டுமையான தொண்டை வலி, காய்ச்சல்

அன்பு தோழிகளை

என் பையனுக்கு ஏதோ வைரல் பிரச்சனை. 5 நாட்களாக கடுமையான தொண்டை வலி, காய்ச்சல்(104 F) இங்கு வைரல் பிரச்சனை என்று எந்த மருந்தும் தர மறுக்கிறார்கள் மருத்துவர்கள். வீட்டு மருந்துவம் எதுவும் தெரிந்தால் சொல்லுங்கள். அவனுக்கு நான்கு வயது.
வெறும் காய்ச்சலுக்கு மட்டும் ப்பாரசிட்டமால் தர சொல்கிறார்கள். தொண்டை வலியில் எந்த உணவும் தொடுவதில்லை. மிகுந்த மன வருந்தமாக உள்ளது.

கேட்க கஷ்டமாக இருக்கிரது ஆனால் என்ன செய்வது உண்மையில் வைரல் இன்ஃபெக்ஷனுக்கு ஆன்டிபயாடிக் இல்லை...பேக்டீரியல் இன்ஃபெக்ஷனுக்கு தான் அது வேலை செய்யும்...அல்லாததுக்கு பெனெடால் தருவார்கள்..அதில் காய்ச்சலும் குறையும்,தொண்டை வலியும் நிவாரணம் கிடைக்கும்
கொஞ்சம் ஒரு 2.5 வயஷு பிள்ளையாக இருந்தால் கூட உப்பு நீரை தொண்டையில் கார்கில் பன்ன வைக்கலாம்..நாம காண்பித்து கொடுத்தால் அவர்களும் செய்வார்கள்.
லேசாக தேன் கொடுத்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும் என்பார்கள்..சாப்பாடு எது கொடுத்தாலும் தொண்டை எரிச்சலாகவும் வலியாகவும் இருக்கும் பசியும் இருக்காது.
சாதத்தில் தேங்காய்ப்பால் கலந்து பிசைந்து கொடுங்க,,வெறும் கஞ்சி சோறு கொடுங்க..அல்லது பசும்பால் கலந்து கொடுங்க..கார்ன் ஃப்லேக்ஸ் போனற்வை கொடுங்க...அறவே நம்ப சாப்பாடு வகை வேண்டாம் எரிச்சலாக இருக்கும்.
குளிர்ச்சியல்லாத தயிர் கொடுக்கலாம் காய்ச்சல் விட்ட பிறகு

மிக்க நன்றி தளிகா,
ஏதொ 'mono' ebv வைரஸ் என்று சொல்றாங்க. தேங்காய் பால் எனக்கும் தோன்றியது, ஆனால் இப்பொ தரலாமா கூடாதான்னு தெரிய வில்லை.

யாருக்காவது 'mono' ebv வைரஸ் பற்றி தெரிந்தால் கூறவும்.

முதன் முறை கேள்விப்படுகிறேன்..நீங்க சொன்ன பிறகு சேர்ச் பன்னி படிச்சேன்..இது 3 வாரம் இருக்கும் என்கிறார்கள்..அதன் பின்னும் சில அசவுகரியங்கள் தெரியும் என்று சொல்லப்படுகிறது..ஆனால் மருத்துவர் சொன்னது போல தான் காய்ச்சலுக்கும் உடல் வலிக்கும் மட்டும் மருந்து கொடுப்பதாக சொல்ல படுகிறது...தேவையான அளவு தூக்கமும் ரெஸ்டும் முக்கியமாம்.
சின்ன குழந்தையா??படுக்க வைத்து லேசாக உடம்பில் வருடி விட்டுக் கொண்டே தூங்க வைத்து பாருங்க...எனக்கே கஷ்டமா இருக்கு

சின்ன குழந்தை இல்லை நான்கு வயது தளிகா. தூங்க வைப்பது மிகவும் கஷ்டம். எப்பொழுதும் விளையாட வேண்டும், இல்லை பள்ளிக்கு செல்லனும், இல்லைன்னா கார்ட்டூன் பார்க்கனும். ஒரு வாரம் ஆச்சு காய்ச்சல் குறைந்த பாடு இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றி

மேலும் சில பதிவுகள்