என் மகனுக்கு 20 மாதம். அவனுக்கு diaper use பன்னுவதை நிறுத்தனும். ஆனால் வீட்டில் carpet இருப்பதால் diaper போடாமல் இருக்க முடியாது.எந்த நேரம் urine போவானோ என்று பார்த்துக் கொண்டே இருக்கனும்.இதற்கு என்ன செய்வது. அம்மாக்கள் பதில் கூறுங்களேன்.
என் மகனுக்கு 20 மாதம். அவனுக்கு diaper use பன்னுவதை நிறுத்தனும். ஆனால் வீட்டில் carpet இருப்பதால் diaper போடாமல் இருக்க முடியாது.எந்த நேரம் urine போவானோ என்று பார்த்துக் கொண்டே இருக்கனும்.இதற்கு என்ன செய்வது. அம்மாக்கள் பதில் கூறுங்களேன்.
potty training
கார்ப்பெட் இருந்தால் பழக்குவது கொஞ்சம் கஷ்டம் அதனால் எங்கள் வீட்டில் கார்ப்பெட்டை எடுத்து விட்டு ஷீட் போட்டு விட்டோம்.இப்பொழுது டயபரை மெல்ல மாற்றும் வயதாகிவிட்டது உங்கள் பிள்ளைக்கு.
கார்பெட் நாசமாகும் என்ற பயமிருந்தால் சும்மா விடாதீர்கள்..டயபரை மாற்றி விட்டு அதற்கு பதில் துணியை பயன்படுத்துங்கள்..கொஞ்ச நாள் சிரமம் தான் பழகிவிடுவார்கள்..துணி உபயோகிப்பதால் கீழேயும் போகாது அவர்களும் ஈரமாவதால் சீக்கிரம் சொல்ல பழகிவிடுவார்கள்..
அங்கு உங்கள் ஊரில் பள்ளியில் நம்பர் வன்னுக்கு டூவுக்கு எப்படி சொல்வார்களோ அதை போலவே இப்பவும் சொல்லி பழக்குங்கள்...துணி உபயோகிப்பதால் எத்தனை மணிக்கொருதரம் சிறுநீர் போகிறார்கள் என்பது தெரியும்..தினசரி சாப்பாடு ,பால் குடிப்பது போன்றவை நேரா நேரத்துக்கு கரெக்டா இருந்தால் தான் அதற்கான நேரமும் கணிக்க சுலபமாக இருக்கும்.
பிறகு பாட்டியில் உக்கார வைத்து பாருங்கள்..அது விரும்பாவிட்டால் டாய்லெட் சீட் போட்டு அங்கு உக்கார விடுங்க.முதலில் சில நாள் ரொம்ப சிரமமாக இருக்கும் ஆனால் ஒருக்க அவங்க செய்து அவங்களா மனசு வச்சா எப்படி பழக்கினோம்னே நியாபகம் இல்லாத மாதிரி சீக்கிரமா கத்துக்குவாங்க.
பிறகு பகலில் டயபரை மாற்றி பழக்கின பிறகு இரவிலும் பழக்கலாம்..இரவில் பழக்குவது சுலபம் படுப்பதற்கு 1.5 மணிநேரம் முன்பே பால் சாப்பாடு முடித்து விட்டு சிறுநீர் கழித்து விட்டு படுக்க வைக்க வேண்டும்..
Be positive. நன்றி
Be positive.
நன்றி தாளிகா. இன்று முதல் பழக்க ஆரம்பிக்கிரேன். உங்களின் குறிப்புகளில் நிறைய செய்திருக்கேன். ரொம்ப நன்றாக இருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் எப்படி result என்று சொல்கிரேன்
Be positive.
anbe sivamஅன்பு
anbe sivam
அன்பு நளினி..
1/2 மணி நேரத்துக்கு ஒருமுறை டாய்லட் கூட்டி சென்று குழந்தையின் டாய்லெட் சீட்டில் உட்கார வைத்து போக சொல்லுங்கள்.முதலில் போகாது.நாளாக நாளாகத்தான் பழகும்.மீண்டும் மீண்டும் இவ்வாறு செய்தால் பலன் கிடைக்கும்.பக்கெட்டில் தண்ணீர் மெதுவாக விழுமாறு பைப்பை திறந்து வைத்தால் டெம்ப்ட் ஆகி தன்னால் யூரின் போகுமாம்.என் குழந்தைக்கும் நான் இப்படித்தான் பழக்கினேன்.
நன்றி.
கவிதாசிவக்குமார்.
anbe sivam
ஆமா நளினி
ஆமா நளினி
உக்கார வச்சுடு ஒரு கப் தண்ணியை எடுத்து ஊற்றி விட்டால் கூட ஈரமானவுடன் சில சமயம் போவார்கள்..உடனே கைதட்டி சந்தோஷப்படுங்க ஓரிரு முறை அவங்க செய்துட்டா போதும் பிறகு ரொம்ப சுலபமாகிடும்...எங்காவது தெரியாமல் அப்பப்ப ஆக்சிடென்ட் பன்னுவார்கள் நொந்துகொள்ளாமல் சொல்லி கொடுங்க இப்படி பன்னினா நிலமெல்லாம் அழுக்காகிடும் டாய்லெட்டுக்கு போகனும் என்று
நளினி....
பொதுவாக நம்ப ஊரில் குழந்தைகள் சிறு பிள்ளையாக இருக்கும் போது அதாவது ஐந்து அல்லது ஆறு மாதத்திலே காலில் ஒட்கார வைத்து பழக்கி விடுவார்கள். ஆகையால் குழந்தைகள் அவர்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டுமென்றாலும் நிமிடம் சொல்லுவார்கள். எங்கு அப்படி இல்லை நாம் அவர்களுக்கு டயபர் போட்டே வைத்திருபதால் அவர்களுக்கு அந்த உணர்வே தெரிவதில்லை. இங்குள்ள மருத்துவர்கள் அவர்களுக்கு அந்த உணர்வு 18 மாததிற்கு பிறகு தான் வரும் என்று கூறுகிறார்கள்.... (எல்லா குழந்தையும் ஒரே மாதிரி இல்லை....சிலர் சீக்கிரமே கூட potty training பழகயுள்ளர்கள்)
உங்கள் குழந்தைக்கும் நீங்கள் ஆரம்பிக்கலாம். முதலில் அவர்களுக்கு பிடித்தமான கலரில் ஒரு potty chair வாங்குகள். நிறைய potty training வீடியோ காட்டுங்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்களை potty உபயோகப்படுத்த ஊக்குவியுங்கள். அவர்கள் அடம் பிடித்தால் வேண்டாம்....சிறுது காலம் சென்று பார்க்கலாம். potty train பண்ணும் போது pull-ups உபயோக படுத்தினால் நல்லது. அல்லது துணி நாப்கின் கூட உபயோக படுத்தலாம். அல்லது அவர்களுக்கு உள்ளாடை அணிய வைத்தால் அவர்கள் அன்ன செய்கிறார்கள் அன்று அவர்களுக்கு தெரியும். ஒரு பேப்பர் டவேல் வைத்து கார்பெட்டில் ஒத்தி எடுங்கள்......ஒரு வாசனையும் இராது.....
உங்கள் பிள்ளை daycare போகிறாரா? அப்படி போனால் அங்குள்ள பிள்ளைகள் potty செய்வதை பார்த்து எவரும் சீக்கிரமே கற்று கொள்வார். இப்பொழுது சம்மர் அதனால் தாரளாமாக ஆரம்பிக்கலாம்.
வாழ்துக்கள்.
Never give up!!!
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!