
5) உப்பு - தேவைகேற்ப
6) எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
7) கடுகு - 1 டிஸ்பூன்


 

தக்காளியை 15 நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு வைக்கவும்.
பின் அதன் தோலை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை பொடி பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் நறுக்கவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு தாளிக்கவும்.
அடுத்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளி சேர்த்து ஈரம் வற்றும் வரை வதக்கவும்.
ஆறவைத்து கொத்தமல்லியை தூவி உப்பு சேர்க்கவும்.
சாப்பிடும்முன் தயிரை சேர்த்து நன்கு கலக்கி பின் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சுபா.நலமாக இருக்கீங்களா. உங்களோட இந்த தக்காளிதயிர்பச்சடி நன்றாக இருந்தது.கூடவே காலிப்ளவர்குருமாவும் சூப்பர்.நன்றி.

ஹாய் அம்முலு அக்கா, மிக்க நன்றி உங்கள் பாரட்டுக்கு!!

நான் நலமே!! நீங்களும் நலமன்றோ??

நேற்று காளான் குழம்புக்கு தக்காளி தயிர் பச்சடி சூப்பர். மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹாய் ஹயிஸ் அண்ணா, செய்து பார்த்து கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி