ப்ளாஸ்டிக் பாட்டிலில் ஒரு அழகிய ஃப்ளவர் வேஸ்

தேதி: August 10, 2009

5
Average: 4.7 (7 votes)

 

உபயோகமற்ற ப்ளாஸ்டிக் பாட்டில் பெரியது - ஒன்று
கத்திரிக்கோல்
ஃப்ளேடு
தெர்மாக்கோல்
வெள்ளை மணிகள்
செயற்கை பூக்கள்

 

ப்ளாஸ்டிக் பாட்டிலில் ஃப்ளவர் வேஸ் செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ப்ளாஸ்டிக் பாட்டிலில் மூன்று பாகங்கள் காணப்படும். அதில் மேல் பாகத்தை மட்டும் ப்ளேடை கொண்டு வெட்டி எடுத்து விடவும்.
படத்தில் காட்டியுள்ளபடி வெட்டிய பாட்டிலின் நடுப்பகுதியை கத்திரிக்கோலால் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பாட்டிலின் அடிப்பகுதியை தவிர நடுப்பகுதி முழுவதையும் இதைப் போல் மெல்லியதாக குச்சி போன்று நறுக்கிக் வைத்துக் கொள்ளவும்.
சிறிது தடிமனான தெர்மாக்கோலை பாட்டிலின் உட்பகுதிக்கு பொருந்துமாறு வட்ட வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
செய்து வைத்திருக்கும் பாட்டிலின் உள்பகுதியில் இந்த தெர்மாக்கோலை சற்று மேலே இருக்கும்படி பொருத்தி கொள்ளவும்.
இப்போது பாட்டிலின் நடுப்பகுதியில் நறுக்கி வைத்திருக்கும் குச்சி போன்ற மெல்லிய பகுதிகளை ஒன்றை உள்பக்கமாகவும், மற்றொருன்றை வெளிப்பக்கமாகவும் இருக்கும்படி மடித்து விடவும். சுற்றிலும் இதைப் போல் மடித்து விடவும்.
மீதியுள்ள தெர்மாக்கோலை கைகளால் சிறிது சிறிதாக தேவையான அளவு கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
இந்த தெர்மாக்கோல் சிறிய துண்டுகளை பாட்டிலின் வெளிப்பக்கம் மடித்துவிட்டிருக்கும் மெல்லிய குச்சி போன்ற பகுதியின் முனையில் ஒவ்வொன்றிலும் ஒன்று என்ற வீதம் சொருகவும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இந்த தெர்மாக்கோல் துண்டுகளை சொருகிக் கொள்ளலாம்.
இப்பொழுது ப்ளாஸ்டிக் பாட்டில் ஃப்ளவர் வேஸின் வெளிப்பகுதி தயார்.
பிறகு உள்பகுதியில் மடித்துவிட்டிருக்கும் மெல்லிய குச்சி போன்ற பகுதியின் ஒரு முனையில் பெரிய பூக்களை சொருகவும்.
இதைப் போன்று உள்பகுதியில் பெரிய பூக்கள், சிறிய பூக்கள் மற்றும் மணிகள் என மாறி மாறி வைத்து பாட்டிலின் உள்பகுதியை அலங்கரித்து கொள்ளலாம்.
மிகவும் எளிமையாக செய்யக்கூடிய அழகிய பாட்டில் ஃப்ளவர் வேஸ் தயார். ப்ளாஸ்டிக் பாட்டிலை ஒரு முறை பயன்படுத்திவிட்டு உபயோகமற்றதாக இருக்கும்பொழுது இதுப்போல் செய்து உங்கள் ஸோகேஸை அலங்கரிக்க செய்யலாம்.
திருமதி. செண்பகா பாபு அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த ஃப்ளவர் வேஸ்ஸை வடிவமைத்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இந்த கண்கவர் ப்ளவர்வாஷ் அழகான விளக்கதுடனும் தெளிவான படங்களுடனும் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி.

வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

அழகாகவும் சுப்பராகவும் இருக்கு

நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்

அழகாக இருக்கிறது இந்த ஃபளவர் வேஸ்.செய்தது யாருனு சொன்னா பேர் சொல்லி பாராட்டலாம்
அன்புடன்
கலா

Kalai

ஃப்ளவர் வாஸ் மிக அழகாக இருக்கிறது. பாப்பிக்கு எனது பாராட்டுக்கள். :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஃப்ளவர் வாஸ் மிகமிக அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செபா.

ஹாய் பாப்பி ஃப்ளவர் வாஸ் சூப்ப்ப்ப்ப்ரா இருக்கு வாழ்த்துக்கள்....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஆஹா.... செண்பகா....!!! எப்போ இருந்து இதெல்லாம்.... சொல்லவே இல்ல... ;) தற்செயலா பார்த்தா... நீங்க!!! சூப்பர். எப்படி இப்படிலாம்.... கலக்கறீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாப்பி நலமாக இருக்கிறீங்களோ, முதன்முதலில்(அப்படித்தான் நினைக்கிறேன்) உங்கள் கைவண்ணம் வெளிவந்திருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கு. தொடர்ந்து அனுப்புங்கள்.

நான் முகப்பில் பார்த்தேன், கொள்ளை அழகாக இருக்கென நினைத்தேன், உள்ளே திறந்து பார்க்கவில்லை. நல்லவேளை இப்பவாவது பார்த்தேனே எனச் சந்தோசப்படுகிறேன். மிகவும் நன்றாகச் செய்துகாட்டியிருக்கிறீங்கள். கடையில் வாங்கும் பல்ப்போடு கூடிய, சுற்றும் லைற்றுகள் போல இருக்கு பார்க்க.

இனியும் மெளனம் சாதிக்காமல் எமக்குப் பதில் போடலாமே:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா, வனி இந்த 'நீங்களும் செய்யலாம்' பகுதியில் முதல் செய்முறையைப் போய் பாருங்கள். ரொம்ப காலத்துக்கு முன்பே செய்திருக்காங்க.

பாராட்டிய அனைவருக்கும் பாப்பியின் சார்ப்பில் நன்றி. இது அறுசுவையில் வெளியாகும் அவரது ஐந்தாவது க்ராப்ட் ஒர்க். இவை எல்லாம் ஒன்றரை வருடங்களுக்கு முன் செய்தவை. இப்போதுதான் வெளியிட நேரம் வந்துள்ளது. :-)

முதலில் செய்த பிள்ளையாரில் மட்டுமே அவரது பெயரை வெளியிட்டு இருந்தோம். மற்ற குறிப்புகளில் பெயர் போடவில்லை. முதல் குறிப்பு அவர் செல்வியாக இருந்த போது வெளியானது. புதிய தளம் வெளியாகும்போது பழைய குறிப்பில் உள்ள செல்வியையும், போட்டாவையும் மாற்றி, அவரது பெயரை மற்ற செய்முறைகளிலும் வெளியிடலாம் என்று எண்ணியிருந்தோம். புதிய தளம் கானல் நீராய் இருப்பதாலும், ஒவ்வொரு குறிப்பிலும் அதை செய்தவர் யார் என்ற கேள்வி எழுந்ததாலும், பெயரை இப்போதே வெளியிட வேண்டியதாயிற்று.

ஓஹோ.... இங்க இப்படி வேறு இருக்கா.... இவங்க செய்முறை எல்லாம் பேர் போடாம தான் வருதா??!! :( பாவம் செண்பகா. 5 குடித்திருக்காங்களா இதுவரை??? அது சரி வனிதா.... நீ அறுசுவை வந்தே ஒரு வருஷம் தானே ஆகுது.... நம்ம என்னைக்கு எதை ஒழுங்கா பார்த்தோம், படிச்சோம்... அண்ணா.... அழகா செய்திருக்காங்கன்னு நாங்க சொன்னோம்'னு சொல்லிடுங்கோ. மறந்துட்டா.... அப்பறம் நாங்க பொறுப்பில்லை. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த செய்முறையை பார்த்து திருமதி. இமா அவர்கள் செய்த ப்ளவர் வேஸின் படம்

<img src="files/pictures/bottle-vase.jpg" alt="picture" />

இந்த செய்முறையை பார்த்து வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் செய்த ப்ளவர் வேஸின் படம்

<img src="files/pictures/bottle-vase-1.jpg" alt="picture" />

கலக்கல் வனீ. :) அழகாக இருக்கிறது.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா.... என்னை ஷேம் ஷேம் பண்ண கூடாது.... நானே ஒரு கத்துகுட்டி.... யாரும் சிரிக்காம செண்பகா'ட காட்டுங்கன்னு சொன்னா, என்னோட மினியேச்சர் பூத்தொட்டியை இங்க போட்டு ஷேம் ஷேம் பண்ணிட்டாங்க. :(( இதுக்காக நான் அட்மின் மக்கள் எல்லாரையும் 1 நாள் முழுக்க பென்ச் மேல ஏத்தலாம்'னு யோசிக்கறேன். நீங்க எத்தனை அழகா செய்து காட்டி இருக்கீங்க.... உங்க படத்துக்கு கீழ என்னுடையது கண் திரிஷ்டி கழிக்கிது.... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனீ,
சபை (தள) அடக்கம் என்று இந்த மாதிரி எல்லாம் பதிவு போடப் படாது. :) அது அழகாக இருப்பது உங்களுக்குப் புரிந்ததால்தானே படம் அனுப்பினீர்கள்.

ஒரே மாதிரி தயாரிப்பில் மூன்றும் மூன்று விதமான அழகாக வந்திருக்கிறது.
உண்மையில் நீங்கள் தான் சரியாக வெட்டி இருக்கிறீர்கள். இலைகள் சேர்த்தது நன்றாக இருக்கிறது.
நான் போத்தலைச் சிறிது உயரமாக விட்டு வெட்டி விட்டேன், தலைப் பாரம் கனத்து விட்டது, அதனைச் சமப் படுத்துவதற்காகப் பூக்களைப் பார்த்துப் பார்த்து இணைக்க வேண்டியதாக இருந்தது.

வனீ, உங்களைத் தமிழ் கூறு நல்லுலகெலாம் அறிமுகப் படுத்துகிற அட்மின் குழுவினரை 'பெஞ்ச் மேல' ஏறச் சொல்வது நன்றாக இல்லை, அந்த வேலையை எங்களோடு நிறுத்தி விடுங்கள். :)

என்னால் மற்ற இழைகளில் கலந்து கொள்ள இயலவில்லை. முடியும் போது வருகிறேன்.

அதிராவின் 'கறிபண்' குறிப்பை ஒரு முறை பார்வையிடவும். :)))

நான் அனுப்பிய படங்களை இணைத்தமைக்கு மிக்க நன்றி அட்மின்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இது என்ன இது?
ஏதாவது பிளவர் ஷோ நடக்குதோ? சொல்லியிருந்தால் நாங்களும் கலந்திருப்போமெல்லோ... எல்லாமே கொள்ளை அழகுதான்... ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கிறது.. அழகில்.. இமா, வனிதா வாழ்த்துக்கள்.

ஒரு தாழ்மையான வேண்டுகோள்..
////முதல் குறிப்பு அவர் செல்வியாக இருந்த போது வெளியானது. புதிய தளம் வெளியாகும்போது பழைய குறிப்பில் உள்ள செல்வியையும், போட்டாவையும் மாற்றி, அவரது பெயரை மற்ற செய்முறைகளிலும் வெளியிடலாம் என்று எண்ணியிருந்தோம்///// செல்வியாக இருந்த "இனிமையான" கால:) பெயரை மாற்றி, எதுக்கு இப்போதைய பெயரைப் போட நீங்களாகவே முயற்சிக்கிறீங்க???.. ஏதோ தாங்கள் வந்தபின்னரேதான்(கணவன்) மற்றவைக்கு(மனைவி) சந்தோஷம் என சிலர் நினைக்கினம்போல...:)... சரி சரி எனக்கெதுக்கு வீண் வம்பு...:).

இமா கறிபண்ணோ இதோ வருகிறேன்... இவ்வளவு அழகாகப் பூச் செய்ய நேரமிருக்கு.... ஆனால்... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்பு..:)...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்ன இமா இப்படி சொல்லிபுட்டீங்க.... அட்மின் யாரு???? எல்லாம் நம்ம நண்பர்கள் தானே.... உங்களை பென்ச் மேல் ஏற்றும் உரிமை இருக்கும் போது அவங்களை ஏற்ற உரிமை இல்லையா??? பிரித்து பார்க்க கூடாது.... விட்டா பாபு அண்ணா'வையும் சேர்த்தே ஏத்தலாம் (என்ன அதிரா நான் சொல்றது சரி தானே.... நம்ம அண்ணா'வை நம்ம வம்பிழுக்காம வேறு யார் இழுப்பா???? ஹிஹிஹீ....). பாவம் முதுகு வலியா இருக்கேன்னு பார்க்கிறேன். ;) ஹிஹிஹீ. அது அழகா இருக்குன்னு அனுப்பல இமா, நான் இது போல் எல்லாம் செய்து பழக்கமே இல்லை.... நீங்க சொல்றது கூட எனக்கு புரியல, (பாட்டிலை இப்படி வெட்டிட்டேன் அப்படி வெட்டிடேன்னு) கையில் ஒரு பாட்டில் கிடைத்தது, செண்பகா நியாபகம் வரவும் சரி என்று ஆரம்பித்தேன். கோனலாக வெட்டியதை அம்மா தான் வாங்கி சரி செய்து தந்தாங்க. :D அது தானா வந்துடுச்சு.... பூவும் பார்த்துல்லாம் சேர்க்கல... என்னுடைய சின்ன பாட்டிலுக்கு ஏத்த மாதிரி சின்ன பூ வீட்டில் கிடைச்சதை சேர்த்தேன். அவ்வளவே. நாம் செய்து காட்டியதை யாராவது செய்து பார்த்தார்கள் என்று தெரிந்தால் எல்லாருக்குமே ஒரு சந்தோஷம் இருக்கும்.... அதான் இந்த கத்துகுட்டி செய்ததையும் செண்பகா பார்த்து மகிழட்டும் என்று அனுப்பினேன். ஆனா உண்மையில் என் தங்கை பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னா, அதான் சரி என்று அனுப்பிவிட்டேன். இப்போ இதில் தேர்ச்சி பெற்ற நீங்கல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னதுனால் எனக்கு ஓ.கே. :) அழகா இருக்குன்னு சொன்ன உங்களுக்கும் அதிராக்கும் என் நன்றிகள்.

அம்மாடி... எவ்வளவு பெரிய பதிவு அடிக்க வெச்சுட்டீங்க..... சரி பரவாயில்லை. அடுத்து ஒரு குட்டி பூசனிக்காய் தேடுறேன். கிடைச்சதும் செய்து பார்க்கிறேன். அது எப்படி வருமோ.... நீங்க இப்பவே மனசை திடப்படுத்திக்கங்க. ஹிஹிஹீ. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Kalakkureenga Shanbaga.

Regards,
Selvi

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta