உதவுங்கள் தோழிகளே

அன்பிற்கு வணக்கம் என் வாழ்வில் திடீர் என சோகம் ஏற்பட்டு விட்டது. குடும்பதுடன் நான் குலு மனாலி ஆக்ரா டெல்லி சென்ற போது டெல்லி ரயில் நிலயத்தில் என் அம்மாவின் செயினை திருடன் பிடித்து இளுக்க அதில் அம்ம கீழே விழுந்து 36 மணி நேர போராட்டத்தின் முடிவில் அறுவை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டர்கள். நானும் என் தந்தையும் சிவகாசி திரும்பினோம். உஙகள் அன்பு என்றும் போல் தாருங்கள்.நாங்கள் சமைக்க ஆரம்பித்துள்ளோம். மைக்ரோவேவ் வோவன் பற்றி சொல்லுங்கள். நன்றிதாங்களும் தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும், செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம்.அன்புடன் திவ்யா ப்ரபு.

ஹாய் திவ்யா ப்ரபு உண்மையிலே மிகவும் துக்க கரமான விசயம் தான்..... படிக்கும் போது கஷ்டமாக உள்ளது.......

நான் அதற்க்கு மிகவும் வருத்தம் தேருவிக் கிரேன்ப்பா....... உங்கள் தாய் ஆத்துமா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக் கொள்கிரேன்......

எங்கள் எல்லோருடய அன்பும் உங்கலுக்கு எப்பையும் உண்டு......

தவறாக நினைக்க வேண்டாம் மைக்ரோவேவ் வோவன் பற்றி எனக்கு தெரியாது. மற்ற தோழிகள் கட்டயம் பதில் தருவார்கள்......

இந்த தோழிக்கு கட்டாயம் உதவுங்கள் பிலீஸ்...

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

திவ்யா கொடியதிலும் கொடிய இழப்பு அம்மாவை இழப்பது.காலம் உங்கள் காயங்களை ஆற்றும்.கவலைகொண்டு உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம்.உங்கள் நலன்களுக்காக தெய்வமாக இருந்து உங்கள் அம்மா கைகொடுப்பார்.17 வயதில் இதே துன்பத்தை அனுபவித்தவள் நான்.நீங்களூம் மாணவி என்று சொல்லி இருப்பது எனக்கு இன்னும் கஷ்டமாக இருக்கிறது.

http://www.arusuvai.com/tamil/microwave
அம்மா திவ்யா இந்த லின்ங் ல் பிரியாணி,குழம்பு எல்லாம் இருக்கிறது.பார்த்து பயன் பெறுங்கள்.

அன்பு தங்கை திவ்யாவுக்கு,

உங்கள் பதிவை படித்தேன்.உங்களுக்கு ஆறுதலளிக்கும் வார்த்தைகள் பதிக்ககூட வருத்தமாக இருக்கிறது.....

அந்த ஆறுதல் வார்த்தைகள் இன்னும் உங்கள் வேதனையை கூட்டிவிடுமோ என....

ஒரு அம்மாவின் அன்பை வேறு யாராலும் தர முடியாது..இந்த அருசுவையில் எல்லாருமே உங்கள் சகோதரிகளாக எண்ணிக்கொள்ளுங்கள்.

புதிதாக சமையல் செய்ய சிரமமாக இருக்கும் என புரிகிறது....

நீங்கள் எந்த துறையில் படிக்கிறீர்கள்?நீங்கள் படிப்பது கணினித்துறையாக இருந்தால்,உங்களுக்கு ஏதும் கணினி பாடங்களில் உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள்...என்னால் முடிந்தவரை உதவமுடியும்.

சமையலிலும் ஏதும் சந்தேகமிருந்தால் அறுசுவையில் ஒரு பதிவு போட்டால் போதும்.நம் அன்பு சகோதரிகள்
உங்களுக்கு உடனே பதில் தருவார்கள்.

தேவைப்பட்டால் சொல்லுங்கள் என் இமெயில் ஐடி தருகிறேன்.
உங்களின் சிதறிய மனதை கொஞ்சம் கொஞ்சமாய் சேர்க்க வேண்டி பிரார்த்திக்கிறேன்
வேறு எழுத வார்த்தைகள் வரவில்லை.
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்புள்ள திவ்யா, உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்கிறேன். இதை படிக்க எனக்கு மிகவும் மன வருத்தமாக இருக்கின்றது.
வாணி

தாங்களும் தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும், செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம்.அன்புடன் திவ்யா ப்ரபு,.

தாங்களும்,தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும்,செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். அன்புடன் திவ்யா ப்ரபாகரன்.

உஙகள் அன்பு என்றும் போல் தாருங்கள்.
தாங்களும் தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும், செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம்."வாழ்க வளமுடன்"
அன்புடன் திவ்யா,ப்ரபு.

தாங்களும்,தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும்,செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். அன்புடன் திவ்யா ப்ரபாகரன்.

உஙகள் அன்பு என்றும் போல் தாருங்கள்.
தாங்களும் தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும், செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம்."வாழ்க வளமுடன்"
அன்புடன் திவ்யா,ப்ரபு.

தாங்களும்,தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும்,செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். அன்புடன் திவ்யா ப்ரபாகரன்.

அன்பு சகோதரி திவ்யா! அம்மா, அப்பாவை இயற்கையான‌ முறையில் இழப்பதையே நம்மால் தாங்க முடியாது. அதிர்ச்சி மிகுந்த உங்களின் இந்த கவலைக்கு, இறைவன் ஏதாவது ஒரு வகையில் ஆறுதல் அளிப்பான். மனதை திட‌ப்படுத்திக்கொள்ளுங்க‌ள். உங்களுக்கு இன்னும் என்னவெல்லாமோ ஆறுதலாக சொல்ல தோன்றுகிறது. ஆனால், ச‌கோதரி இளவரசி சொன்னதுபோல், அதுவே உங்களின் கவலையை, துக்கத்தை அதிகப்படுத்திவிடுமோ என்ற அச்சம்! தோழி மனோகரி சொன்னதுபோல், என்றைக்காவது ஒருநாள் இதுபோன்ற துக்கங்களை நம் வாழ்வில் அனுபவிக்கவே நேரிடும் என்பதை மனதில் கொண்டு, உங்களை தேற்றிக்கொள்ளுங்கள்! கொஞ்ச நாள் கட்டத்திற்கு அவசரமாக இந்தியா செல்வதால், நான் திரும்பி வந்து மீண்டும் உங்க‌ளோடு பேசுகிறேன். அதுவரை உங்களுக்காக ஒரு சின்ன பதிவாவது போடவேண்டும் என்பதால் இப்போது பதிவிட்டேன். மற்ற தோழிகளும் உங்களுக்கு நிச்சயம் தோள் கொடுப்பார்கள். கவலை வேண்டாம்!

அன்பு திவ்யா,ப்ரபு
என் கண்களைக் கலங்கச் செய்தது இந்த செய்தி. என் மன வருத்ததை தெரிவித்துக்கொள்கிறேன்.

"""""""""அம்மா"""""""""""

"இந்த ஒரு சொல் போதும்
உன் காலம் வரை அவர்
உன்னுடன் இருப்பார்"

உங்களுக்கு ஆதரவாக நாங்களும் இருக்கிறோம் எதற்கும் கலக்கம் வேண்டாம்
ஒரு சில ஆசைகள் அம்மாவிற்கு இருக்கும் அதனை முடிந்தவரை நிறைவேற்றுங்கள்.
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய ப்ராத்திக்கிறோம்

உங்கள் தோழி
ரூபாகண்ணன்

உங்கள் தோழி
ரூபாகண்ணன்

அன்பு சகோதரி திவ்யா, வாழ்கையில் ஈடு கட்ட முடியாத இழப்பு உங்களுக்கு நேர்ந்துள்ளது :( :( :'(

காலம் தான் உங்கள் மனப் புண்ணுக்கு மருந்திட வேண்டும்..மனதை விட்டு விடாதீர்கள்..மற்ற தோழிகள் சொல்லியது போல தந்தையை கவனித்துக் கொள்ளுங்கள்..உங்கள் முகம் பார்த்துத்தான் அவர் ஆறுதலடைவார்..எனவே, தைரியமாக இருங்கள்.துக்கத்தை பகிர்ந்து கொண்டாலே பாதி குறைந்துவிடும்..இங்கே எல்லோருடனும் வந்து பேசுங்கள்..உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்.

உங்கள் தாயாரின் ஆத்மா உங்களை என்றும் உடனிருந்து வழிநடத்தும்.

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்