பால் கொழுக்கட்டை

தேதி: August 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

புழுங்கல் அரிசி - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
வெல்லத் தூள் - அரை கப்
ஏலக்காய் - 3
பால் - அரை கப்


 

புழுங்கல் அரிசியில் தண்ணீர் ஊற்றி 1 அல்லது 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
அரிசி ஊறிய பிறகு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு தேங்காய் துருவலை சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவின் பதம் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் போடவும்.
வெல்லம் கரைந்ததும் அதில் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
வெந்ததும் அதில் பாலை ஊற்றி ஒரு முறை கிளறி விடவும்.
5 நிமிடம் கழித்து உருண்டைகள் நன்கு வெந்ததும் இறக்கி வைத்து விடவும்.
இறக்கி வைத்து 5 நிமிடம் கழித்து பரிமாறவும். அப்பொழுது தான் பாலில் உருண்டைகள் நன்கு ஊறி சுவையாக இருக்கும்.
பிராமண சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள <b> திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன் </b> வழங்கிய குறிப்பு இது. மாதர் சங்கத் தலைவி, சமூக சேவகி, நல்ல குடும்பத்தலைவி என்று பல முகங்களை உடைய இவர், அறுசுவை நேயர்களுக்கு ஏராளமான பிராமண உணவுகள் தயாரிப்பை செய்து காட்டவுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன் அம்மா உங்கலுடைய குறிப்பு எல்லாம் நல்ல இருக்கு....

நான் தேங்காய் துருவல் செர்க்காமல் செய்வேன்ம்மா.......

திரும்பவும் இந்த முறையில் செஞ்சி பார்க்கிரேன்...

உங்கள் சேவைக்கு என் நன்றிகள்மா....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

This is my favourite sweet.i waiting for this.amma,yuo told milk,it is boiled or not boiled milk?pls reply to me.i waiting to do this soon

hi every body,

we have to add boiled milk or fresh milk for pal kozhukattai.if anybody knows means pls help for me.

usually for any type of cooking we should add boiled and warm milk

very tasty

very nice