பட்டிமன்றம்-3 செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா

சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.எனக்கு அளிக்கபட்ட இந்த வாய்ப்பிற்கு மிக்க நன்றி. தலைப்பை பார்த்தவுடன்
இந்த தலைப்பு தேவையா என்று தோன்றும். ஆனால் செல்போன்களால் நன்மை, தீமை இரண்டும் இருப்பதால் இதை விவாதித்து பார்க்கலாமே என்று தோன்றியது. ஆகவே இந்த வாரம் நான் திருமதி. பஜீலா அவர்களுடைய தலைப்பான செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா..என்பதை தேர்ந்தெடுத்து உள்ளேன். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இது தேவையா என்று விவாதிக்கலாம். இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை விவாதிக்கலாம்.

சகோதர, சகோதரிகளே நான் இந்த ஏரியாவுல நடுவராயிட்டேன்:) என்னையும் நடுவரா ஏத்துக்கோங்கோ (வடிவேலு ஸ்டைல்:-)) வாங்கோ!வாங்கோ!! அனைவரும் இந்த விவாதத்தில் கலந்து இந்த பட்டிமன்றத்தையும் வழக்கம்போல் வெற்றிபெற வையுங்கள்.

இதில் கலந்து கொண்டால் நடுவராக பிடித்து போட்டு விடுவார்களோ என யாரும் பயப்பட வேண்டாம்:) அப்படியெல்லாம் இல்லை. எனவே ஒளிஞ்சு, மறைந்து படிப்பவங்க எல்லோரும் வாங்க. வந்து உங்க கருத்துகளையும் சொல்லுங்க.

நமக்கு சொந்த புத்தி சிறிதும் கிடையாது. அதனால் உங்கள் வாக்குவாதங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படும். நான் முடியும்போது நடுநடுவில் வருகிறேன். நாளை முதல் வாக்குவாதங்களை ஆரம்பிக்கலாம்.தீர்ப்பு வழக்கம்போல் அடுத்த திங்களன்று(ஆகஸ்ட் 3) அறிவிக்கப்படும். என் செல்போன் சத்தம் போடுது. நான் இப்ப போய் பிறகு வருகிறேன்:)

வின்னீ, பலே பலே ஆரம்பமே அமர்க்களமா இருக்கு :)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வின்னீ அக்கா மன்னிகவும் நடுவரே நான் பார்த்துட்டேன். என் கருத்துக்களுடன் நாளை வந்து பதிவு போடுகிறேன்.

அருமையான அழைப்பு "ஆலமரத்தடிக்கு வாங்கோ"!!!!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஆகா... செல்போனுக்கே வேட்டோ?:)
உருப்படியா எங்களிட்ட இருக்கிறதே இந்த செல்போன் ஒன்றுதான்:) அதுக்கும் வேட்டுவைக்கப்போகிறார்களோ:)...

நடுவர் அவர்களே, இன்றைய காலகட்டத்துக்கு தேவையான தலைப்புத்தான்... இந்தாங்கோ.. ஆலமரக் குளிர்ச்சியோடு சேர்த்து இப்பாலைக் குடியுங்கோ... ஏதோ என் பூனை மூளைக்கெட்டியவரை யோசித்துக்கொண்டு வருகிறேன்:).

சந்தனா... நாங்களெல்லாம் சின்னப்பொண்ணுங்களாக்கும்:)..... ஜெயாராஜி.. வழமைபோல் அதிரடியாகக் களமிறங்கீட்டீங்கள் போல... முழங்கவிருக்கும் அனைவருக்கும் அதிராவின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் வின்னீ
நல்ல தலைப்பு தான் தெர்து எடுத்திருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்.
தலைப்பு குடுத்தா பஜீலா அவர்களுக்கும் வாத்துக்கள்.
இதில் கலந்து கொண்டால் நடுவராக பிடித்து போட்டு விடுவார்களோ என யாரும் பயப்பட வேண்டாம்:) அப்படியெல்லாம் இல்லை.அப்பா இப்பதான் நிம்மதி என் கருத்துக்களுடன் நாளை வருகிறேன்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

நல்லவேளை, கீழே போகவிருந்த த்ரெட்டை மேலே கொண்டுவந்தாச்சு. அவ்வளவு லேசில நாம விட்டுடுவோமா:) சந்தனா, அதிரா,சுபா, சுகா மிக்க நன்றி. வாங்கோ, வந்து கலக்குங்கோ. அதிரா செல்போனை உங்கள் கையில் இருந்து பிடுங்குவதும், போனா போவுது என்று விடுவதும் நீங்க பேசுவதில்தான் இருக்கு:)

பி.கு: பூஸ்ட், பால், மிராண்டா எதுக்கும் நாங்க மிரண்டுட மாட்டோம்:)

நடுவர் வானதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் வணக்கம்.
செல்போன் நன்மைகளை சொல்லி முடிக்க முடியாதே!!!!!!!!!!!
வந்ததற்கு எதுவும் சொல்லாமல் போக மனதில்லாமல்........
1. எங்கேயாவது கிளம்புகிறோம்?????வழி மறந்துவிட்டால்!!!!!!!! பொதுத் தொலைபேசி தேடி அலைவதிற்குப் பதில் கையில் ஒரு செல்போன் இருந்தால் அதிலிருந்து அழைத்து வழியைத் தெரிந்துக் கொள்ளலாம். நேரம் மிச்சம்.

இன்னும் நிறைய இருக்கிறது......
நாளைக் கொண்டு வருகிறேன்...........

வின்னி.... வின்னிங் தலைப்புடன் வந்திருக்கீங்க..... வாழ்த்துக்கள்.

வேணும் வேணும் கண்டிப்பா வேணும்'னு நான் சண்டை போட வந்திருக்கேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வலியவந்த சீதேவியை யாரும் எட்டி உதைப்பார்களோ?

நடுவர் அவர்களே!!! அமெரிக்காப் பட்டிமன்றம் என நினைத்து:), விலைஉயர்ந்த கோட்டுச்சூட்டெல்லாம் வாங்கிட்டேன், மேடையில் பேசும்போதுபோடுவதற்கு:), நீங்க திடீரென ஆலமரம் என அறிவித்ததும் ஒருகணம் திகைத்திட்டேன்:), என்ன செய்வது நட்டம்தான், இருப்பினும் நம் கட்சிதானே வெல்லப்போகுது:), அப்போ அந்த மகிழ்ச்சியில் இதெல்லாம் ஒரு நட்டமா என்ன?:).

செல்போன் இன்றைய உலகில் தவிர்க்கமுடியாத ஒன்றாக மக்களிடையே பின்னிப் பிணைந்துவிட்டது. உணவில்லாவிட்டாலும், எங்குபோயும் தப்பிவரலாம், ஆனால் செல்போன் இல்லாமல் வெளிக்கிட்டால் அவ்வளவுதான்.

இதனால் தீமைகள் இருக்கிறது, ஆனால் அவற்றை விட நன்மைகளே அதிகம். பிள்ளையிடம் செல்போன் இருப்பதால்தான் பெற்றோருக்கு தெரிகிறது, இப்போ பிள்ளை எங்கே இருக்கிறார் என்று. தேடிப்போகும் தேவை இல்லை. பாதி வழியிலே ஒருவிபத்து ஏற்பட்டால் வீட்டுக்கோ, போலிசுக்கோ, மருத்துவமனைக்கோ போன் பண்ண செல்போன்தான் கை கொடுக்கும்.

இன்றைய அதிவேக உலகிலே குடும்பத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், அதுவும் தனிக்குடும்பங்களாகிவிட்ட வெளிநாட்டிலே பிள்ளைகளுக்குப் பெற்றோர், பெற்றோருக்குப் பிள்ளைகள் இப்படி இருக்கும் போது, ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் உடன் தொடர்புக்கு உடனே பயனழிப்பது செல்போன்தான் இல்லையென்றால் எங்கேபோய் தேடிப்பிடிப்பது.

இப்போ இன்னும் நாகரீகம் வளர்ந்து, செல்போனுக்கு மவுசு அதிகமாகிவிட்டது, மேல்மாடி அறையிலிருந்துகொண்டு கீழே கிச்சினில் நிற்கும் மனைவிக்கு, "ஒரு ரீ கிடைக்குமா பிளீஸ்" எனச் சொல்லவும் பெரிய உதவியாக இருப்பது இந்த சீதேவியாகிய செல்போன் தானுங்கோ:).

நடுவர் அவர்களே, தப்பா எடை போட்டிடாதீங்கோ:), பானையில் நிறைய இருக்கு, ஆனால் ஒரேயடியாகக் கொட்டாமல்:), அடுத்தவர்களுக்கும் வாய்ப்பளித்து, என் ஆலமரத்தடிப் பேச்சை இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன்.

வனிதா, தேன்மொழி உங்கள் கட்சியேதான் நானும்.... இப்படி... இப்படி ... இந்த ஆலம்வேரிலே, வந்து வசதியாக இருங்கோ என் பக்கத்தில்:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வானு அருமையான தலைப்போட ஆரம்பம் ஆயிடிச்சு பட்டிமன்றம். அன்புத்தலைவருக்கும், எனதருமை தோழிகளுக்கும் வணக்கம். செல்போனினால் ஏற்படும் நன்மைகள் பற்றியே நான் பேச வந்துள்ளேன்.

தலைவர் அவர்களே இன்று செல்பேசி இல்லாமல் என்ன முடியும் சொல்லுங்கோ. அப்போலாம் லாண்ட் லைண் கனைக்ஷன் மட்டும்தான். அம்மாவோ, நானோ வெளியே போகனும்னா கூட யாராவது வீட்டில் இருக்க வேனும் யாராவது போன் பண்ணுவாங்க என்று. இன்னைக்கு பாருங்க ஜாலியா மொபைல எடுத்தோமா கிளம்புனோமானு இருக்கலாம்.

அப்புறம் ஸ்கூல் டூர், காலேஜ் டூர், ஆபிஸ் டூர் இப்படி நாம போறதுக்கு வீட்ல அனுமதிக்க மாட்டாங்க. எதுக்கு பிள்ளைகளை நாம் காண்டாக்ட் பண்ண முடியாதே என்னாகுமோனு பயந்துதான். ஆனால் இப்போ பாருங்க எந்த ஊரா இருந்தாலும், எந்த ஸ்டேட்டாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் சந்தோஷமா அனுப்பி வைக்கிறாங்க பெற்றோர். ஏன் நம்ம கையில் மொபைல் இருக்கிற தைரியத்தில்தான். போனதும் கால் பண்ணிடு அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பு என்று சொல்லி தைரியமா அனுப்புறாங்க. டூர் என்றாலே கையில் கைமரா என்று அலையுவோம். இந்த அந்த ப்ரச்சனையும் இல்லை கையில் மொபைல் இருந்தால் போதும் வேண்டிய போட்டோஸ் எடுத்து கொள்ளலாம்.

செல்போனில்தான் என்னென்ன வசதிகள், ஜீ.பீ.ஆர்.எஸ், எம். எம். எஸ், இண்டர்நெட் என்று இன்னும் எத்தனையோ வசதிகள். இந்தியாவில் பிறந்த குழந்தையை 5 நிமிஷத்தில் அமேரிக்காவில் பார்க்கும் வசதியை இந்த செல்போன்தான் கொடுக்குது நடுவர் அவர்களே! (நீங்களூம் அமேரிக்காவில் இருக்கீங்க உங்களுக்கே தெரியும்)

அந்த காலத்தில் கணவரை வெளிநாடு அனுப்பி விட்டு, தன் ஊரில் காத்திருக்கும் உறவினருக்கு ஒருவாரம் கழித்துதான் வந்து இறங்கிட்டாரானு தெரியுமாம். ஆனா இப்போ பாருங்க ஏர்போர்ட் வந்து இறங்கின அடுத்த நிமிஷமே வீட்டுக்கு போன் நம்ம மொபைலில் இருந்து. இது எவ்வளவு சந்தோஷத்த கொடுக்குது. வெளிநாட்டில் இருந்து லேண்ட் லைனுக்கு போன் பண்ணுவார் கணவர் மனைவிக்கு குடும்பத்தில் அவளால் எல்லோர் முன்னிலையிலும் சகஜமாக கூட பேச முடியாது. எவ்வளவு கஷ்டம் இருவருக்கும். ஆனா இப்போ பாருங்க மொபைல் கையில் இருந்தால் எங்க எப்போ வேணாலும் walk and talk, talk and walk என்று ஜாலியா பேசலாம். எதிரணியினர் கார்ட்லெஸில் பேசலாமே என்று கூறவேண்டாம். கார்ட்லெஸில் ஒரு குறீப்பிட்ட இடம் அல்லது நம் வீட்டிற்கு உள்ளேதான் பேசமுடியும். உங்களுக்கே இது தெரியும்.

புதிதாக திருமணம் செய்ய போகிறவர்களுக்கும், காதலர்களுக்கும் இந்த செல்பேசி கண் கண்ட கடவுளை போன்று விளங்குகிறது. காச ரொம்ப செலவு பண்ணாதீங்க என்று அட் இன் கார்ட் வழங்குகிறது. இன்னும் கஷ்டப்படுவோருக்கு 10 பைசா SMS, Free SMS என்ற சலுகையை கொடுக்குது. இன்னும் நிறைய ஸ்கீம் இருக்கு.

முக்கியமா மாணவர்களுக்கு படிப்பு விஷயத்தி பகிர்ந்துக் கொள்ளுவதற்கு, புதிதாக வரும் தகவல்களை உடனுக்கு உடன் தெரிவிப்பதற்கு பயன் படுகிறது. அதற்காக எதிரணியினர் மாணவர்கள் தவறான வழியில் பயன்படுத்துறாங்க A ஜோக்ஸ் அடிச்சுகிறாங்க, கெட்ட படங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள் என்று கோஷம் போடாதீங்க. யூத் என்றால் எல்லாம்தான் இருக்கும். நல்ல விஷயங்கள் பலவற்றிக்கும் நம் செல்பேசி பயன்படுகிறது என்று கூறி என் முதல் சுற்று வாதத்தை முடித்து கொள்கிறேன். நன்றி

தலைவர் வானு நான் கொடுக்கும் மிரிண்டாவுக்கு தனிசுவை இந்தாங்க குடிங்க உள்ளம் கேட்குமே மோர்..!

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்