பிரியமானவர்களுக்கு... இதையும் கொஞ்சம் பாருங்களேன்.

வெளிநாட்டில் வாழும் தோழிகள் மற்றும் இந்தியாவிலிருப்போரும் கொஞ்சம் எனக்கு பதில் கூறினால் மிகவும் உதவியாயிருக்கும்.

இதை படிக்கும் பொழுதே எத்தனை சந்தோஷம் எனக்கு மட்டுமில்லை இங்கே பலருக்குமிருக்கும்(தொல்லை விட்டது என்று).

நான் இந்தியாவிற்கு வரும் ஆகஸ்டு 12 ஆம் தேதி புறப்படுகிறேன் குடும்பத்துடன்.இதை எத்தனை முறை சொல்லுவ? ந்னு சிலர் கேக்கிறது எனக்கு காதில் விழுகிறது,குறைந்த பட்சம் ஒரு மாதம் விடுமுறை.சொல்லிட்டு போகலாம்ன்னு தோணுச்சு அதுமட்டுமில்லாமல் ஒரு சந்தேகமும் கூட...

எனக்கு என்ன சந்தேகம் என்றால்... "எனது கணவர் வீட்டில் அவரது தம்பிக்கும் அவர் அம்மாவிற்கும் உடல்நிலை சரியில்லையாம்(காய்ச்சல்)... அதனால் குழந்தையுடன் முதல் முதலாக செல்லும் எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது".

அதனால் தெரிந்தவர்கள் என்ன என்ன எடுத்துக்கொண்டு போகலாம் என்றும் ப்ரீகாஷன்ஸ் பற்றியும் கொஞ்சம் கூறினால் மிகவும் நன்றாகயிருக்கும்.

குழந்தையின் டாக்டர்,யூஸ் அன்ட் த்ரோ பேப்பர் பிளேட்ஸ்,கப்ஸ்,... போன்று அனைத்தும்,ஹேன்ட் சானிட்டைசர்,பாட்டில் வாட்டர் எல்லாம் பயன் படுத்த சொல்லியுள்ளார்,அதனால் எனக்கு இவையெல்லாமே பேக்ஸ் நிரம்பிவிட்டது.

இன்னும் இதுபோல் குழந்தையுடன் இந்தியா செல்லும் பொழுது என்னவெல்லாம் செய்யலாம் என்று தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

2 வயதிற்குள் எந்த ஒரு நோய் தடுப்பு வேக்சினேஷனும் இல்லையாம்...
இந்நாட்டில்,ஹாஸ்பிட்டல்ஸ்,ஹெல்த் சென்டர்ஸ் எல்லா இடத்திலயும் விசாரித்து பார்த்தாயிற்று.அவனுக்கு போட வேண்டிய ரெகுலர் வேக்சினேஷன்ஸ் மட்டும் தான் போட்டுள்ளோம்.

நான் மேலும் டைலினால் போன்ற சில அத்தியாவசிய மருந்து பொருட்களையும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளேன்.

அமெரிக்க வாழ் தோழிகளே!!! உங்க அனுபவத்தையும் ப்ரீக்காஷன்ஸையும் சொல்லுங்களேன்.

நல்லபடியாக சென்று எந்த பிரச்சனையும் இல்லாமல் திரும்பிவர உங்கள் அன்பும்,பிரார்த்தனைகளையும் கொஞ்சம் கொடுங்களேன்.

அனைவருக்கும் எனது அட்வான்ஸ் நன்றிகள்.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கும்......

உமா நீங்க நல்ல படியா ஊருக்கு போயிட்டு வாங்கப்பா......

நீங்க பயந்தா அந்த எதிரி அலைகள் உங்கலை பயத்தை ஊர்சிதம் செஞ்சுடும்...

குழந்தைக்கு எந்த எந்த மருந்து குடுப்பிங்கலோ அத கையேடு எடுத்துக்குட்டு போங்க.....

ஊருக்கு போரத்துக்கு முன்னாடி நீங்க உங்க fமலி டக்டர்கிட்டா போயி நான் ஊருக்கு போயிட்டுவரனும் அதனால என்குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்டுங்க என்று கேட்டு பாருங்கப்பா..... அப்படி சென்னா டாக்டர்ஸ் கட்டாம் ஊசி போடுவாங்க....

அந்த ஊசி எவ்வளவு நாள் வேலை செய்யும் ( மருந்து) கேட்டுக்கேங்க...

அப்பரம் ஊரில் எப்படி எல்லாம் இருக்கனும் கேட்டுக்கேங்க...

வீட்டில் உங்க குழந்தைக்கு நோய் எதிரிப்பு சக்தி உணவு குடுங்க... அவங்க அப்படி சாப்பிடா நீங்க எங்க வேனும் நாலும் தைரியமா கூட்டுக்கு போகலாம்.....

அதுக்கு சின்ன வெங்கயாம், சின்ன வெங்காய தாள், கேரட், பூண்டு... இப்படி உடம்பில் சேர்த்துக் குட்டிங்கனா.... யாருக்குமே உடம்புக்கு ஒன்னும் வராது....

இவை எல்லாம் நான் கேள்வி பட்டாது தான்ப்பா.... மற்ற தோழிகள் என்ன சொல்ராங்கன்னு பார்கலாம்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஊருக்கு போறீங்களா?ரொம்ப சந்தோசம்ப்பா நீங்க ஊருக்கு போறது நானே போற மாதிரி என்பதால் மட்டும் தான்..மற்றபடி நீங்க சொல்லிகிட்ட காரணம் இல்லப்பா...நான் ரொம்ப நல்ல பொண்ணு..சீக்கிரம் நல்லபடியா திரும்பி வர கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்..

உங்களுக்கு இருக்கிற பயம் நியாயம்தான்..ஆனால் நாம அடிப்படை சுத்தமா இருந்தாலே போதுமானதுதான்..இன்ஃபெக்ஸ்ன் கண்ட்ரோல் பண்றது கொஞ்சம் கஷ்டமான விஷயமும்கூட..உங்க வீட்டுல யாரும் தப்பா நினைக்கலன்னா மட்டும் அம்மா வீட்டுல தங்கிக்கலாம்..சரியான காரணம் சொன்னால் எல்லோரும் ஏத்துப்பாங்கனு நினைக்கிறேன்..மற்றபடி உங்க சூழ்நிலையும் பார்த்துக்கங்க..

*அடிக்கடி கை கால் கழுவி விடுங்க..
*நல்ல சுத்தமான தண்ணீர்(மினரல் வாட்டர் கூட) சூடு பண்ணியே கொடுங்க
*கூல்டிரிங்ஸ் கண்டிப்பா வாங்கி கொடுக்காதீங்க
*வெயில்ல அலைய வைக்காதீங்க..எங்க போனாலும் குடை எடுத்துட்டு போங்க(வெயில் மழை எப்படி இருந்தாலும்)
*ஆல் அவுட், குட் நைட் மாதிரி விஷயங்கள்ள கொஞ்சம் கவனமா இருங்க..இது இல்லாமலும் இருக்க முடியாது..
*தொட்டில், காட் , பெட்சீட் நல்லா கிளீனா அடிக்கடி வாஷ் பண்ணிக்கங்க..
*சாப்பாடு ஊட்ட தண்ணீர் குடிக்க குழந்தைக்கு தனியா வச்சுக்கலாம்..(அடுத்தவங்களோடது யூஸ் பண்ணாமல்)
*குழந்தைக்கு தலைல முடி நிறைய இருந்தால் வேர்க்காமல் பார்த்துக்கங்க..
*தலைக்கு ஊற்றினால் நன்றாக துடைத்துவிடுங்கள்..
*எப்பவும் சாப்பிடும் சாப்பாடே கொடுங்க..புதுசா ட்ரை பண்ணாதீங்க..

மத்தபடி கண்ணுக்கு தெரியும் சின்ன சின்ன விஷயங்கள்ள கவனமா இருந்தாலே போதும்...இது மட்டும் தான் கடந்த மாதம் நான் இந்தியா போன போது கவனத்தில் கொண்டது..சந்தோஷ்க்கு ஒன்னும் பண்ணல, ஆனால் அங்க அடிக்கிற வெயில் ரொம்ப அதிகம் அதனால மட்டும் கால்ல கொஞ்சம் பரு போல வந்தது..2,3 நாள்ல்ல அதும் சரியாகிவிட்டது..கடவுள வேண்டிக்கிட்டு கவனமா போய்ட்டு வாங்க..

பாப்ஸ் மேடம் ,
கவலை படாதீங்க குழந்தைக்கு இன்டியாயப ோய் இறங்கின உடனே முடிந்தால் ஐர்போர்டிலயே சளி மருந்து இருந்தா கொடுத்துடுங்க அது கொஞ்சம் இன்பிச்டிஒன்ஸ் வராம இருக்க உதவும் மத்தபடி மற்ற தோழிகள் சொன்ன மாதிரி குழந்தைக்கு எல்லாமே தனியவே யூஸ் பண்ணுங்க அடிகடி குழந்தையின் கைகளை கழுவி விடுங்க ஏறு வெயிலில் கண்டிப்பாக வெளியில் தலை காட்ட அனுமதிக்காதீங்க நல்லா நிறைய ஜூசியான பழங்கள் கொடுங்கள் வீட்டிலேயே பிரெஷா ஜூஸ் செய்து குடுங்க மினரல் வாடேரெல்லாம் வேண்டாம்னுதான் சொல்லுவேன் எங்க இருந்தாலும் அந்த தண்ணிய நல்லா கொதிக்கவச்சு வெள்ளை காட்டன் துணியில் வடிகட்டி பிலச்கில் வைத்து கொடுத்தாலே போதும் அதே .போல வெப்ப நிலைக்கு தகுந்த மாதிரி உணவு குடுங்க.

உங்கள் பயணம் இனிதே அமைய நாங்கள் அனைவரும் வேண்டிகொள்கிறோம் நீங்க எப்ப இங்க திரும்பி வருவீங்க ஏன்னா நான் ச்ப்டம்பர்ல ஊருக்கு போறேன் மறுபடியும் இங்க திரும்பி வர மாட்டேன் இந்திய போனா என்னால அறுசுவைல கலந்துக்க முடியுமான்னு தெரில அதுனாலதான் கேக்குறேன் .தப்பா நினைகலனா உங்கள பத்தி எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறேன் .

அன்புடன்,
திவ்யாஆறுமுகம் .

KEEP SMILING ALWAYS

உமா!!
நல்லபடி ஊருக்குப் போய்வர என் வாழ்த்துக்கள். எதையும் அதிகம் யோசிக்கப்படாது. அதிகம் யோசித்து பயப்படும்போதுதான் பிரச்சனைகளும் அதிகமாகும். மாமி வீட்டிலுள்ளவர்களுக்கு, காய்ச்சல்தானே. இன்னும் நாளிருக்குத்தானே, சீக்கிரம் குணமாகிவிடவேண்டும் என கடவுளை வேண்டுங்கோ.

மற்றும்படி குழந்தையை எந்நேரமும் சுத்தமாக வைத்திருக்கப்பாருங்கள். தண்ணி, ஒரேஞ் யூஸ் அடிக்கடி கொடுங்கள். புது உணவுகளைத் திணிக்க வேண்டாம். குழந்தைக்கும் காய்ச்சல் வந்துவிடுமோ எனப்பயந்து, பொத்திப் பொத்தி வைத்திருக்க வேண்டாம். ஊரில் இருப்பவர்களுக்கும் குழந்தையை தூக்கி விழையாடும் ஆசை இருக்கும்தானே.

கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளை வணங்குங்கள் எல்லாம் நல்லபடியே அமையும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உமா எனக்கு இத பத்தி எதுவும் தெரியல நான் அங்க இருந்து தான் இங்க கூட்டிட்டு வந்தேன் இனிமேதான் போகணும் போகும்போது எனக்கு இந்த லிங்க் உதவியாக இருக்கும் மிக்க நன்றி நீங்க ஊருக்கு பயப்படாம போயிட்டு வாங்க இன்னும் ரெண்டு வாரம் இருக்கு அதுக்குள்ள அவர்களுக்கு சரி ஆகி விடும். உங்களுக்கு பயணம் இனியதாகவும் பாதுகாப்பாகவும் அமைய என்னுடைய பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துக்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

பிரபா,தாமரை,திவ்யா ஆறுமுகம்,அதிரா,லக்ஷிமிஷங்கர் அனைவருக்கும் நன்றி.

உங்கள் ஆலோசனைகளை கடைபிடிக்க கண்டிப்பாக முழு முயற்சி செய்கிறேன்.

ஹாய் உமா நல்ல படியா போய்டு வாங்க...0என் பொண்ணுக்கு நம்ப உரு பால் சேராது நீங்க அங்க என்ப்ன கொடுக்குறீங்களோ அதையே எடுத்துடு போங்க...பால் பொடியா இருந்தா சவுகரியம்.
ஊரில் கிடைக்கும் பிஸ்கட் அது இது எதுவும் வெளிநாட்டு பிள்ளைகளுக்கு சில நாள் சேராது பிறகு பழகிவிடும்..வீட்டில் இருப்பவர்களுடன் ப்ரச்சனை இல்லை காய்ச்சல் அதற்குள் மாறிவிடும் ஆனால் வெளிநாட்கள் வரும்பொழுது தான் கவனிக்க வேண்டும்..நீங்க பல வீடுகளுக்கும் போவீங்க அல்லது உங்களை பாக்க பலரும் வருவாங்க அப்ப தான் கவனிக்கனும்.
அடிக்கடி கைய்ய கழுவி விடுங்க...சில ஆட்களுக்கு மண்டையில் என்ன சொன்னாலும் ஏறாது பிள்ளைக்கு ஒத்துக்காது கொடுக்காதீங்க என்றாலும் அதுக்கென்ன ஒருநாள் சாப்பிட்டா என்ன ஆக போகுதுன்னு கொடுப்பாங்க விடாதீங்க..ஸ்ட்ரிக்டா சொல்லுங்க வேண்டாம்னெறு.மற்றவர்கள் வெளியில் வாங்கின பலகாரம்,மிட்டாஇ அது இதுன்னு குழந்தை கைய்யில் கொடுப்பாங்க ..ஆசையா தான் இருந்தாலும் அது சில சமயம் ஒத்துக்காது..சொல்லி புரிய வச்சுடுங்க இல்லைன்னா குழந்தையின் கைய்யில் வேறெதையாவது கொடுத்துட்டு அதை வாங்கி பேகில் போட்டுடுங்க.
தினசரி ஒத்துக் கொண்டால் தலைக்கு குளிக்க வைக்கலாம்..நம்மூரில் அழுக்கு சீக்கிரம் படியும்..அட்லீஸ்ட் தினம் இரவு படுக்கும்முன் உடம்பை துடைத்து விட்டு படுக்க வைய்யுங்க.
பெரிசாஅ பயப்படும்படியா எதுவும் இருக்காது..குழந்தை நல்லா எஞாய் பன்னும் ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க

உமா பாக்கிங் எல்லாம் முடிந்ததா.......

நீங்கள் கவனிக்க வேண்டியவை.

குழந்தைக்கு மலேரியா தடுப்பு அவசியம். எங்குள்ள மருத்துவர்கள் அதற்கென சில மாத்திரைகளை பரிந்துரைகின்றனர். என் குழந்தைக்கு அவர்கள் Malaria prophylaxis என்ற மாத்திரை கொடுத்துள்ளனர். எங்கிருந்து கிளம்புவதற்கு முன்பிருந்தே கொடுக்க வேண்டும் அதே போல் ஊருக்கு பொய் தினமும் ஆப்பிள் சாஸுடன் அல்லது வேறு எதுவுடனோ சேர்த்து கொடுக்கலாம். ஊருக்கு வந்த பின்பு 5 நாட்கள் வரை கொடுக்கவும்.

கொசு வத்தி சுருள் எதுவும் பயன் படுத்த வேண்டாம். நெட் பயன்படுத்துங்கள்.

Bottled தண்ணீரையே பயன் படுத்தவும்.

அவர்களுக்கு லூஸ் மோஷன் அனால் அவர்களுக்கு "Pedialite" தண்ணீரில் கலந்து 5 நிமிடதற்கு ஒரு முறை ஒரு வாய் குடிக்க தரவும். வாந்தி எடுத்தால் ஒரு மணி நேரம் நிறுத்தி விட்டு பிறகு பார்த்து விட்டு கொடுக்கவும். ஆறு மணி நேரம் வரை உணவு கொடுக்காமல் இதுவே கொடுக்கவும்.

அவர்களுக்கு கொடுக்கும் பால் "pasteurised" ஆக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் இங்கிருந்தே "advanced milk powder" வாங்கி எடுத்து செல்வது நல்லது. அதை bottled water சேர்த்து கொடுக்கவும்.

இங்கு கிடைக்கும் flavored cereals எடுத்து செல்லவும்.

பிரெஷ் ஜூஸ் மட்டுமே கொடுக்கவும்.

எனக்கு தெரிந்தவற்றை சொல்லயுள்ளேன்.

உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிகவும் நன்றி தளிகா,நீங்க சொல்றது 100 க்கு 100 உண்மை சில ஆட்களுக்கு என்ன சொல்லி நானும் புரியவைக்கிறதுன்னு யோசித்து கொண்டுதான் இருக்கிறேன்.
த‌லை முடி இப்போ பொண்ணுங்க‌ மாதிரி அரை முதுகு தூர‌ம் இருக்கு,அதை க‌ழிக்க‌(மொட்டை)தானே இந்த‌ ப‌ய‌ண‌மே!!! அத‌னால‌ த‌லையாய‌ பிர‌ச்ச‌னை ஒன்று தீர்ந்த‌து...

லாவ‌ண்யா,இன்னும் பேக்கிங் ச‌ரியா முழுமையாக முடிய‌ல‌... லாஸ்ட் மினிட் வ‌ரை முடியுமா ந‌ம்ம‌ பேக்கிங்...

என‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம்,அந்த‌ அட்வான்ஸ் மில்க் ப‌வுட‌ர் என்ப‌து ஃபார்முலா வா? என‌க்கு ச‌ரியாக‌ புரிய‌ல‌ அதை கொஞ்ச‌ம் தெளிவாக‌ சொல்லுங்க‌ளேன்.
நான் பார்த்த‌து சிமிலாக் பார்முலா ப‌வுட‌ர் என்று தான் இருக்கிற‌து.இல்லை நீங்க‌ சொல்ற‌து வேறு சாதார‌ண‌ பால் ப‌வுட‌ரா என்று கொஞ்ச‌ம் சொல்லுங்க‌ளேன்....
I saw that "Advanced milk powder" in Similac product.

நான் எதிர்பார்ப்ப‌து சாதார‌ண‌ பால் ப‌வுட‌ராக‌ இருந்தால் தான் ந‌ல்ல‌து என‌!!! அவ‌னுக்கு ஃபார்முலா குடித்த‌தே இல்லை அது சுத்த‌மாக‌ பிடிக்க‌வும் பிடிக்காது.

அது என்ன‌ என்றும் அத‌ன் பிராட‌க்ட் நேமும் (Product name)கொஞ்ச‌ம் சொல்லுங்க‌.
அவச‌ர‌ ப‌தில் தேவை ப்ளீஸ்... யாராவ‌து தெரிஞ்சவங்களும் சொல்லுங்க‌ளேன்...

மிக‌வும் ந‌ன்றி.

மேலும் சில பதிவுகள்