ஹாய் ப்ரெண்ட்ஸ்,
எல்லோரும் நலமா? காலைலதான் ஒரு கேள்வி போட்டேன் 'பார்ட்டிஸ் மெனு' குறித்து. தெரிந்தவர்கள் வந்து உங்க ஆலோசனைகளை அங்க சொல்லுங்க. இப்ப இன்னோரு கேள்வி!
எனக்கு திடீரென்று ஒரு நான்கு நாட்களா பல் கூசுகிறது (ரொம்பவே அதிகமா). இடது பக்கம் மேல், கீழ் இரண்டு பக்கத்திலும்... முதலில் ஜில்லென்று தண்ணிர் குடிக்கும்போது மட்டும் இருந்தது. சரி, வார்ம் வாட்டர்/லிக்குயூட் எடுத்துக்கலாமுனு பார்த்தா, இப்ப எது சாப்பிட்டாலும் பயங்கரமா கூசுது. எதோ சாப்பாடு எல்லாம் வலதுபக்கமா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுகிறேன். ஆனால் இந்த தண்ணி குடிக்கும்போது வரும் வலி... ஆஆ...ஆ, கூசுகிற வலி ரொம்ப டீப்பா சுரீரென்று வலிக்கிறது. டென்டிஸ்ட் அப்பாய்ன்மென்ட் கிடைத்து நான் போய் பார்ப்பதற்குள் ஒரு வழியா ஆகிடுவேன் போல இருக்கு. :( இதுக்கு என்ன செய்யலாம்? ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கா? தெரிந்த தோழிகள் வந்து சொல்லி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
பல் கூசுகிறது (ரொம்பவே அதிகமா) Help Please
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
எல்லோரும் நலமா? எனக்கு திடீரென்று ஒரு நான்கு நாட்களா பல் கூசுகிறது (ரொம்பவே அதிகமா). இடது பக்கம் மேல், கீழ் இரண்டு பக்கத்திலும்... முதலில் ஜில்லென்று தண்ணிர் குடிக்கும்போது மட்டும் இருந்தது. சரி, வார்ம் வாட்டர்/லிக்குயூட் எடுத்துக்கலாமுனு பார்த்தா, இப்ப எது சாப்பிட்டாலும் பயங்கரமா கூசுது. எதோ சாப்பாடு எல்லாம் வலதுபக்கமா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுகிறேன். ஆனால் இந்த தண்ணி குடிக்கும்போது வரும் வலி... ஆஆ...ஆ, கூசுகிற வலி ரொம்ப டீப்பா சுரீரென்று வலிக்கிறது. டென்டிஸ்ட் அப்பாய்ன்மென்ட் கிடைத்து நான் போய் பார்ப்பதற்குள் ஒரு வழியா ஆகிடுவேன் போல இருக்கு. :( இதுக்கு என்ன செய்யலாம்? ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கா? தெரிந்த தோழிகள் வந்து சொல்லி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
Susri27((பல் கூச்சம்))
இது கொஞ்சம் சிக்கலான பிரச்சினை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மிக முக்கியமானது(gum disease), முரசு கரைந்தாலும் பல் கூசும். மவுத் வாஷ் பாவிப்பதை நிறுத்துங்கள். அது எல்லோருக்கும் ஒத்து கொள்வதில்லை. ஒவ்வொருநாளும் floss பண்ணுங்கள்.sensodyne (pronamel) என்னும் tooth paste (wal mart)நல்லது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் டென்டிஸ்ட் பாருங்கள்.
வாணி
ரொம்ப நன்றி வாணி!
ஹாய் வாணி,
இன்றுதான் உங்க பதில் பதிவு பார்த்தேன், (வீக்கெண்ட் கொஞ்சம் பிஸி, அதான்). ரொம்ப நன்றி வாணி உங்க டிப்ஸ்க்கு. நான் கண்டிப்பா நீங்க சொன்னமாதிரி பேஸ்ட் மாற்றி பார்க்கிறேன். ப்ளாஸ் (floss) தினமும் பண்ண முடியாமல் போகிறது, இனி ரெகுலரா பண்ண பார்க்கிறேன். டென்டிஸ்டையும் கூடிய விரைவில் பார்க்கனும். மறுபடியும் ரொம்ப நன்றி வாணி உங்க பதிலுக்கு.
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
இனிப்பு அதிக மாக சாப்பிட்டாலும் பல் கூசும்.
பேஸ்ட் மாற்றி இருந்தா கூட பல் கூசும்,
கருஞ்சீரக கொதிக்க விட்டுவாய் கொப்பளிக்கனும்.
சூடா, ரொமப் ஜில்லுன்னு கொஞ்ச நாலைக்கு குடிக்க வேண்டாம்.
இனிப்பு அதிக மாக சாப்பிட்டாலும் பல் கூசும்.
ஓவ்வ்ரு முறை இனிப்பு ஐயிட்டம் சாப்பிடும் போதும் வாய் கொப்பளிக்கனும். இரவில் கண்டிப்பா பல் தேய்க்கனும் நாளைடைவில் சரியாகும்.
Jaleelakamal
ஹாய் ஜலீலா
ஹாய் ஜலீலா அக்கா உங்க டிப்ஸ் சூப்பர்....... இந்த டிப்ஸ் எனக்கும் உபயோகமாகா இருந்தது....... உங்கலுக்கு என் நன்றிகள்.......
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
ஹாய் சுஸ்ரீ MADAM
உங்களுக்கு . கொய்யா பழ மரத்தின் elai கிடைத்தால் அதை வைத்து பல் துலக்குங்கள் . இது பல் kucham வாய் நாற்றம் இவற்றை சரியாக்கும். இதை sayithu பார்த்துவிட்டு உங்கள் பதிலை கூரவும் . நன்றி அன்புடன் divyasankar.
நன்றி ஜலிலா அக்கா & திவ்யா சங்கர்!
ரொம்ப நன்றி ஜலிலா அக்கா உங்க டிப்ஸ்க்கு.
எப்படி இருக்கிங்க? ரொம்ப நாளாச்சு உங்களோட பேசி. மகன் காலேஜ் சேர்ந்து இருப்பாரே? எல்லாரும் நலமா?
எனக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லை. ஒரு வாரம் ரொம்பவே கஷ்டப்பட்டேன், தண்ணிர் கூட குடிக்கமுடியாமல் :(
தினமும் இரவில் பல் துலக்குவது உண்டு. ஸ்வீட்ஸ் அப்பப்ப... :)
மீண்டும் உங்க பதிலுக்கு நன்றி!
நன்றி திவ்யாசங்கர் உங்க டிப்ஸ்க்கும்.
இங்க கொய்யா இலைதான் கிடைக்காது. பரவாயில்லை, உங்க குறிப்பு கட்டாயம் வேற யாருக்காவது உபயோகம் ஆகும் இல்லையா? பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
அப்புறம், வெறும் சுஸ்ரீ போதுமே, மேடம் எல்லாம் வேண்டாம்! ; )
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ஹாய் சுஸ்ரீ
ஓ us -ல கொய்யா elai கிடைக்காதா .ஓகே . உங்களுக்கு இப்போது பல் கூச்சம் சரியாகிவிட்டதா.டாக்டர் கிட்ட போநிந்கலா.ஸ்வீட் அப்பப்ப சாப்டுறதா சொல்லிருகிங்க அத கொஞ்சநாள் avoid பண்ணுங்க .அப்புறம் சுஸ்ரீ -நு கூப்பிட சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் .நான் அறுசுவைக்கு புதியவள் .நீங்கள்தான் என்னிடம் முதலில் பேசி இருகிங்க
do u get any responsze.. i am
do u get any responsze.. i am aslo having this prob :(
கண் கூசுது
ஹாய் ப்ரண்ட்ஸ் எனக்கு இப்போது அடிக்கடி கண் கூசுது இது என்ன பன்னலாம். முன்னாடி இப்படி இருந்து இல்லை. இப்பம் அதாவது புருவம் த்ரெட் பன்னும் போது ரொம்ப கக்ஷ்டமாக இருக்கு. அதுக்க அப்புரம் கத்தினி நினைத்தாலே கூசுச்து. திருமணத்திற்க்கு முன்னாடி நான் கம்பியூட்டரில் ஒரு 5வருடமாக வேலை பார்த்தேன். முழு நேரம் அதில் தான் இருப்பேன். அதன் விளைவு தான் இப்போது இப்படி இருக்கானி தெரியல. ஆனால் இப்பம் த்ரெட் பன்னும் போது தான் ரொம்ப கக்ஷ்டமாக இருக்கு. இது பத்தி யாருக்காவது தெரிந்தால் உதவுங்கள்.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா