மரவள்ளிக்கிழங்கு இனிப்பு போண்டா

தேதி: July 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

மரவள்ளிக்கிழங்கு - ஒன்று (சிறியது)
வாழைப்பழம் - ஒன்று
அரிசி மாவு - அரை கப்
சீனி - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
பிரட் கிரம்ஸ் - கால் கப்
ஏலக்காய் - 2
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

கிழங்கின் தோலை நீக்கி விட்டு உப்பு சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
வேக வைத்த கிழங்குடன் வாழைப்பழத்தையும் சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்துக் கொள்ளவும்.
பின்பு அதனுடன் அரிசி மாவு, சீனி, ப்ரெட் கிரம்ஸ் மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறு உருண்டைகளாக செய்து எண்ணெயில் போடவும்.
தீயை மிதமான வைத்து பொன்னிறமாக ஆனதும் எடுத்து விடவும்.
சுவையான கிழங்கு போண்டா தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அறுசுவை நேயர்களுக்காக இந்த மரவள்ளிக்கிழங்கு இனிப்பு போண்டா செய்து காட்டியவர் <b> திருமதி. அப்சரா </b> அவர்கள். சுவையான இந்த இனிப்பு போண்டாவை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மரவள்ளிக்கிழங்கில் இனிப்பு போண்டாவா?innovative ஆக இருக்கு,நானும் குலோப்ஜாமுன் என்று நினைத்து விட்டேன்.அருமை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நல்ல வித்தியாசமான குறிப்பு..வாழ்த்துக்கள் அப்சரா..!!
ஆசியா மேடம் சொன்னதுபோல் குலோப்ஜாமூன் வடிவில்...பொன்னிறமாக,பார்க்க சூப்பரா இருக்கு.!
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

VANAKKAM.Ellorum Nalama? Nanum arusuvai.com il oru member agi irupathu migavum santhosamaga irukirathu.Ithil ulla anaithum migavum nanraga irukirathu.ithil ullathu pol inipu bonda seithu parthen.migavum super.itai nan inru tan seiya mudinthathu.atanal tan reply um late agi vitathu.Nanri.

VALZHA VALAMUDAN,ELLAM IRAIVAN SEYAL.

தோழி ஆசியா மேடம்,இளவரசி,ஜீனா எல்லோரும் எப்படி இருக்கீங்க?தாய் நாட்டிற்க்கு போய்விட்டு நேற்றுதான் வந்தேன்.இன்றுதான் என் குறிப்பையும் பார்த்தேன்.பின்னூட்டம் தந்த தோழிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இக்குறிப்பினை வெளியிட்ட அட்மினுக்கும் என் நன்றி.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.