பாக்கிங் ஒயர் பூக்களில் ஒரு அழகிய பூ செண்டு

தேதி: July 27, 2009

5
Average: 5 (3 votes)

இந்த அழகான பாக்கிங் ஒயர் பூக்களை அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள் செய்து காட்டியுள்ளார். படிக்கும் நாட்களில் அவரது ஆசிரியர் கூடை பின்னும் ஒயரில் இதுப் போல் செய்து காண்பித்துள்ளார். அப்போது மூன்று அல்லது நான்கு ஒரே நீளத் துண்டு ஒயர்களாக எடுத்து நெருப்பில் காட்டி ஒன்றாக ஒட்டிக் கொண்டு பின்னர் பூக்கள் செய்ய ஆரம்பிப்பார்களாம். இப்போது அவர் பணியாற்றும் பள்ளியில் குப்பையில் வீசப்பட்டிருந்த பாக்கிங் ஒயர்களைக் கொண்டு அதைப் போல் ஒரு நாள் செய்து பார்க்கும் பொழுது அழகான பூக்களாக வந்ததை இங்கு நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். இப்போது அனைத்தையும் சேகரித்து வைத்து அவரது மாணவர்களுக்குக் கைவேலைப்பயிற்சி சொல்லிக்கொடுத்து வருகிறார்.

 

பாக்கிங் ஒயர் (packing wire)
பச்சை நிற வெற்று ஷாம்பூ பாட்டில்
பச்சை நிற ஃப்லோரல் டேப்
மெல்லிய கம்பி
கபாப் குச்சி
கத்தரிக்கோல்
குரடு

 

பாக்கிங்குகளில் கட்டியிருக்கும் ஒயரை வெட்டும் போது ஒயர் ஒட்டி பொருத்தப்பட்டு உள்ள இடத்தில் வெட்டினால் நீளமான துண்டுகள் கிடைக்கும். அரை மீட்டர் நீள துண்டிலான ஒயரிலிருந்து 3 அல்லது 4 செ.மீ அளவான பூக்கள் செய்யலாம். முன்பே ஷாம்பூ பாட்டிலில் உள்ள லேபிள்களை நீக்கி விட்டு பாட்டிலை நன்கு கழுவி உலர வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒயரை ஒட்டு (பொருத்து) இருக்கும் இடத்தில் அரை செ.மீ அளவு வைத்து வெட்டவும். இப்படி இரண்டு துண்டுகள் ஒன்றன் மேல் ஒன்று ஒட்டிய மாதிரி இருந்தால் ஒயர் வெட்டிய பிறகும் பிரிந்து விடாமல் இருக்கும். ஒயரின் முழு நீளத்தையும் அண்ணளவாக 3 அல்லது 4 மி.மீ அகலம் வருமாறு மூன்று துண்டுகளாகப் பிரித்து வெட்டிக் கொள்ளவும்.
இதுப்போல் மூன்று நீளத் துண்டுகளாக வெட்டியப் பிறகு இடது பக்கம் இருக்கும் ஒயர் துண்டை எடுத்து இரண்டு முறை முறுக்க வேண்டும்.
முறுக்கிய ஒயரை அப்படியே வளைத்து ஒயர்கள் தொடங்கும் இடத்தில் வைத்து வலது கையால் பிடித்துக் கொள்ளவும்.
இரண்டாவது துண்டு ஒயரையும் இதேப் போல் முறுக்கி வளைத்து கொள்ளவும். முதல் வைத்த ஒயரின் மேல் இரண்டாவது முறுக்கிய ஒயரை வைத்து பிடித்துக் கொள்ளவும். கடைசி துண்டு ஒயரையும் இதேப் போல் செய்து வரிசை மாறாமல் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவேண்டும். (இந்த படத்தின் விளக்கத்திற்காக ஒவ்வொரு துண்டு ஒயருக்கும் தனி நிறங்கள் கொடுத்து காண்பித்துள்ளார்).
இப்பொழுது முதலாவதாக முறுக்கிய ஒயர் அடியில் இருக்கும். அந்த ஒயரையும் இதேப் போல் முறுக்கி மூன்று ஒயரைகளையும் பிடித்திருக்கும் இடத்தின் மேலே வைக்கவும். அடுத்த ஒயரையும் இதேப் போல் செய்யவும். இவ்வாறு வரிசை மாறாமல் அடியில் உள்ள ஒயரை முறுக்கி மேலே கொண்டு வந்து வைக்க வேண்டும். இப்படியே ஒயர் முழுவதையும் பின்னி முடிக்கவும். கடைசியில் முடிக்கும்போது மூன்று ஒயர்களில் ஏதாவது ஒரு ஒயர்த் துண்டினால் மற்ற இரண்டு ஒயர் துண்டையும் சுற்றி முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
முடிச்சுப்போட்ட பிறகு நடுவில் இருக்கும் ஒயர்த் துண்டை நீளமான சரிவாக வெட்டவும். மீதி இருக்கும் இரண்டு ஒயர்களையும் தேவைக்கு ஏற்றாற்போல் ஒரே மாதிரி அளவாக வெட்டி விடவும். இப்போது ஒயரில் செய்த பூக்கள் தயார்.
பூக்களின் காம்பு செய்வதற்கு 10 செ.மீ நீளமான ஒரு சிறிய கம்பித்துண்டை எடுத்து, பூக்களில் போட்டுள்ள முடிச்சின் வழியாக நுழைத்து மடித்துக் கட்டிக் கொள்ளவும். பிறகு அந்த கம்பியில் பச்சைநிற கம் டேப்பை கம்பி முழுவதும் சுற்றி மறைத்து விடவும். இதுப்போல் தேவையான அளவிற்கு பூக்கள் செய்துக் கொள்ளவும்.(கம்பிகளை வெட்டுவதற்கு குரடை பயன்படுத்தவும்).
இப்பொழுது உலர்ந்த ஷாம்பூ பாட்டிலை கத்திரிக்கோல் பயன்படுத்தி இலை வடிவங்களை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டி வைத்திருக்கும் இலைகளின் அடியில் கத்திரிக்கோல் முனையினால் ஒவ்வொரு துளையிட்டுக் கொள்ளவும். அந்த துளையில் கம்பித்துண்டை நுழைத்து வளைத்துக் கட்டிக் கொள்ளவும். பிறகு கம் டேப்பினால் இலைகளிலுள்ள கம்பியில் தனித் தனியே சுற்றிக் எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு துண்டுக் கம்பியை எடுத்து அந்த கம்பி முழுவதும் கம் டேப்பை சுற்றிக் கொள்ளவும். கம் டேப் சுற்றிய கம்பியை ஒரு கபாப் குச்சியில் சிறிது இடைவெளி விட்டு சுற்றி வளைத்துக் கொள்ளவும்.
இப்போது செய்து வைத்துள்ள பூக்கள், இலைகள் மற்றும் வளைத்து வைத்துள்ள கம்பி எல்லாவற்றையும் அழகான ஒரு பூ செண்டு போல் இணைத்து முறுக்கிக் கொள்ளவும். வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை கம் டேப்பால் காம்புப் பகுதியைச் சேர்த்துச் சுற்றிக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இமா உபயோகித்தபின் தூக்கி எறியும் பொருட்களை கொண்டு செய்யும் Recyclable crafts செய்து காண்பிக்கறீங்க.வாழ்த்துக்கள்.

Patience is the most beautiful prayer!!

இமா அக்கா ரொம்ப அழகா இருக்கு இந்த பூச்செண்டு. வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ரொம்ப அழகா செய்து காட்டிருக்கிங்க.சூப்பர்!!

தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி உத்ரா, சுபா & மேனகா. :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமாம்மா! //குப்பையில் போட்ட பொருட்கள்// வைத்து செய்து காண்பித்துவிட்டீட்கள்,மிக‌வும் அருமை.
ஆனால் அந்த பின்னல் தான் எனக்கு சரியாக விளங்கவில்லை...ஆமா அந்த ஷாம்பு பாட்டிலை எப்படி வெட்டறது?

இன்னும் இது போல் நிறைய செய்து காண்பிங்க,நிஜமாவே சொல்ல வார்த்தையில்லை அவ்வளவு அழகாயிருக்கு!!!

நன்றி.

ஹாய் உமா,

நலமா? ரோஹித் எப்படி இருக்கிறார்?

பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சந்தேகம் கேட்டது சந்தோஷமாக இருக்கிறது. உங்களுக்கு என்ன மாதிரிக் கைவேலைகள் வேண்டும் என்று கேட்டிருந்தேன், நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள்.

பின்னல்.. பார்க்க, படிக்க சிரமம் போல் தெரிந்தாலும் செய்து பார்த்தால் சுலபம் என்பது புரியும்.
படத்தைப் பார்த்துக் கொண்டே செய்ய ஆரம்பியுங்கள். வெட்டி வைத்துள்ள ஒயரை இடது கையில் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் இடது பக்கமாக உள்ள துண்டை வலது கைப் பெருவிரல் & சுட்டுவிரல் மத்தியில் பிடித்துக் கொண்டு, காட்டி இருப்பது போல் இரண்டு முறை முறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்படியே வளைத்து இடது கைப் பெருவிரலின் கீழ் கொண்டு வந்து வைத்துப் பிடித்துக் கொள்ளுங்கள். (முறுக்கிய மாதிரி நிற்கும்.)
இனி அடுத்த ஒயரை இதே போல் வளைத்து பெருவிரலின் கீழ் (ஏற்கனவே வைத்துள்ளதன் மேல்) பிடித்துக் கொள்ள வேண்டும்.
இப்படியே தொடர்ந்து பின்ன வேண்டும்.

இந்த ஒயர்கள் சிலது வளைப்பது கடினமாக இருக்கும். வளையக் கூடியவற்றைத் தெரிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ஷாம்பூ பாட்டில்... நான் பயன்படுத்தியது Garnier Fructis பாட்டில், மேலே படத்தில் உள்ள சாதாரண கத்தரிக்கோலினால் வெட்டக் கூடியதாக இருந்தது.
முதலில் பாட்டிலின் நடுவே எங்காவது கத்தரிக்கோலினால் குத்தித் துவாரம் செய்து கொள்ளுங்கள். அங்கிருந்து வெட்ட ஆரம்பிக்கலாம்.

பாட்டில் தடிப்பாக இருந்தால் சமயலறையில் பயன்படுத்தும் கத்தரிக்கோலைப் பயன்படுத்தி வெட்டிக் கொள்ளலாம்.
கை வேலைக்குப் பயன்படுத்தும் உபகரணங்களை மீண்டும் சமயலறையில் பயன்படுத்தாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. (கையும் கவனம்.)
ஏற்கனவே இது பற்றி 'பறவை நோட் ஹோல்டர்' குறிப்பிலும் சொல்லி இருந்தேன்.
உங்களுக்குத் தெரிந்ததுதான், ஆனாலும் சொல்ல வேண்டியது என் கடமை. :)

செய்து பாருங்கள். வேறு சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta