கூல்ட்ரிங்ஸ்,ஐஸ்கிரீம்‍ கடை பெஞ்சு-அரட்டை 83

தோழிகளே! அரட்டையை இங்கே தொடரலாம் வாங்க!!!

என்ன தோழிகளே! ஒரு நாள் தொடங்கினேன்,ஆனால் இதுவே என் வேலையாகி போய்விட்டதே!! அடுத்த மாதம் நானும் லீவெடுக்க போகிறேன்!!!

வாங்க வந்து அரட்டையை இங்கே தொடருங்க...

எல்லோருக்கும் குட் மார்னிங், மற்றும் ஹாய் ஹாய் ஹாய்... சரி இன்னும் கொஞ்ச நேரத்திற்கு பிறகு நான் வந்து அரட்டையடிக்கிறேன்.

அன்புடன்
உமா.

//என்ன தோழிகளே! ஒரு நாள் தொடங்கினேன்,ஆனால் இதுவே என் வேலையாகி போய்விட்டதே!!//

உமா, உங்களை யாரோ பிரம்பெடுத்துக் கொண்டு வந்து "அறுசுவை"-யில் பதிவு போடச் சொல்லி மிரட்டுகிற மாதிரி அலுத்துக்கறீங்க? [ செல்ல அலுப்புதான்..,இருந்தாலும் அடிக்கடி பார்க்க போர் அடிக்குதே.. :)]

நீங்களே ஆர்வமா வந்து எழுதறீங்க..ஆனா ஒரொரு இடத்திலும் இப்படி எடக்கு-முடக்கா ஏதாவது சொல்லிட்டே இருக்கீங்களே,எப்படி..எப்படி..எப்படி?

எப்பவும் எனக்கு நேரமில்லை,நேரமில்லைன்னு சொல்லிக் கொண்டே, எல்லா இழைகளிலும் பதிவு போடும் உமாவின் சேவை தொடர்க!! :) :)

பி.கு. டென்ஷன் ஆக வேண்டாம் ஃப்ரெண்ட்..ஏதோ கேக்கணும்னு தோணுச்சு...உங்க காமெடி த்ரெட்-ஐ பார்த்த தைரியத்தில கேட்டுட்டேன்..ஹஹ்,ஹஹ்,ஹாஆ!!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

கண்பட்டால் சுற்றிப்போடுவது என்பார்களே அது எப்படி செய்வது சொல்வீர்களா?
கேலியாக எடுக்காமல் கொஞ்சம் சொல்லி உதவுங்களேன்.

என்ன உமா
இதெல்லாம் வழக்கமாக நடக்கற்துதானே.பெரியவங்க ஆரம்பிச்சு சின்னவங்க follow பன்றது.
அன்புடன்
கலா

Kalai

முதல்தடவ பேசுறேன் எனக்கு தெரிஞ்சத சொல்றேன்...
1. நீங்க சொன்ன மாதிரி கல் உப்பு+வரமிளகாய் எடுத்து சுத்து அடுப்புலயும் போடலாம்(கனடாவுல முடியாது) தெருவுலயும் போடலாம்(முச்சந்தில)..அப்படினா 3தெரு சந்திக்கும் இடமாம்..
2.சூடம் எடுத்து(கொளுத்தாமல்) தலைல 3சுத்து சுத்தி வாசல்ல போய் எரியவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டுகுள்ள வந்து கதவ பூட்டிறனுமாம்..திரும்ப வெளிய போக கூடாது..அதான் நைட் தூங்கும்போது பண்ண சொல்லுவாங்க..
3.முச்சந்தில 3எடத்துல மண் எடுத்து தலைல 3சுத்து சுத்தி திரும்பவும் ஏதாவது முச்சந்தில போடனுமாம்..

இது எல்லாம் என் பையன் சின்னதா இருக்கும்போது நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல கேட்க்காமல் எங்கம்மா பண்ணுவாங்க...இதுல எனக்கு நம்பிக்கை ஆர்வம் 2ம் கிடையாது, ஆனால் அடுத்தவங்க நம்பிக்கைய நான் கெடுப்பதில்ல..முடிந்தால் ட்ரை பண்ணி பாருங்க..

ஹாய் ஷரோன்
சுற்றி போடுவது எப்படின்னு எங்க பாட்டி செய்வதை பார்த்ததை சொல்கிரேன்.
காய்ந்தமிளகாய்,உப்பு,கடுகு எடுத்து,கையில் வைத்து மூடி,தலையில் இருந்து கால் வரை தடவவேண்டும்.தடவும்போது ஏதோ சொல்லுவார்கள்,அது என்க்கு சரியாக தெரியவில்லை.
(சின்னகவுண்டர் படத்தில் வரும் பாடலை சிடியில் போட்டுவிட்டு சுத்திபோடலாம்) சும்மா விலையாட்டுக்கு சொன்னேன் தப்பா நெனைக்க வேன்டாம்.சுற்றி எரித்து விடுவார்க்ள்,ஆனால் வெளிநாடுக்ளில் வசிப்பவர்கள் குப்பையில்தான் போடவேண்டும்.
அன்புடன்
கலா

Kalai

ஜீனோ,என்ன? நீங்க புதியவர் போலிருக்கு அறுசுவைக்கு,ஆரம்பமே பயங்கர நக்கலா இருக்கிறது...

எனக்கு நேரமில்லைன்னு சொல்றது மற்றவர்களுக்கு புரியும்,உங்களுக்கு புரியாது...

எல்லாம் ஒரு தமாசு தான்...

வரட்டா...

இப்போ,இப்போ இப்போதான் எல்லார் கூடவும் கலாய்க்க வேண்டி உறுப்பினரானேன் உமா..
உங்களுக்கு நேரமில்லைன்னு உங்களுக்கே புரிஞ்சா சரி..ஹி,ஹி!

நகைச்சுவை உணர்வு எனக்கு அதிகமா இருக்குன்னு என் நண்பர்கள் சொல்லுவாங்க...அதான் ஆரம்பமே காமெடியா இருக்கு! நடுவர் கிட்ட அடுத்த கேள்விய கேக்க இருந்தேன்,நீங்களே கேட்டுட்டிங்க...சரி,அதுக்கு பதில் கிடைச்சிதாஆஆஆஆஆஆ??

இதோ உங்களுக்காக இண்டர்நெட்ல கிடைத்த இன்னொரு கடி!

சைவத்துக்கும் அசைவத்துக்கும் என்ன டிஃபரன்ஸ்?
மட்டன் ஷாப்ல தொங்கற ஆட்டைப் பார்த்து
உன் கண்ணுல தண்ணி வந்தா நீ சைவம்..
உன் நாக்குல தண்ணி வந்தா நீ அசைவம்!!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஜீனோ,உங்களை மாதிரி புதிதாய் வரும் போதே எல்லோரையும் கலாய்க்கலாம்ன்னு எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க...

இதனால,உதவணும்ன்னு நினைக்கறவங்களையும் நல்லா நோகடிக்கிறீங்க!!!
இளவரசி ஒரு முன்னால் லெக்சரர்,அவங்க கூட எனக்கு பேசவே எப்பவும் ஒரு தயக்கம் இருக்கும் ஆனா நீங்க வரும் போதே அவங்களையும் கலாய்க்க முடிவு பண்ணி தான் வந்திருக்கிறீங்க...இதற்கென்றே உறுப்பினரான மாதிரி தான் இருக்கு உங்களை பார்த்தா!!!

அன்புத்தோழிகளே! இதுவரை நீங்கள் அளித்து வந்த அன்புக்கு மிகவும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

உமா.

இதென்னடா இது வம்பா போச்சு..உமா,உமா...நில்லுங்க! நான் ஏதோ காமெடியா தான் சொன்னேன்..காமெடி என்பது மத்தவங்க மனதை புண்படுத்துவது இல்லைன்னு எனக்கும் தெரியும்..நீங்க சீரியஸா எடுத்துகிட்டிங்களே .. :(

எல்லாருக்கும் ஆலோசனை சொல்லி உதவும் ஒரு உள்ளதை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லவே இல்ல..இருந்தாலும் உங்கள் மனதை என் கிண்டல் புண்படுத்தியதற்கு சாரி!

இளவரசி அவர்களையும் காமெடியா தான் கேட்டேன்..அவங்க லெக்சரரா இருந்தவங்க...க்ளாஸ்-ல குறும்பு பண்ணற பசங்கள பத்தி அவங்களுக்கு தெரியும்..நானும் கொஞ்சம் குறும்பு....ஆனா அரியர் வைக்காம டிகிரி வாங்கிட்டேன்!

என்னால நீங்க குட் பை சொல்லலியே...தயவு செஞ்சி அப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க... :( நெசமாலுமே அழுதுடுவேன்..:'(

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்