புதினா தயிர்ப்பச்சடி

தேதி: July 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1) புதினா - 1 கட்டு
2) தயிர் - 1 கப்
3) வறுத்த சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
4) மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
5) உப்பு - தேவைக்கேற்ப
6) எண்ணெய் - வதக்க தேவையான அளவு


 

புதினாவை காம்பு நீக்கி இலைகளை கழுவி சிறிது எண்ணெயில் வதக்கவும்.
ஆற வைத்து பின் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தயிரில் புதினா விழுது, வறுத்த சீரகப் பொடி, மிளகுத் தூள் செர்த்து நன்கு கலக்கவும்.
தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, கலக்கி, பிறகு பரிமாறவும்


இதை லெமன் சாதத்திற்க்கும், தக்காளி சாதத்திற்க்கும் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தங்களின் தக்காளி சாதத்திற்கு தொட்டுக் கொள்ள இந்த புதினா தயிர் பச்சடி செய்தேன், காம்பினேஷன் நல்லா இருந்தது. மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மிக்க நன்றி ஹயிஸ் அண்ணா.