மெகந்தி டிசைன் மற்றும் தயாரிக்கும் முறை

தேதி: August 6, 2009

5
Average: 4.3 (12 votes)

மருதாணி என்று நம் தமிழ்மொழியில் அழைக்கும் இதன் பயன்கள் ஒன்றிரண்டு அல்ல. மனிதனின் உடலுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை உபயோகப்படுத்தப்படும் ஒரு மருத்துவ குணம் மிக்க மகத்தான மூலிகையாகும். மருதாணி இலை தலையில் முடி உதிர்வதற்கு, முடியில் சாயம் பூசுவதற்கு, பாத வெடிப்புகளுக்கு இப்படியாக இதன் பட்டியல் நீள்கிறது. அழகுக்காக கை மற்றும் கால்களில் இட்டுக் கொள்ளுவதால் உடலும் குளிர்ச்சி அடைக்கிறது.

முற்காலத்தில் மருதாணி மரத்தின் இலையை அரைத்து நேரடியாக பயன்படுத்தி வந்தனர். தற்போது அதே இலைகளை உலர்த்தி பதப்படுத்தப்பட்டு பலவகைகளில் பயன்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று, அழகுக்காக கை, கால்களில் மருதாணி இட்டுக் கொள்ளவது. அறுசுவையில் உடல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் மற்றும் அழகு குறிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கும் பாப்ஸ் என்கிற திருமதி. உமா அவர்கள் நேயர்களுக்காக இந்த மெகந்தி டிசைன் மற்றும் தயாரிக்கும் முறையை வழங்கியுள்ளார்.

பச்சை இலைகளை அரைத்து நேரடியாக மருதாணி இட்டுக் கொள்ளவது மிகவும் நல்லது. அதே இலைகளை நிழலிலேயே உலர்த்தி பொடி செய்து மெல்லிய துணியால் சலித்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது கீழ்க்கண்ட முறையில் மருதாணி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

கோன் செய்யும் முறை
1. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் மூன்றையும் ஒன்றாக கலந்து சற்று கெட்டியான பேஸ்ட் போன்று செய்து வைத்து கொள்ளவும். பாலித்தீன் பேப்பரை மிகவும் தடிமனாகவும் இல்லாமல், மிகவும் மெல்லியதாகவும் இல்லாமல் சற்று தடித்த பேப்பராக எடுத்து அதனை கோன் போல் சுருட்டி பசைடேப் கொண்டு ஒட்டி விடவும். செய்து வைத்திருக்கும் கோனில் மருதாணி கலவையை காற்றில்லாமல், இடைவெளியில்லாமல் நிரப்பி மேலே இருக்கும் பகுதியை நன்கு இறுக்கமாக பசை டேப் அல்லது ரப்பர் பேண்ட் கொண்டு கட்டிவிட வேண்டும்.

2. நல்ல தடிமனான பாலித்தீன் பாக்கெட்டாக இருந்தால் சுலபமாக அதில் மருதாணி கலவையை நிரப்பி கோன் போன்று இறுக்கமாக ரப்பர் பேண்ட்டால் கட்டிவிடலாம்.

3. க‌டைக‌ளில் மிகவும் எளிதாக கிடைக்கும் தயார் செய்து உட‌னே ப‌ய‌ன்ப‌டுத்த‌க்கூடிய‌ கோன்களை வாங்கி கொள்ள‌லாம்.

கைகள், கால்களில் மருதாணி இடும் முறை

முதன் முதலாக கோன் இடுவதற்கு முயற்சிப்போர் கூட செய்து பார்க்கலாம். முதலில் பேப்பர் அல்லது கைகளில் உங்களுக்கு தெரிந்த டிசைன்களை கோலம் போடுவது போல் போட்டு பயிற்சி பெற வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக தெரிந்தாலும் சில முயற்சிகளுக்கு பிறகு வெற்றி காணலாம். இதுப்போன்று சாதாரண நாட்களில் தேவையில்லாத பொழுது செய்து பார்க்கலாம்.

 

மருதாணி பேஸ்ட் செய்ய தேவையானப் பொருட்கள்:
தயார் செய்து வைத்த பொடி - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு தேக்கரண்டி
யூக்கலிப்டஸ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
மருதாணி இடும்பொழுது தேவைப்படும் பொருட்க‌ள்:
தயாரித்த/ ரெடிமேடாக கடையில் வாங்கிய கோன் - 1
காதிற்கு பயன்படுத்தும் பஞ்சு குச்சிகள் - 2
பல் குத்தும் குச்சிகள் - 2
துடைப்பதற்கு தேவையான பேப்பர் டவல்/துணி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு தேக்கரண்டி

 

முதலில் சர்க்கரை, எலுமிச்சைச்சாறு இரண்டையும் ஒன்றாக கலந்துக் வைத்துக் கொள்ளவும். கலந்து வைத்திருக்கும் கலவை பிசுபிசுப்பாக இருக்கும். கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவி உலர விட்டு பிறகு சர்க்கரை, எலுமிச்சைச்சாறு கலந்த கலவையை மருதாணி இடும் கைகளில் தேவையான அளவு எடுத்து நன்றாக பூசிக் கொள்ளவும்.
கையில் பூசியிருக்கும் கலவை லேசாக உலர்ந்ததும் உங்களுக்கு பிடித்த விருப்பமான டிசைனை வரைய ஆரம்பிக்கவும்.
கோனில் போடப்படும் டிசைன் மிகவும் மெல்லியதாக வேண்டுமானால் கோனை மிகவும் நுனிப்பகுதியில் வெட்டி விட்டு மருதாணி இடவும். சிறிது தடிமனான டிசைனாக போட விரும்புவோர் சற்று மேலே தள்ளி வெட்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு டிசைனை போடும்பொழுது ஏற்படும் சிறு தவறு மற்றும் பிசறல்களை காதிற்கு பயன்படுத்தபடும் பஞ்சு குச்சிகள் அல்லது பல் குச்சிகளைக் கொண்டு கவனமாக நீக்கி துடைத்து விட வேண்டும்.
படத்தில் உள்ளதுப் போல் முதலில் உள்ளங்கைகளில் டிசைனை போட்டுக் கொள்ளவும்.
அடுத்து ஐந்து விரல்களிலும் இதேப் போல் டிசைனை வரைந்துக் கொள்ளவும். கை முழுவதும் போட்டு முடித்தவுடன் சிறிது நேரம் மருதாணியை உலர விடவும்.
மருதாணி உலர்ந்தவுடன் மீண்டும் சர்க்கரை, எலுமிச்சைச்சாறு கலவையை ஒரு பஞ்சில் தொட்டுக் கொண்டு அதன் மேல் தடவவும். சராசரியாக 3 மணி நேரமும், அதிகபட்சம் 5 மணி நேரமும் வைத்திருக்கவும். அல்லது குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது வைத்திருக்க வேண்டும்.
கையில் போட்டிருக்கும் மருதாணி நன்கு காய்ந்தபிறகு ஒரு மெல்லிய கத்தி அல்லது ஸ்பூன் கொண்டு சுரண்டி எடுத்து விட்டு கையை கழுவி விடவும். நன்றாக துடைத்து விட்டு மருதாணி இட்ட கைகளில் மீண்டும் நீர் படாதவாறு இருக்க வேண்டும். இதனால் மருதாணி இட்ட கையில் லேசாக தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம்.
மருதாணி இட்டு அடுத்தநாள் கையை பார்க்கும்பொழுது மருதாணியின் நிறம் இன்னும் கூடி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். நன்றாக பழகியப்பின்னர் பார்ட்டி, திருமணம், சாதாரணமாக கொஞ்சம் கிராண்ட்டாக நம் தேவைக்கேற்றவாறு மருதாணியை போட்டுக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா பண்ணி இருக்கீங்க. பார்க்கவே ஆசையா இருக்கு :) எனக்கு ஒரு சந்தேகம். நான் சென்னைக்கு போகும்போதெல்லாம் குறைந்தது ஒரு முறையாவது parlour போய் மெஹந்தி போட்டுப்பேன். அவங்க போடறதுக்கு முன்னால Eucalyptus oil வச்சு கை துடச்சிட்டு மெஹந்தி போடுவாங்க. போட்டு முடிச்சதுக்கு அப்பறம்தான் சர்க்கரை தண்ணீர் போட்டு விடுவாங்க. நீங்க முதலிலேயே சர்க்கரை தண்ணீர் போடா சொல்லி இருக்கீங்க. இப்படி பண்ண மெஹந்தி கைல நல்ல ஒட்டுமா?

இன்னொரு சந்தேகம். சாரி ஒரு சந்தேகம்னு சொல்லிட்டு ரெண்டு சந்தேகம் கேக்கறேன் :) இடது கைல நம்மளால வெச்சிக்க முடியும். வலது கைல வெக்க கஷ்டம் இல்லையா? cuz am right handed. இதுக்கு எதாச்சும் வழி இருக்கா?

By the way உங்க designs ரொம்ப சிம்பிள் ஆகவும் அழகாகவும் இருக்கு :) well done :)

அன்புடன்
உமா

Oh,my gosh...அட்மின் அண்ணா,மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

என‌து முத‌ன் முத‌ல் புகைப்ப‌ட‌ம் ம‌ற்றும் விள‌க்க‌ம் அறுசுவையில் வெளியாகியுள்ளது.உண்மையில் இன்று காலையில் பார்த‌த‌வுட‌ன் அதிக‌ பர‌வ‌ச‌மும்,ச‌ந்தோஷ‌முமாக‌ உள்ள‌து.

தோழிகளே,உங்களின் சந்தேகம் எதுவானாலும் கேளுங்க நான் கண்டிப்பாக தீர்த்து வைக்கிறேன்.அதை விட வேற என்ன வேலை இன்றைக்கு.......பேக்கிங் எல்லாம் நாளைக்குதான்....

உமா மேடம் உங்களுக்கும் கண்டிப்பாக சிறிது நேரத்தில் பதில் கொடுக்கிறேன். மிகவும் நன்றி உங்களுக்கும்.

அட்மின் அண்ணா மற்றும் உதவியாளார்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல் முதல் அருசுவையில் மருதாணி டிசைன் வந்துள்ளது.

சூப்பர்,அழகாக தெளிவாக இருக்கு.
இன்னும் நிறைய டிசைன் கொடுங்கள்

Jaleelakamal

ஹாய் உமா மேடம் உங்க பாராட்டுகளுக்கு நன்றி,நாம் முதன்முதலாக பேசினாலும் ஏற்கெனவே பழக்கமானது போல உள்ளது.
நீங்க‌ சொல்வ‌து உண்மை தான் யூக்க‌லிப்ட‌ஸ் ஆயிலும் கைக‌ளில் முத‌லிலேயே த‌ட‌விக்கொள்ள‌லாம்.இது என‌து முறை, இம்முறையில் மிக‌வும் ந‌ல்ல‌ டார்க் க‌ல‌ர் கிடைக்கும் என்ப‌தில் எந்த‌ ச‌ந்தேக‌மும் கிடையாது.

1)பொதுவாக‌ அழ‌குக்கலை ம‌ட்டுமின்றி வெவ்வேறு துறையை சேர்ந்த‌ ஒவ்வொரு எக்ஸ்பெர்ட்டிட‌மும் த‌னித்த‌னி முறைக‌ள் கையாள‌ப்ப‌டும் ஆனால் இது "செல்லும் வ‌ழி வெவ்வேறானாலும் போகுமிட‌ம் ஒன்றுதான்" என்ப‌து போல் ஒவ்வொருவ‌ரும் அவ‌ர‌வ‌ருக்கேற்ற‌ எளிய‌ அல்ல‌து தெரிந்த‌ முறையினை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌ர்.கண்டிப்பாக மெஹந்தி ஒட்டும்,எந்த பயமும் வேண்டாம்.முயற்சித்து தான் பாருங்களேன்.

2)இடது கையில் கோனை பிடித்து நான் சொல்லிருப்பது (பேப்பர்) போல் கொஞ்சம் பழகினால் வலது கையிலும் போட்டு விடலாம் பழக்கம் தான் வேண்டும் மற்றபடி எந்த சிரமும் இதில் இல்லை.

நான்,வ‌ழ‌க்க‌மாக‌ எல்லா ஃபன்ஷனுக்கும்,ஃபிர‌ண்ட்ஸ் வீடுக‌ளில் பார்ட்டி என்றாலும் கைக‌ளில் மிகவும் அழகிய டிசைனை போட்டுக்கொள்வேன்.
ஆனால் குழ‌ந்தை பிற‌ந்த‌பின் அது பெரும்பாலும் குறைந்து விட்ட‌து.

இதில் கூட‌ முத‌ல் குறிப்பு அத‌னால் மிக‌வும் ந‌ன்றாக‌ வ‌ர‌வேண்டும் என‌ தாயாராகி,இது ஏதோ "நாம் ஒன்று நினைக்க‌ தெய்வ‌ம் ஒன்று நினைக்கும்" க‌தையாக‌ மாறி குழ‌ந்தை என‌து ம‌டியில் வ‌ந்து உட்கார்ந்து விட்டான்,ஏதோ தெளிவான‌ டிசைன் ஒன்று கிடைத்தால் போதுமென‌ முடித்தேன்.

ஆனால் படங்க‌ளும் மிக‌ அழ‌காக‌ வ‌ந்திருப்ப‌தில் என‌க்கு ம‌கிழ்ச்சியாக‌ உள்ள‌து.

மிக‌வும் ந‌ன்றி ஜ‌லீலா மேட‌ம்.

ஹாய் உமா மெகந்தி டிசைன் சூஊஊஊஊர்ப்பா......

என்னடா எல்ல விதத்திலும் பாயும் புலியா கானுமேன்னு பார்த்தேன்..... இவ்வளவு நாள் புலி பதுங்கி இருந்துதே.......

அதான் மெகந்தி போட்டு பாஞ்சிடுச்சு...... அப்பா நல்லா ஜஸ் வெச்சனா....... ஹீ ஹீ ஹீ.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

உங்களுடைய இந்த மெகந்தி டிசைன் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் உள்ளது. எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் படங்களுடன் போட்டுக் காட்டியதற்கு மிக்க நன்றி.

மொத்தத்தில் அருமை.சீக்கிரம் போட்டு பார்த்திட்டு சொல்றேன்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹய்... உமா, மெஹந்தி டிஸைன்ஸ் சூப்பரா இருக்கு!. எனக்கு மருதாணி போட்டுக்கொள்வதென்றால் சின்ன வயது முதலே ரொம்ப இஷ்டம். என் பொண்ணுக்கும் அதே, அதே!. நான் இங்கு கடையில் கிடைக்கும் ரெடிமேட் கோன் வாங்கி வந்து அப்பப்ப விடுமுறையின் போது அவளுக்கு போட்டு விடுவேன். ரொம்ப குஷியா போட்டுக்கொள்வாள். இப்ப கொஞ்ச நாளா போடவில்லை, இப்ப உங்க படங்கள் பார்த்ததும் உடனே போட ஆவல் வந்துவிட்டது! டிஸைனுடன் கூடவே யூஸ்ஃபுல் டிப்ஸ்ம் கொடுத்து இருக்கிங்க. நன்றி!
பி.கு. நான் போன விடுமுறையின்போது அவளுக்கு போட்ட டிஸைன்சை படம் எடுத்து வைத்திருக்கிறேன். அப்புறம் உங்களோடு ஷேர் பண்ணிக்கொள்கிறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

உமா...
டிசைன் மிக அழகாக இருக்கிறது. குறிப்பும் தெளிவாக இருக்கிறது. கலக்கி விட்டீர்கள். :)
எங்கே, படத்தில் ரோஹித்தைக் காணோமே!!!
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

எப்படி இருக்கீங்க.நான் உங்க கூட முதல் தடவை பேசுகிறேன். ஆனாலும் உங்களை பற்றி தெரியும். உங்க மற்ற த்ரெட்டுகளையும் இப்பதான் பார்த்துட்டு வருகிறேன். வாழ்த்துக்கள் மருதாணி டிஷைன் ரெம்ப அழகா இருக்கு. போட்டோஸ் நல்லா வந்திருக்கு. உங்க டிப்ஸும் விளக்கமாக இருக்கு. எனக்கு சிறு வயதிலேயே மருதாணி போடுவதென்றால் ரெம்பவும் பிடிக்கும். ஆனால் இப்ப நேரமே கிடைப்பதில்லை. உங்க போட்டோஸ் பார்த்ததும் மருதாணி போடும் ஆவல் வந்துவிட்டது. இந்த ஈத் பெரு நாளைக்கு உங்க டிப்ஸ படி மருதாணி போட்டு பார்த்து விடனும். அதன் பிறகு பின்னூட்டம் கொடுக்கிறேன்.

அன்புடன் கதீஜா.

என்னை நீங்க மேடம்னுலாம் கூப்ட வேண்டாம். அப்படி கூப்பிட்டா எதோ distant ஆயிட்ட மாதிரி இருக்கு. உமானே கூப்டுங்க.

உங்க பதிலுக்கு நன்றி உமா. நான் நிச்சயம் ஒரு முறையாவது இந்தியன் ஷாப்ல இருந்து கோன் வாங்கி ட்ரை பண்ணி பாக்கபோறேன் :) சின்ன வயதில் இருந்தே மருதாணி மேலே எனக்கு அப்படி ஒரு craze! I guess just like every girl in this forum :) ஆனா என் உடம்பு வாகுக்கு ரொம்ப சிவக்கும் அப்பரம் இரண்டு நாள் அப்பறம் கருப்பு கருப்ப ஆகிடும் :( ஆனா அது இலையை அரைத்து வைக்கும்போதுதான். இந்த ready made cone ல அப்படி ஆகறது இல்ல.

உங்க கூட பேசினதுல எனக்கும் ரொம்ப சந்தோசம் :) உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். இந்தியாவுக்கு போறீங்கன்னு படிச்சேன். நல்லபடியா போயிட்டு வாங்க உமா. All the best :)

ஒரு விஷயம். உங்க கைல கோடுகளே ரொம்ப இல்லை உமா. ஆச்சர்யமா இருக்கு :) இப்படி இருந்தா வாழ்க்கை ரொம்ப சிக்கல் இல்லாம இருக்கும்னு சொல்வாங்க. I don't know how far it's true but i hope, for your sake, it is indeed true :)

அன்புடன்
உமா

பைத்தியம் பிடிக்கிறதே....
உமா(பொப்ஸ்), எனக்கு இந்த மருதாணிக்கோலத்தைப் பார்த்ததும் பைத்தியம் பிடித்தமாதிரி ஆகிவிட்டேன். வாழ்க்கையில் இதுவரை நான் கையிற்கு மருதாணி போட்டதில்லை. சின்னவயதில் நகத்துக்கு மட்டும் போட்டதுண்டு. அதெப்படி இவ்வளவு அழகாக வரைந்திருக்கிறீங்க. மிகவும் சூப்பர் உமா.

இன்னுமொன்று, இதிலுள்ள கை உங்கள் கையோ?:), கைரேகை நல்ல துலக்கமாக இருக்கு. ஆயுள்ரேகை மிக நன்றாக இருக்கு. நீண்ட ஆயுள். ஆனால் கல்விரேகை நன்றாக வந்து கடைசியில் குழம்பியிருக்கிறது.... இவ்வளவும் எனக்குத் தெரிந்த கைரேகைச் சாத்திரம். எப்படி இருக்கு?:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

முக்கியமாக ஒன்று சொல்லமறந்துவிட்டேன்...

***** // திருமணம் மற்றும் வளைக்காப்பு போன்ற மற்ற விசேஷங்களுக்கு வைக்கும் பொழுது முழங்கை வரையும் கால்களிலும் வைக்க அப்பகுதியில் இருக்கும் முடிகளை நீங்கிவிட்டு செய்தால் தான் சரியாகவரும், நன்றாக இருக்கும்.// *****

அய்யோ!!!!........ பிரபா உங்க தொல்லை தாங்க முடியல எதுக்கு இப்படி அடிக்கடி /// ஜஸ் /// வைக்கீரீங்க?

சுபா,உங்க பதிவை எல்லாம் அரட்டையில் பார்த்தேன் ஆனா நான் இப்போ அரட்டை அடிக்கிற நிலைமையில் இல்ல அதனால வர முடியறதில்லை. மெஹந்தி போட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

சுஸ்ரீ, கண்டிப்பாக மெஹந்தி போட்டுக்கொள்ள பிடிக்காதவங்க இருக்கவே முடியாது இல்ல... முடியும் பொழுது நீங்க போட்ட படத்தையும் ஷேர் பண்ணிக்கோங்க!!!

இமாம்மா.........ரோஹித் இதோ என் மடியில் தான் உட்கார்ந்திருக்கிறார்.உங்க பாராட்டுகளுக்கு நன்றி. இதையும் நான்கு முறை போய் வந்து, போய் வந்து டைப் பண்றேன். எனக்கு எப்படி சேவ் பண்ணி வைக்கிறதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.

கதீஜா, ஆமாம் நாம் ரொம்ப நாளா உறுப்பினர்களாக இருந்தாலும் இப்போ தான் முதல் முதலாக பேசுகிறோம். நீங்களும் உங்கள் குழைந்தைகளும் நலமா? நீங்களும் போட்டு பார்த்து விட்டு சொல்லுங்கள்.

ஒகே,உமா உங்களை அப்படியே கூப்பிடறேன். முயற்சித்து பாருங்கள்.நன்றி. ஆமாம் இன்னும் 5 நாட்களில் ஊருக்கு புறப்படுகிறோம்......

அதிரா, ஏன் இப்படி? உங்களுக்கு பைத்தியம் பிடிக்கிறது? அப்போ இனிமேல் ஒரு முறையாவது போட்டு பாருங்களேன்.

அடடா, எல்லோரும் நல்லா கைரேகை பார்பீங்க போலிருக்கு!!!!!!!

ஆமாங்க நான் ஒன்னும் படிப்பில் புலியெல்லாம் இல்ல,கொஞ்சம் humorous and straight forward ஆக இருக்கணும்ன்னு நினைப்பேன்........இது கண்டிப்பாக எனது கைகள் தான்.

ஆஹா எப்படியோ எழுதி முடிச்சுட்டேன்.

பாராட்டுகள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், மற்றும் வார
இறுதி இனிமையாயிருக்கவும் எனது வாழ்த்துக்கள்.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் என் காலை வணக்கம்.

உமா நான் உண்மையை சொன்னாக் கூட எல்லரும் என்னை திட்டராங்கப்பா.. எனக்கு அழுகாச்சியா வருது...

ஆனா நான் அழுதா உங்க மனசு கஷ்மா இருக்கும்.... உமா உங்க ஜடி வேனும். விருப்பம் இருந்தா குடுங்கபா......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

உமா இந்த link-ல் சொல்லி இருக்கும் படி Gmail-ல் தமிழை select செய்தால் அடிக்கலாம்.
http://mail.google.com/support/bin/answer.py?hl=en&answer=139576

ஏற்கனவே Gmail-ல் "Enable Transliteration" option box-ஐ select செய்திருந்தால் இந்த link-ல் சொல்லி இருப்பது தேவையில்லை.

பின் compose mail-message box-ல் வெறும் ஒரு வார்த்தை அடித்து முடித்தாலும் கூட "save now" click செய்தால் Draft Folder-ல் save ஆகி விடும்.பின் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம்.இப்படி தான் இமா செய்கிறார் என நினைக்கிறேன்.உங்களுக்கு முன்பே இது பற்றி தெரியும் எனில் இப்பதிவை consider செய்யாதீர்கள்.

உங்கள் மெஹந்தி அழகாக உள்ளது.

Patience is the most beautiful prayer!!

உமா,
நலமா? தட்டச்சு செய்து சேமிப்பது பற்றி உங்களுக்குத் தேவையான விளக்கம் கிடைத்து விட்டது. இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
மெஹெந்தி டிசைன் பின்பு கையிலிருந்து மறைய ஆரம்பிக்கும் போது பார்க்க நன்றாக இருப்பதில்லை. அந்த நேரம் அதனை முழுவதாக நீக்கி விட ஏதாவது வழி இருக்கிறதா?
எனக்கு மெஹெந்தி வைத்த இடங்களில் இரண்டு நாட்களில் தோல் உரிய ஆரம்பித்து விடுகிறது. உள்ளங்கை சொர சொரப்பாக ஆகி விடுகிறது. என்ன செய்யலாம்?
இமா

‍- இமா க்றிஸ்

பிரபா என் இமெயில் ஐடி பல இடங்களில் இருக்கு,முடிஞ்சா தேடிப்பாருங்க இல்லைனா நான் பிறகு கொடுக்கிறேன்.

உத்ரா,மிகவும் நன்றி. எனக்கு தெரிந்தது தான் என்றாலும் இதுவரை இப்படி செய்ததில்லை(மெயில் தமிழில் அடிக்க தேவையில்லாததால்) இனிமேல் இது கண்டிப்பாக உதவும்,உங்க பாராட்டுக்கும் நன்றி.

இமாம்மா, இது சற்று கடினமானது தான்,போக கொஞ்சம் நாட்கள் ஆகும். ஆனால் கீழ்காணும் முறையை ட்ரை பண்ணிப்பாருங்க...

எளிதில் மறைய வழிகள்:
****************************
1)நல்ல தரமான க்ளோரின் பிளிச் கொண்டு கைகளை(மெஹந்தி போடப்பட்ட பகுதிகள்) தினம் 2 முறை கழுவுங்கள்.

2)சாதாரண நீரிலும் அடிக்கடி கைகளை கழுவினால் exfoliation ஆகி விரைவில் நீங்க உதவும்.

3)சோடா உப்பும் எலுமிச்சை சாரும் சம அளவில் கலந்து அதிலும் கைகளை அடிக்கடி கழுவலாம்.

இவை அனைத்தும் குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு பிறகு ஓரளவு மெஹந்தி நீங்க வழிகளாகும்.

வேறு யாருக்கேனும் ஏதேனும் சந்தேகமானாலும் இப்பகுதியில் பதிவு போடுங்கள் தோழிகளே நான் முடியும் பொழுது பதில் அளிக்கிறேன்.

அனைவருக்கும் நன்றி.

நன்றி உமா. முதலாவது முறை எனக்குச் சரிவரும் என்று தோன்றவில்லை. அடிக்கடி கையைக் கழுவிக் கொள்ளுவேன். அடுத்த முறை சோடா உப்பும் எலுமிச்சைச் சாறும் முயற்சி செய்கிறேன். தகவலுக்கு நன்றி.
இமா

‍- இமா க்றிஸ்

திருமதி. உமா(pops) அவர்கள் போட்டு கொண்ட மெஹந்தி டிசைனின் படத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்

<img src="files/pictures/mehendii-pops.jpg" alt="picture" />

<img src="files/pictures/mehendii-pops-1.jpg" alt="picture" />

நன்றி, அட்மின் அவர்களுக்கும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

கோலம் மட்டும் என்றில்லை, உங்கள் கையும் அழகாக இருக்கிறது உமா.
இமா

‍- இமா க்றிஸ்

திருமதி. உமா(pops) அவர்கள் போட்டு கொண்ட மெஹந்தி டிசைனின் படத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்

<img src="files/pictures/mehendii-pops-3.jpg" alt="picture" />

<img src="files/pictures/mehendii-pops-4.jpg" alt="picture" />

அந்த முதலாவது டிசைன் சுபர்ப் உமா. :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நீங்க கலக்குங்கோ உமா....எல்லா டிசைனும் ரொம்ப அருமையாக உள்ளது.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

படங்களை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மீண்டும் எனது நன்றிகள்.

இமாம்மா, உங்க பாராட்டுகளுக்கு நன்றி. என்ன பண்றது எனக்கு கிடச்ச கொஞ்ச நேரத்துல( ஒரு மணி நேரத்திற்குள், பையன் தூங்கினான்) ஒரு கையில இரண்டு பக்கமும் இவ்வளோ தான் வைக்க முடிஞ்சது... தீபாவளிக்காக வைத்தேன். முன்பு போட்டது சென்ற வார தீபாவளி செலபிரேஷனுக்காக வைத்தது.

மிகவும் நன்றி லாவண்யா.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

டிசைன் ரொம்ப சுப்பரா இருக்கு மேடம்,நான் இப்பொழுது தான் மேகந்தி டிசைன் கற்றுக்கொண்டிருக்கிறேன் இது எனக்கு மிகவும் உபயோகமாக இருகும்

Mohana

very simple but beautiful design...
cone maruthani enna brand nalla sivakkum?
maruthani sivakka vera ethavathu vali irukka?

நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!

மெஹந்தி பற்றிய தகவலும், டிசைனும் அருமை உமா

KEEP SMILING ALWAYS :-)

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta