கத்திரிக்காய் ஊறுகாய்

தேதி: August 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்திரிக்காய்- 4
பெரிய வெங்காயம் =1=1/2
கடுகு - 1/2தேக்கரண்டி
எண்ணைய் - 4 மேசைக்கரண்டி
கருவப்பிலை -சிறிதளவு
வரமிளகாய-3
மிளகாய்தூள்- -1/2 மேசைக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
புளி - எலுமிச்சம்பழ அளவு


 

கத்திரிக்காய் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் .

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வரமிளகாய கருவப்பிலை போட்டு தாளித்து அதில் நறுக்கின வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நல்லா வதங்கியவுடன் கத்திரிக்காய் போட்டு மிதமான தீயில் நல்லா வதக்கவும்.

கத்திரிக்காய் நல்லா வதங்கியவுடன் மிளகாய்தூள் போட்டு வதக்கி விட்டு அதனுடன் புளிகரைத்து ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் .

நன்றாக சுண்டி வந்தவுடன் இறக்கவும்.

சுவையான் கத்திரிக்காய் ஊறுகாய் ரெடி.


இதை இதை சாம்பார் சாதம் பிரியாணியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்