உல்லன் ஃப்ளவர் வேஸ்

தேதி: July 13, 2009

2
Average: 2 (1 vote)

இந்த அழகிய உல்லன் ஃப்ளவர் வேஸ் செய்முறையை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. தனலெஷ்மி அவர்கள். இவர் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

 

மேட் - 1
உல்லன் நூல் கண்டு - 2 (ஊதா மற்றும் மஞ்சள் நிறங்கள்)
ஊசி
கத்திரிக்கோல்

 

விரும்பிய நிறத்தில் உல்லன் நூல் வாங்கிக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மேட்டின் அகலமான பகுதியில் முதல் 10 கட்டங்கள் விட்டு 11வது கட்டத்தில் கத்திரிக்கோலை வைத்து நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதேப் போல் இன்னும் இரண்டு துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அகலத்தில் மேட் துண்டுகளை நறுக்கியப் பிறகு உயரத்திலும் இதேப் போல் 10 கட்டங்கள் விட்டு 11 வது கட்டத்தில் வைத்து நறுக்கிக் எடுத்துக் கொள்ளவும்.
அகலத்தில் நறுக்கிய மூன்று மேட் துண்டுகளில் 10 கட்டங்கள் விட்டு நறுக்கிக் கொள்ளவும். ஒவ்வொரு மேட் துண்டுகளிலும் 6 சிறு துண்டுகள் என்ற கணக்கில் மொத்தம் (6x3) 18 துண்டுகள் கிடைக்கும். உயரத்தில் நறுக்கி வைத்திருக்கும் மேட் துண்டுகளில் இதேப் போன்று 10 கட்டங்கள் விட்டு 5 சிறு துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஊசியில் ஊதா நிற உல்லன் நூலைக் இரண்டாக கோர்த்து அடியில் முடிச்சு போட்டுக் கொள்ளவும். நறுக்கி வைத்திருக்கும் ஏதாவது ஒரு சிறு மேட் துண்டை எடுத்து அதன் ஒரு முனையில் மேல் வழியாக ஊசியை விட்டு மீண்டும் ஊசியை நூலின் முடிச்சு போட்ட இரண்டு நூலுக்கும் இடையில் விட்டால் ஒரு முடிச்சு விழும்.
பிறகு முடிச்சியை அடிபக்கம் திருப்பி விட்டு அடுத்து ஊசியை பக்கத்து ஓட்டையில் விட்டு நூலை ஊசியை சுற்றி போட்டு அதன் வழியாக ஊசியை இழுக்கவும்.
இதேப் போல் நான்கு ஒரங்களையும் சுற்றி பின்னிக் கொண்டே வரவும். ஒவ்வொரு மூலையில் வரும்போது இரண்டு முறை போட வேண்டும். (அப்போது தான் அந்த மூலைப்பகுதி திரும்பும்). கடைசியில் ஆரம்பித்த இடம் வந்ததும் இதே போல் இரண்டு முறை போட்டு ஊசியில் நூலை சுற்றி இழுத்து முடிச்சு போட்டு நூலை வெட்டி விடவும்.
ஊசியில் மஞ்சள் நிற நூலைக் இரண்டாக கோர்த்துக் கொள்ளவும். பின்னி வைத்திருக்கும் மேட்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு அதன் வலது ஓரத்திலிருந்து ஆரம்பிக்கவும். வலது ஓரத்தின் மூலையிலிருந்து முதல் இரண்டு கட்டங்கள் விட்டு விடவும். மூன்றாவது கட்டத்தில் அடிவழியாக நூலை விடவும். மீண்டும் நூலை அதே எதிர்திசையாக இழுத்து முதல் கட்டத்தில் மேல் வழியாக விடவும்.
முதல் கட்டத்திற்கும் அருகில் உள்ள ஓட்டையின் அடிவழியாக நூலை விட்டு இழுக்கவும். அந்த நூலை முதல் ஓட்டையின் நேர் எதிராக உள்ள அதே மூன்றாவது ஓட்டையில் மீண்டும் மேல் வழியாக விடவும்.
பிறகு அடிவழியாக கோர்த்த இரண்டு ஓட்டைக்கும் பக்கத்தில் உள்ள மூன்றாவது ஓட்டையில் விட்டு மீண்டும் மேல் வழியாக முதல் ஓட்டைக்கு நேர் எதிராக உள்ள (மேல் நோக்கி) மூன்றாவது ஓட்டையில் விட்டு இழுக்கவும். அடுத்து அடிவழியாக முதன் முதலில் கோர்த்த ஓட்டைக்கும் வலது புறத்தில் உள்ள ஓட்டையில் விடவும்.
அதன் பிறகு அங்கிருந்து முதல் ஓட்டைக்கு நேர் எதிராக உள்ள மூன்றாவது ஓட்டையில் விட்டு இழுக்கவும். மீண்டும் அடிவழியாக வலது புறத்தில் உள்ள மூன்றாவது ஓட்டையில் விட்டு மேல் வழியாக எடுத்து மீண்டும் முதல் ஓட்டைக்கு எதிராக உள்ள மூன்றாவது ஓட்டையில் விடவும். பூக்கள் 3 x 3 ஒட்டைக்குள் வரும்படி பிண்ணிக் கொள்ளவும்.
இப்பொழுது அடிவழியாக மூன்றாவது ஓட்டையிலிருந்து குறுக்காக ஒரு ஓட்டையை விட்டு விட்டு இரண்டாவது ஓட்டையில்(அதாவது குறுக்காக ஐந்தாவது ஓட்டை) ஊசியை விட்டு அங்கிருந்து ஆரம்பித்த மூன்றாவது ஓட்டையில் விடவும். பார்க்க அந்த பூவின் காம்புப் போல் இருக்கும்.
இதைப் போல் இப்போது போட்ட அந்த பூவிற்கு எதிர் திசையில் மற்றொரு முனையில் முதல் முனையிலிருந்து இப்போது போட்டது போலவே போடவும். காம்பு வரை போட்டு முடிந்ததும் அடியில் ஊசியில் நூலை சுற்றி முடிச்சு போட்டு நூலை வெட்டி விடவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்