வேஸ்ட் பேப்பர் கப்பை கொண்டு எளியமுறையில் முயல் செய்வது எப்படி?

தேதி: August 3, 2009

3
Average: 3 (5 votes)

 

வேஸ்ட் பேப்பர் கப் - 2
ரிப்பன் லேஸ் - ஆரஞ்சு மற்றும் பச்சைநிறம்
பெவிக்கால்
வெள்ளை நிற சாட்
பேப்பரிக் பெயிண்ட்(சிவப்பு நிறம்)
கத்திரிக்கோல்
கருப்புநிற ஸ்கெட்ச்
ஸ்டாப்ளர்
பென்சில்
ஊசி
நூல்

 

முதலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வெள்ளைநிற சாட் பேப்பரில் படத்தில் காண்பித்திருப்பதுப் போல் முயலின் கால் மற்றும் காது வடிவங்களை தனித்தனிப் பாகங்களாக வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
சாட் பேப்பரில் வெட்டி வைத்திருக்கும் முயலின் காது மற்றும் கால் பகுதியின் ஓரங்களை சுற்றிலும் கால் இன்ச் அளவு விட்டுவிட்டு மற்ற இடங்கள் முழுவதும் பேப்பரின் வடிவத்தில் சிவப்புநிற பேப்பரிக் பெயிண்டை அடித்து காய விடவும்.
வேஸ்ட் பேப்பர் கப் ஒன்றில், கப் சாய்ந்து விடாமல் நிற்பதற்கு ஏதேனும் தேவையற்ற தெர்மாக்கோல் சிலவற்றை வெட்டிப் அதனுள் போட்டு வைக்கவும். மற்றொரு கப்பின் விளும்பில் பெவிக்காலை தடவி அதை கீழே வைத்திருக்கும் கப்பின் மீது ஒட்டவும். ஒட்டிய பிறகு இரண்டு கப்பையும் லேசாக அழுத்தி சில நிமிடங்கள் காயும் வரை பிடித்திருக்கவும்.
பெவிக்கால் காய்ந்த பிறகு ஒட்டிய கப்பின் வரும்பு தெரியாமல் இருக்க பச்சை நிற ரிப்பனை கப்பின் சுற்றளவுக்கு தகுந்தாற் போல் வெட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு ரிப்பனில் பெவிக்காலை தடவி அதை கப்பின் வரும்பை சுற்றிலும் ஒட்டவும்.
பெயிண்ட் செய்து வைத்திருக்கும் முயலின் கால் பகுதி காய்ந்தவுடன் அதன் கூர்மையான இடத்தில் பெவிக்காலை தடவி ரிப்பன் ஒட்டிய கப்பின் அடியில் வைத்து ஒட்டவும். கால் பார்ப்பதற்கு சற்று குறுகலாக இருக்க வேண்டும்.
காது பகுதியிலும் பெயிண்ட் காய்ந்த பிறகு கருப்பு நிற ஸ்கெட்ச்சை கொண்டு மேலே சிறு சிறு கோடுகள் போல வரைந்துக் கொள்ளவும்.
பிறகு மேல் பகுதியில் இருக்கும் கப்பின் நடுவில் கருப்புநிற ஸ்கெட்ச்சை வைத்து இரண்டு கண்கள் மற்றும் மூக்கு வரைந்துக் கொள்ளவும். வரைந்த மூக்குப் பகுதிக்கு கீழே சிவப்புநிற பெயிண்டை கொண்டு வாய் போன்று வரையவும்.
அதன் பிறகு ஆரஞ்சு நிற ரிப்பன் துணியை வைத்து போவ் போல போட்டுக் கொள்ளவும். போவ் பிரியாமல் இருக்க அதன் நடுவில் இரண்டு முறை ஸ்டாப்ளர் பின் போட்டுக் கொள்ளவும்.
பச்சை நிற ரிப்பன் கட்டியிருக்கும் கப் பகுதியில் மூக்கு பகுதிக்கு நேராக பெவிக்கால் வைத்து செய்து வைத்திருக்கும் போவ்வை அதில் வைத்து ஒட்டவும்.
மேல் பகுதியில் இருக்கும் கப்பின் பின்புறம் செய்து வைத்திருக்கும் காதுப்பகுதியை ஒட்டவும். முன் பகுதியிலிருந்து பார்க்க V வடிவில் இருக்க வேண்டும்.
ஆரஞ்சு நிற ரிப்பன் லேஸை தேவையான அளவு எடுத்துக் கொண்டு, அதை சமமாக மடித்து அதன் நடுவில் கட்டைவிரலை வைத்து எதிர் எதிர் திசையில் மடிக்கவும். ஒவ்வொரு தடவை மடிக்கும்பொழுது கட்டைவிரலை மேலே வைத்து பிடித்துக் கொள்ளவும்.
ரிப்பன் முழுவதும் பின்னி முடிந்ததும் ஏதேனும் ஒரு ரிப்பனை பிடித்துக் கொண்டு மேல் நோக்கி தள்ளினால் ரோஸ் போன்று வடிவம் கிடைக்கும்.
பிறகு அதை அழுத்தமாக பிடித்துக் கொண்டு ஊசியில் நூலை கோர்த்து ரோஸின் அடிவழியாக ஊசியை விட்டு இழுக்கவும். ஊசியில் ஒரு மணியை கோர்த்து ரோஸின் நடுவில் வைத்து தைத்துக் கொள்ளவும்.
செய்த ரோஸின் பின்புறம் பெவிக்கால் தடவி அதை போவ்வின் நடுவில் வைத்து ஒட்டவும். இப்பொழுது வேஸ்ட் பேப்பர் கப்பில் மிகவும் சுலபமாக செய்து அசத்தக்கூடிய அழகிய முயல் ரெடி.
திருமதி. செண்பகா பாபு அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த முயல் பொம்மையை செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார். தயாரிப்பில் உதவி: செல்வி. பத்மா மற்றும் செல்வி. ரேவதி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

முயல் மிகவும் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள் பாப்பி, பத்மா & ரேவதி. :)
இமா

‍- இமா க்றிஸ்

அருமையாகவும் அழகாகவும் இருக்கும் முயலை விளக்கமாக செய்து காட்டியவருக்கு நன்றி. பாராட்டுக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

இந்த முயல் ரொமப் சுப்ப்ப்ப்ரா இருக்குப்பா....... இத செஞ்சவங்க யாருப்பா? பெயரே இல்லை....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta