கேரட் ஜாம்

தேதி: July 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

1) கேரட் - 3 கப் (தோல் சீவி துருவியது)
2) சர்க்கரை- 2 கப்
3) எலுமிச்சை - 1
4) ஏலக்காய் - 2
5) தண்ணீர் - வேகவைப்பதற்கு


 

கழுவி சுத்தம் செய்து துருவிய கேரட்டை 20 நிமிடத்திற்கு வேக வைத்து ஆற விடவும்.
எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொட்டையை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.
ஆற வைத்த கேரட்டை மசித்து எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
அனைத்தும் கரைந்து கெட்டியாகி ஜாம் பதம் வரும் வரை கிளறவும்.
பதம் வந்ததும் இறக்கி கழுவி காய வைத்த பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு வைக்கவும். மறுநாள் முதல் உபயோகிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று செய்திருக்கிறேன். பார்க்கப் பளபளா என்று அழகாக இருக்கிறது. காரட் சுவையைக் கொண்டு ஜாம் சுவை எப்படி இருக்குமோ என்று எண்ணிக் கொண்டே சமைத்தேன். நன்றாகவே வந்திருக்கிறது. அறுசுவை ஃபான்ஸ் பக்கம் படம் பகிர்கிறேன்.

‍- இமா க்றிஸ்