தமிழ் கற்றுக்கொள்ளலாம் வாங்க!!!

என்ன ஒரு ஆச்சரியமான தலைப்பு இல்லையா?
இப்படி ஒரு இழை க‌ண்டிப்பாக‌ தொட‌ங்க‌ வேண்டும் என‌வும் அதில் த‌மிழில் எழுத‌ சிர‌ம‌ப்ப‌டுவோருக்கு தேவையான‌ விள‌க்க‌ம் கொடுக்க‌ வேண்டும் என‌வும் வேகு நாட்கள் முன்பே தோன்றிய‌து ஆனால் அத‌ற்கான‌ நேர‌ம் இப்பொழுது தான் அமைந்த‌து.

தமிழில் சின்ன‌ விள‌க்க‌ம்:
****************************

முத‌லில் த‌மிழ் எழுத்துக்குறிய‌ அத‌ற்கு ஏற்ற ஒலியெழுப்பும் ஆங்கில‌ எழுத்தை த‌ட்ட‌ச்சு செய்தால் அங்கே வ‌ருவ‌து ஒரு த‌மிழ் மெய்யெழுத்து...

எடுத்துக்காட்டு: k = க்
z = ழ்
nj = ஞ்
ng = ங்
j = ஜ்
perss shift key with s = ஸ்
s + h = ஷ்

மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் சேர்ந்து தான் உயிர்மெய் எழுத்து உருவாகிற‌து என‌ அனைவ‌ருக்கும் தெரிந்தாலும் அங்கே தான் ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள்.

எ.கா: k + a = க‌ (z + a = ழ‌),(n+j+a = ஞ‌),(n+g+a =ங‌)
k + aa(A) = கா
k + i = கி
k + ii(I) = கீ
k + u = கு
k + uu(U) = கூ
k + e = கெ
k + ee(E)= கே
k + ai = கை
k + o = கொ
k + oo(O)= கோ
k + au = கௌ
q = ஃ
SrI = ஸ்ரீ

இதை அடிப்ப‌டையாக‌க்கொண்டு த‌மிழ் த‌ட்ட‌ச்சு செய்து த‌வ‌று இல்லாம‌ல் எழுத‌லாமே!!!

ந‌ன்றி.

இவை அனைத்துமே அறுசுவையில் "எழுத்துத‌வி" ல் இட‌ம் பெற்றுள்ள‌து தான் என்றாலும் ப‌ல‌ருக்கும் இதில் குழ‌ப்ப‌ம் உள்ள‌து.

நானும் முத‌லில் த‌மிழில் டைப் செய்ய‌த்தெரியாம‌ல் ஆங்கில‌த்தில் தான் சமையல் குறிப்புகளில் சந்தேக‌ கேள்விக‌ள் கேட்க‌ உள் நுழைந்தேன்,பிற‌கு தோழிக‌ளின் உத‌வியால் இன்று அனைத்தும் ச‌ரியாகிவிட்ட‌து,அத‌னால் நான் அப்பொழுதே யோசித்தாலும் இது அனைவ‌ருக்கும் தெரிந்த‌து தானே என்றிருந்தேன்,ஆனால் சில‌ர் தெரியாம‌ல் வ‌ருத்த‌ப்ப‌டுவ‌தால் இன்று தொட‌ங்கிவிட்டேன்.

என‌க்கு ஹுசேன‌ம்மா தான் இந்த‌ http://www.tamileditor.org/ தொட‌ர்பை கொடுத்தார்க‌ள் இதிலும் மேற்காணும் முறையிலேயே டைப் செய்தால் த‌மிழ் எழுத்துக்க‌ள் அங்கே வ‌ந்துவிடும்.

ம‌ற்ற தோழிக‌ளும் உங்க‌ளுக்கு தெரிந்த‌ எளிய‌முறையில் த‌மிழ் டைப் செய்ய‌க்கூடிய‌ வ‌ச‌தியான‌ இணைய‌த்த‌ள‌ தொட‌ர்புக‌ள் இருந்தால் தெரியாத‌வ‌ர்க‌ளுக்கு கொடுத்து உத‌வுங்க‌ளேன்.

ந‌ன்றி.

பிரெண்ட்ஸ், இப்போ ஜிமெயில்-ல கூகுல் டூல் பார் இன்ஸ்டால் பண்ணிட்டா ஈசியா தமிழ் டைப் பண்ணலாம்.. Ctrl+g செலக்ட் பண்ணி லாங்குவேஜ் மாத்திட்டா, உமா [அவங்க,இவங்க எல்லாம் ஜீனோ விட்டுச்சு உமா..நோட் திஸ் பாயின்ட் ப்ளீஸ்.] சொன்ன மாதிரியே லெட்டர்ஸ் டைப் பண்ணி தமிழ்ல எழுதலாம்..இந்த வசதி ஆர்க்குட்லயும் இருக்கு..ஜீனோ அதான் உபயோக்கிறார்..இட்ஸ் ஈசி மேன்...யூஸ் it அண்ட் see !

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

http://www.google.com/transliterate/indic/Tamil

நான் இந்த லிங்க் உபயோகித்து தான் தமிழ் டைப் பண்றேன் இது எனக்கு எளிதாக இருக்கு. இதில் ஆங்கிலத்தில் டைப் பண்ணி spacebar key அடித்தவுடன் தமிழில் மாறிவிடும்.

1) அந்த சொல் (word) தப்பாக இருந்தால் நீங்கள் backspace key உபயோகித்து சென்றால் அதுவே சில சொற்களை காட்டும்.அதில் உங்களுக்கு தேவையானது இருந்ததால் அதை select செய்து கிளிக் செய்யலாம்.

அல்லது

2) அந்த தவறான சொல்லை select செய்தால் எடிட் (edit option) அதை கிளிக் செய்தும்
எடிட் செய்து கொள்ளலாம்.

3) ctrl+g keys உபயோகித்து தமிழ் ஆங்கிலம் நம்பர் போன்றவற்றிற்கு மாற்றிக்கொண்டு உபயோகிக்கலாம்

பின்குறிப்பு : இந்த லிங்கில் உங்களுக்கு தேவையாக இருந்ததால் பிற இந்திய மொழிகளையும் உபயோகித்து எழுதலாம். அதற்கு மேலே நீங்கள் உங்களுக்கு எந்த மொழி தேவையோ அதை select செய்து கொள்ளவும்.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அருமையான இழையை தொடங்கி உள்ளீர்கள்.முதலில் எனக்கும் கஷ்டமாக இருந்தது. அப்பொழுது நான் silent reader ஆக மட்டும் இருந்த்தேன். பின்னர் இந்த லிங்கை ஒரு இழையில் சகோதரர் அருண்ப்ரசங்கி அவர்கள் கூறி இருந்தார்கள். அதன் பிறகு இதை உபயோகித்து தமிழில் எழுத ஆரம்பித்தேன். அதனால் அவர்களுக்கு என் நன்றி.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

நானும் ஜீனோ சொன்னது போல் 'Gmail' இல் தான் தட்டச்சு செய்கிறேன். மிக வசதியாக இருக்கிறது. 'சேவ்' செய்து வைக்கலாம். இங்கு 'பேஜ் எரர்' வந்து பதிவு காணாமல் போனால், திரும்ப பிரதி செய்து பதிவு செய்யலாம். :)
குறிப்புகளை என் வசதி போல் சிறிது சிறிதாகத் தட்டிக் கொள்கிறேன். தமிழ், ஆங்கிலம், இரு மொழிகளிலும் மாறி மாறித் தட்டத் தேவைப்படும் சமயங்களில் சுலபமாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

இமா அம்மா ,

கரெக்ட் பேஜ் error வந்தா ஜிமெயில் தான் நல்லது. எனக்கு இது இவ்வளவு நாள் தோணவே இல்லை ஜிமெயில் மெயில் அனுப்பும் போது மட்டும் அப்படியே அதுல தமிழ் மாத்தி டைப் பண்ணுவேன். மிக்க நன்றி நீங்க இது சொன்னதற்கு
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்.....

உமா என்னை மாதிரி தமிழை கொலை செய்யரத பார்த்து இப்படி ஒன்னு ஆரம்பிச்சுட்டிங்கலா......

இருந்தாலும் சூப்ப்ப்ப்ப்ர்..... அனைவருக்கும் இது உதவும் என நினைகிரேன்... உங்கள் படைப்புகலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அச்சச்சோ உமா.. இப்போ தான் நானும் ரோஹித்தும் மூட்டை ய கண்டு பிடிச்சு அவிழ்த்து விட்டோம்.. அதற்குள்ள எப்படி இப்படி ?? கலக்கறீங்க போங்க.. உங்க தமிழ் ஆர்வத்துக்கும் நன்றி..

அன்பு பிரபா - நானும் உங்களுக்கு சொல்லனும்ன்னு இருந்தேன்.. நான் அருசுவைக்குள்ள வந்த புதுசுல உங்களுக்காக ரொம்ப நாள் முன்னாடி இலா இந்த கூகிள் transliteration பத்தி சொல்லியிருந்தாங்க.. அதை பார்த்து தான் நான் இங்க பண்ண ஆரம்பிச்சேன்.. அது மட்டும் தெரியாம இருந்திருந்தா இந்தளவுக்கு பேசிகிட்டு இருக்க மாட்டேன் :) உங்களுக்கு அது கண்ணுல படலை போல.. அப்புறம் ஒரே ஒரு சின்ன திருத்தம் - இந்த சொல்லுங்க க்கு sollunga ன்னு அடிங்க.. எங்க பார்த்தாலும் செல்லுங்க (sellunga) ன்னு அடிச்சு வைக்கறீங்க.. இந்த ஒன்னு மட்டும் சரி பண்ணிட்டீங்கன்னா பாதி தப்பு குறைஞ்சிடும்..

இமா - நீங்க சொன்னது ரொம்ப நல்ல ஐடியா.. இது ரீசன்ட் ஆ தான் கண்டு பிடிச்சிருந்தேன்.. அது முன்னாடி வரைக்கும் டைப் அடிச்சு வச்சு தொலைச்சிருவேன் :( அதுமட்டுமில்ல, சாட் ல கூட அந்த லிங்க் ஐ இழுத்து போட்டுக்கலாம்.. நண்பர்கள் கூட இதே மாதிரி வேகமா தமிழ் அரட்டை அடிக்கலாம்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் சந்தனா /// ஒரே ஒரு சின்ன திருத்தம் - இந்த சொல்லுங்க க்கு சொல்லுங ன்னு அடிங்க.. எங்க பார்த்தாலும் செல்லுங்க (செல்லுங) ன்னு அடிச்சு வைக்கறீங்க.. இந்த ஒன்னு மட்டும் சரி பண்ணிட்டீங்கன்னா பாதி தப்பு குறைஞ்சிடும்..////

ரொம்ப நன்றிப்பா...... என்னுடைய தவறை சூட்டி காட்டினிங்க..... உங்கலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி... நான் என் தப்பை சரி செய்கிரேன்.....

வேரு ஏதேனும் தவறு இருந்தால் செல்லி குடுப்பா...... நான் திருத்திக்கிரேன்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நல்ல இழை தொங்கியிருக்கீங்க உமா அக்கா.

நானும் கூகிள் டூல் பார் வைத்துக் கொண்டு தான் டைப் செய்து கொண்டு இருக்கிறேன்.மற்றும் நம்ம அறுசுவை எழுத்துதவி வைத்து தான் டைப் பண்றேன்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

மேலும் சில பதிவுகள்