பிறந்தநாள் வாழ்த்து மடல் - 2

தேதி: July 20, 2009

5
Average: 5 (2 votes)

இந்த அழகிய பிறந்தநாள் வாழ்த்து அட்டையை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். இந்த வாழ்த்து அட்டையை மோட்டார் ஓட்டப் போட்டியில் ஈடுப்பாடுள்ள ஒரு நண்பருக்காக செய்துள்ளதை இங்கு நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

 

வெள்ளை நிற A4 அட்டை - ஒன்று
கறுப்பு வார்னிஷ் காகிதம் - 12 x 21 செ.மீ
வெள்ளை அட்டை - 12 x 21 செ.மீ
ஃபோம் டேப் (foam tape)
ஸ்டிக்கர்கள்:-
3D கார்கள்
Happy Birthday - ஒன்று
கத்தரிக்கோல்
க்ளூ
ஸ்கேல்
க்ராஃப்ட் நைஃப் (craft knife)

 

பிறந்தநாள் வாழ்த்து அட்டை செய்வதற்கு தேவையானப் பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
வெள்ளைநிற A4 அட்டையின் மூன்றில் ஒரு பகுதியை தனியே வெட்டி எடுத்துக் கொள்ளவும். (மீதி உள்ள அட்டையை வாழ்த்து அட்டை செய்வதற்காக இரண்டாக மடித்து வைத்துக் கொள்ளவும்.)
தனியே எடுத்து வைத்திருக்கும் அட்டையில் 1 செ.மீ இடைவெளி விட்டு க்ராஃப்ட் கத்தியைக் கொண்டு நீளக்கோடுகள் போட்டுக் கொள்ளவும். கோடுபோடும் பொழுது அட்டையின் விளிம்பிலிருந்து வெட்டாமல் உள்ளே தள்ளி வெட்ட ஆரம்பிக்கவும். கடைசி நுனி வரை அட்டையை வெட்ட வேண்டாம்.
கறுப்புக் பேப்பரிலும் இதேப் போல் குறுக்கு வாக்கில் 1 செ.மீ இடைவெளியில் நீளத் துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
இந்த கறுப்பு பேப்பர் துண்டுகளை வெட்டி வைத்துள்ள வெள்ளை அட்டையில் வைத்து பாய் பின்னுவது போல் பின்னிக் கொள்ளவும். பின்னுவதற்கு எளிதாக இருக்க முதலில் ஸ்கேலை அட்டையில் ஒன்று விட்டு ஒன்றாக நுழைத்துக் கொண்டு நிமிர்த்தி வைக்க வேண்டும். பிறகு நடுவே வெட்டி வைத்துள்ள கறுப்பு பேப்பர் துண்டுகளை உள்ளே செலுத்தினால் சுலபமாக இருக்கும். கறுப்பு பேப்பரை அட்டையின் இரண்டு பக்கவாட்டிலும் சமமாக இருக்கும்படி இழுத்துவிட்டு ஸ்கேலை எடுத்து விடவும். இதேப் போல் வெட்டி வைத்துள்ள வெள்ளை அட்டையில் மாறி, மாறி வைத்து அட்டை நிரம்பும் வரை பின்னிக் கொள்ளவும். (வெட்டி வைத்திருக்கும் கறுப்புப் பேப்பர் துண்டுகள் அனைத்தும் தேவைப்படாது)
ஒரு சிறிய வெள்ளை அட்டையின் முழுவதும் க்ளூ தடவிக் கொண்டு பின்னி வைத்துள்ள அட்டையை அதன் மேல் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
அட்டை காய்ந்ததும் அதன் ஓரங்களை சீராக வெட்டி விடவும். வெட்டும் போது பின்னல்கள் கிழிந்து விடாமல் கவனமாக வெட்ட வேண்டும்.
பிறகு ஒட்டுப்படாமல் இருக்கும் கறுப்புப் பேப்பரின் ஓரங்களை க்ளூ வைத்து ஒட்டி விடவும்.
இப்பொழுது செய்து வைத்திருக்கும் இந்த அட்டையின் பின்புறத்தில் ஃபோம் டேப்பினை அட்டையின் அளவிற்கு மூன்று வரிகளாக நீளவாக்கில் இடைவெளிவிட்டு ஒட்டிக் கொள்ளவும்.
பின்னர் இதனை இரண்டாக மடித்து வைத்துள்ள வெள்ளை அட்டையின் மேல் ஒட்டவும்.
அதன் மேல் 'Happy Birthday' ஸ்டிக்கரையும், 3D கார் ஸ்டிக்கர்களையும் அழகாக ஒட்டி விடவும்.
அழகிய பிறந்தநாள் வாழ்த்து அட்டை தயார். இதன் உள்ளே உங்கள் விருப்பம் போல் வாழ்த்துக்களை எழுதிக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இமா, உங்கள் வாழ்த்து மடல் மிகவும் அழகாக இருக்கின்றது. கடைசியில் இருக்கும் காரும் அழகு. யாருடையது?
வாணி

ஹாய் வாணி,
நலமா? பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் எப்போது க்ராஃப்ட் குறிப்புகள் கொடுக்கப் போகிறீர்கள்? :)
அது மூத்த மகனின் கார்.
இமா

‍- இமா க்றிஸ்

இமா, நலமா? நான் க்ராஃப்ட் ஏதும் குடுக்கும் எண்ணம் தற்போது இல்லை. நேரம் தான் கஷ்டம். நான் ஏதாவது செய்ய இருந்தால் என் மகள் நூல், கத்தரிக்கோல், பசை இப்படி எதையாவது கொண்டு ஓடி விடுவா. பிறகு பார்ப்போம்.
வாணி

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta