என் பையன் ஜடியில கொஞ்சம் யூரின் பாஸ் பண்ணிட்டு

என் பையன் ஜடியில கொஞ்சம் யூரின் பாஸ் பண்ணிட்டு அதுக்கப்புறம் toiletla போய் போறான் என் கணவர் இது நீர்சுருக இருக்கும்னு சொல்றாரு எனக்கு என்னவோ பயமா இருக்கு கொஞ்சம் பதில் தருவீங்கள ப்ளிஸ் .பயனுக்கு மூணு வயசாகுது .

நன்றிகளுடன்,
திவ்யா ஆறுமுகம் .

.

என் பையனுக்கும் 3 வயசு ஆகுது ..பாத்ரூம் நல்லா பழகியாச்சு ..இருந்தாலும் இப்போ இப்படி கொஞ்சம் ஜட்டி ல் பண்ணிட்டு அப்புறம் ஓடுறான் பாத்ரூம்க்கு.. சில நேரம் 2 பாத்ரூம் கூட அப்படி பண்ணுறான் .. நல்லா பழகின அப்புறம் இப்படி பண்ணுவது கஷ்டமாக இருக்கிறது...இப்படி பண்ணுவார்களா தெரியுமா ???
திவ்யா பையன் சரியாக பன்னுகிரனா இப்போ??

Friends make Life Beautiful !!!

யாருமே பதில் போடவில்லையா ?? :(

Friends make Life Beautiful !!!

ஒரு இடைவேளைக்கு அப்புறம் அவங்கள பாத்ரூம் கூட்டிட்டு போங்கபா, விளையாட்டுத்தனமா இருக்கிறதுனால கடைசி வரைக்கும் அடக்கி வைச்சுப்பாங்க, அப்புறம் அவசரமானதும் கட்டுப்படுத்தமுடியாம போயிடறாங்க இது சாதாரணம்தான் பயப்பட ஒண்ணுமில்லை. என் பையன் அப்ப பயங்கரமா டேன்ஸ் ஆடுவான்;)

Don't Worry Be Happy.

அனு சில குழந்தைகள் விளையாட்டு சுவாரசியத்தில் சிறுநீரை அடக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களால் இதற்குமேலும் அடக்க முடியாதுன்னு வரும் போதுதான் வாஷ்ரூமுக்கு ஓடுவாங்க. அதற்குள்ளாகவே ஜட்டியில் கழித்து விடுவார்கள்.

குழந்தையிடம் பேசி புரிய வைக்க முயலுங்கள். 5வயதுக்கு மேலுள்ள குழந்தை என்றால் அப்படி செய்யும் போது உள்ளாடைகளை அவர்களையே அலச சொல்லுங்கள். எனக்குத் தெரிந்த குழந்தையிடம் இப்படித்தான் மாற்றினார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவி , ஜெயா..
நான் சொல்லி கொண்டே தான் இருக்கிறேன் ..அவன் காதில் வாங்குவது மாதிரி தெரியவில்லை ..முயற்சிக்கிறேன் ..
உங்கள் ரெண்டு பேரிடம் முதன் முதலில் பேசுறேன் ..சந்தோசம் ..
கவி நானும் நாகர்கோயில் தான் :)

Friends make Life Beautiful !!!

அவர்கள் விளையாட்டு சுவாரசியத்தில் சிறுநீர் கூட கழிக்க போவதில்லை. அந்த இரண்டு மூன்று நிமிடம் கூட அவர்களுக்கு விளையாட்டு முக்கியம். உள்ளாடை நனைந்த பிறகே போவார்கள். நீங்களே இரண்டு மணி நேர இடைவேளிகொரு தடவை கூடி சென்று விடுங்கள். வர மறுத்தால் ஏதாவது விளையாட்டு காட்டி கூட்டி செல்லுங்கள். பாத்ரூம் அருகே ஒரு மாக்னடிக் சார்ட் வைத்து அவனிடம் சொல்லுங்கள் ஒவ்வொரு தடவை நீ வாஷ்ரூம் சென்று வந்த பின் இந்த மாக்னடிக் ஸ்டார் அல்லது எதாவது மாக்னடிக் பொருளை இந்த சார்ட்டில் ஓட்ட வேண்டும். இதுவும் அவங்களுக்கு ஒரு விளையாடாகி விடும். முயற்சித்து பாருங்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அங்கே பதில் போட்டுவிட்டு பார்த்தால் இங்கேயும் பதிவு போட்டுருக்கீங்க ..ரொம்ப நன்றி :)
நானும் 2 மணிக்கொரு முறை கூடி செல்கிறேன் அடம் பிடிக்குறான் ..நீங்க சொல்வது மாதிரி செய்து பார்க்கிறேன் ..விளையாட்டு போல அல்லவா..பிடிக்கும் என்று நினைக்கிறேன் ...

Friends make Life Beautiful !!!

என் அக்கா பையன்கள் ஒருவனுக்கு 11 வயது இன்னொருவனுக்கு 7 வயது. இருவரும் இரவில் தூங்கும்போது சிறுநீர் கழிக்கிறார்கள். இதனால் வேறு யார் வீட்டிலாவது தங்க வேண்டும் என்றால் அக்கா ரொம்ப யோசிக்கிறாள். இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா? இந்த பழக்கத்தை எப்படி மாற்றுவது?

கவி, அனு - நான் நாகர்கோயிலில் தான் காலேஜ் படிச்சேன்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

இரவு 7 மேல் liquid எதுவும் குடுக்க வேண்டாம் ..இரவு தூங்கிய பின் நடுவில் 1 அல்லது 2 முறை எழுப்பி பாத்ரூம் போகவைக்க சொல்லுங்க ..கோபபடாமல் பொறுமையாக பேசி புரிய வைக்க சொல்லுங்க ..பெரிய பிள்ளைகள் ஆகிவிட்டதால் எதற்கும் ஒரு தடவை டாக்டரை consult செய்வது நல்லது ..
கிருத்திகா நீங்க எந்த காலேஜ் ல் படிச்சீங்க ?? நான் S .T .ஹிந்து காலேஜ்..

Friends make Life Beautiful !!!

ரொம்ப நன்றி அனு. நான் அக்காவிடம் சொல்கிறேன். ஹோமியோபதி எடுத்து கொண்டு இருந்தான். ஆனால் இப்பொழுது சரிவர சாப்பிடுவது இல்லை. இன்னொரு தடவை டாக்டரிடம் போக சொல்கிறேன்.
நான் N.I. காலேஜில் படிச்சேன்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்