ஒருவரை எப்படி தவிர்க்க ??

இது சரியான தலைப்பா இல்லையான்னு தெரியலை. ஆனாலும் உங்க அபிப்ராயம் என்னானு சொன்னா கொஞ்சம் மன சமாதானம் எனக்கு. ரொம்பவும் நெருக்கமில்லாத ஆனால் அடிக்கடி பிளேடு/விசிட்/போன் இப்படி செய்யும் ஒருவரை எப்படி தவிர்ப்பது. நாசூக்காக எவ்வளவோ சொல்லியும் வாரத்துக்கு வாரம் தொல்லை தரும் இந்த நபரை எப்படி தவிர்ப்பது... எதோ போனா போகுதுன்னு ஒரு 2 மூணு வாரம் சாப்பாடு போட்டா இப்ப என்னவோ கடன் கொடுத்தவர் போல வருகிறார் என் தோழியின் நண்பர் ஒருவர் :((
இதில என் தோழியின் கணவ்ருக்கோ இதை கண்டு கொள்ள நேரமில்லை. அவளோ எங்க பிரைவசியே பறி போகுதுன்னு புலம்புகிறார்கள்.... ஊரில தான் சொல்ல முடியாம மெல்ல முடியாம இருக்குன்னா இங்கயும் இங்கிதமில்லாத ஜந்துக்கள் :))

இது சரியான தலைப்பா இல்லையான்னு தெரியலை. ஆனாலும் உங்க அபிப்ராயம் என்னானு சொன்னா கொஞ்சம் மன சமாதானம் எனக்கு. ரொம்பவும் நெருக்கமில்லாத ஆனால் அடிக்கடி பிளேடு/விசிட்/போன் இப்படி செய்யும் ஒருவரை எப்படி தவிர்ப்பது. நாசூக்காக எவ்வளவோ சொல்லியும் வாரத்துக்கு வாரம் தொல்லை தரும் இந்த நபரை எப்படி தவிர்ப்பது... எதோ போனா போகுதுன்னு ஒரு 2 மூணு வாரம் சாப்பாடு போட்டா இப்ப என்னவோ கடன் கொடுத்தவர் போல வருகிறார் என் தோழியின் நண்பர் ஒருவர் :((
இதில என் தோழியின் கணவ்ருக்கோ இதை கண்டு கொள்ள நேரமில்லை. அவளோ எங்க பிரைவசியே பறி போகுதுன்னு புலம்புகிறார்கள்.... ஊரில தான் சொல்ல முடியாம மெல்ல முடியாம இருக்குன்னா இங்கயும் இங்கிதமில்லாத ஜந்துக்கள் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா, இது நிறைய பேருக்கு உள்ள பிரச்சனை. சரியான தீர்வு - நேரடியா சொல்லிவிடுறதுதான். சிலருக்கு அது ரொம்ப சுலபம். வேறு சிலருக்கு அது சுட்டு போட்டாலும் வராது. நான் இதுல ரெண்டாவது ரகம். Don't Say YES When You Want to Say NO - இந்த book - க கூட வாங்கி படிச்சு பார்த்திட்டேன். உங்களால அப்படி சொல்ல முடியலன்னா, வேணா ஒரு 5K கடன் கேட்டு பாருங்க :-) . சிலரிடம் இந்த trick வேலைசெய்யும்.

தப்பா எடுத்துக்காதீங்க வேறு யாராவது வந்து சரியான ஆலோசனை சொல்லுவாங்க.

அன்புடன்,
இஷானி

அன்புடன்,
இஷானி

// நாசூக்காக எவ்வளவோ சொல்லியும் ..//

எதற்கு நாசூக்காக எல்லாம் சொல்கின்றீர்கள். நேரடியாக சொல்ல வேண்டியதுதானே.. அவர் புரிந்து கொள்ளும் நபராக இல்லையென்றாலோ, இல்லை புரிந்தும் புரியாததுபோல் நடிப்பவராக இருந்தாலோ, நீங்கள் யோசிப்பதற்கு ஒன்றுமேயில்லை. முகத்தில் அடித்தாற்போல் சொல்லாவிடினும், முகத்திற்கு நேராகவாவது பிரச்சனையை சொல்ல வேண்டும். அப்படியும் பயனில்லையென்றால் முகத்தில் அடித்தாற்போல் சொல்ல வேண்டும்.

எத்தனை நாளைக்கு மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டு நாம் புழுங்கிக் கொண்டிருக்க முடியும். அவரது செய்கையால் நாம் ஏன் கஷ்டப்படவேண்டும். 700 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் உலகம் இது. ஒருவரை இழப்பதால் நமக்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. அவரால் நமக்கு நன்மை ஒன்றுமில்லை, தொந்திரவுதான் எனும்போது கொஞ்சம்கூட யோசிக்கத் தேவையில்லை. அப்படி கொஞ்சம் நஞ்சம் நன்மை இருந்தால்கூட, பிரச்சனையோடு வரும் நன்மை நமக்கு தேவையேயில்லை. நாம் செய்வது சரியென்று பட்டால் தைரியமாக எதையும் செய்யலாம்.

இங்கிதம் இல்லாத ஜந்துக்களை நச்சென்று மண்டையிலேயே அடிக்க வேண்டும். அய்யோ பாவம் என்று யோசித்தால் நாம் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள். :-)

இலா அக்கா,

அட்மின் அண்ணா சொன்னதை தான் நானும் சொல்கிறேன். சொல்லி புரியாத பட்சத்தில் நேரடியாக சொல்ல வேண்டியது தான். இதில் அவர்கள் பாவம் பார்த்தால் நாளைக்கு அவர்கள் தான் அவஸ்தை படனும்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

இலா,

முன்பு ஒரு மன்றத்தில் "If we are to be friends, we will be friends whatever happens" என்று (அர்த்தம் வரும் ஒரு வாக்கியம்) சொன்னீர்கள். உங்களிடமிருந்து இப்படி ஒரு கேள்வியா என ஆச்சர்யமாக உள்ளது. ஒருவேளை வேறு காரணங்கள் இருக்கலாமாக இருக்கும்.

வேறு ஒரு பொது நண்பர், அல்லது உங்கள் கணவர் என்று யார் மூலமாவது எடுத்துச் சொல்ல முயற்சித்துப் பாருங்கள். கைகூடவில்லையெனில் நேரடியாக சொல்வதே வழி.

anbe sivam
அன்பு தோழி...
நேரடியாக சொல்ல உங்களுக்கு தயக்கமாக இருந்தால்..யாரோ ஒரு தோழிக்கு நடப்பது போல்." ஏன் தான் இப்படி வாரம் தோறும் வந்து தொல்லை கொடுக்கிறார்களோ?அவர்களுக்கே புரியவேண்டும்.மற்றவ்ர்கள் ப்ரைவசி நம்மால் கெடுகிறதே என்று
படித்தவ்ர்களுக்கு கூட புரிவதில்லை" என்பது போல காட்டமாகவே சொல்லுங்கள். வரும்போதெல்லாம் சொல்லுங்கள்.முதல் தடவை புரியாவிட்டாலும் மற்றொரு முறை மரமண்டையில் உறைக்காதா? அப்படியும் உறைக்காவிட்டால் நாங்கள் இந்தவாரம்
வெளியே செல்கிறோம் என்று த்விர்க்க பாருங்கள்.
கவிதாசிவக்குமார்

anbe sivam

///இங்கிதம் இல்லாத ஜந்துக்களை நச்சென்று மண்டையிலேயே அடிக்க வேண்டும். அய்யோ பாவம் என்று யோசித்தால் நாம் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள். :-)///
உண்மையான வரிகள். ஆனால் மண்டையில் அடிப்பதற்கும் தைரியம் வேணுமெல்லோ.

இலா உங்கள் தலைப்பைப் பார்த்ததும் சின்ன வயதில் படித்த கதை ஒன்று நினைவுக்கு வந்துவிட்டது.
ஒருவருக்கு திருமணம் நிட்சயித்துவிட்டார்கள், அப்போ அந்தப் பெண் எப்படிப்பட்டவர் என்பதை அறிய, ஒரு தூரத்து உறவினர் ஒருவரை, பெண் வீட்டுக்கு அனுப்பினார்களாம்.

அப்போ பெண் தனியே இருந்தார், இவரைக் கண்டதும், வீட்டுக்கு வந்துவிட்டாரே வரவேற்கவேண்டும் என நினைத்து, இருப்பதற்கு கதிரை இல்லையாம், எனவே ஒரு உரல்தான் அங்கு இருந்ததாம், அந்த உரலை வைத்து இருக்கச் சொன்னாராம்.

அவரும் அதிலிருந்து, ரீ எல்லாம் குடித்தும் எழுந்துபோகும் நோக்கமில்லாமல் இருந்தாராம். பெண்ணுக்கு அவரை எப்படி வெளியே அனுப்புவதென தெரியவில்லையாம். அப்போ சொன்னாராம், கொஞ்சம் உரலைத் தரமுடியுமோ? நான் பரண்மேலே ஏறிச் சாமான் எடுக்க வேண்டும் என்று, இவரும் எழுந்து நின்றாராம், பொருளை எடுத்து முடிய மீண்டும் இருந்துவிட்டாராம். பின்னர் பெண், சம்பல் செய்யவேண்டும் உரல் தரமுடியுமோ என்றாராம், இவரும் எழுந்து நின்றாராம் பின் இருந்தாராம். இப்படி எத்தனையோ விதமாக உரலைக் கேட்டும் அவர் எழுந்து போகவே இல்லையாம். முடிவில் இது எதுவும் சரிவராதெனத் தெரிந்து, பெண் சொன்னாராம், கொஞ்சம் வெளியே போகிறீங்களோ பொழுதாகிவிட்டது, நான் கதவைப் பூட்டி உரலைக் கதவுக்கு, பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்று.

அப்போதான் எழுந்துபோனாராம். ஆனால் போய் மாப்பிள்ளைக்குச் சொன்னாராம், இப்படி ஒரு பெண் உனக்கு கிடைக்க, நீ கொடுத்துவைத்திருக்க வேண்டும், ஒரு உரலை எத்தனை தேவைகளுக்கு உபயோகப்படுத்துகிறார், மிகவும் புத்திசாலி என்று. இப்படித்தான் சிலருக்கு நேரிடையாகச் சொன்னாலும் புரியுமோ தெரியாது..

நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது, எங்கள் வீட்டுக்கு ஒருவர் வருவார், ஆரம்பத்தில் அவர் தனியே இருக்கிறார் என கூப்பிட்டு அடிக்கடி விருந்து கொடுத்தோம், பின்னர் அவருக்கு உணவுநேரம் வீட்டுக்கு வருவது பழக்கமாகிவிட்டது, வந்தால் சாப்பிட்டுப்போகும்வரை எழும்பவே மாட்டார், சிலநேரம் தப்பித்தவறி போகவெளிக்கிட்டால், அம்மாவுக்கு மனம் கேட்காது வீட்டுக்கு வந்துவிட்டு சாப்பாட்டு நேரம் போகிறாரே எனக் கேட்பா, சாப்பிட்டுப் போகலாமே என்று(ஒரு மரியாதைக்காக:)), உடனே சொல்வார், அப்படியென்றால் ஒரு பார்ஷலாக கட்டித்தருவீங்களோ நேரமாகிவிட்டது, வீட்டில் போய் சாப்பிடுகிறேன் என்று. பின்னர் எப்படித்தான் அவரைக் கழட்டினோமோ தெரியாது. ஆனால் அது ஊரென்பதால், கதவைப்பூட்டிக்கொண்டிருக்கமுடியாது.

இது வெளிநாடுதானே இலா, எப்பவும் கதவுகள் பூட்டித்தானே இருக்கும், இருதடவை வந்து தட்டினாலும், வீட்டில் இலாததுபோல் திறக்காமல் இருந்தால் ஒருவேளை திருந்திவிடுவார். அல்லது, நீங்கள் கதைப்பது, வந்துபோவது என் கணவருக்குப் பிடிக்கவில்லை, இனி வரவேண்டாம் என, ஒரு பொய் சொல்லிவிடவேண்டியதுதான். இப்படிச் சொன்னால் முகத்தில் அடித்ததுபோலவும் இருக்காது, இதுக்கு மேலும் வரத் துணியவும் மாட்டார்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இலா.... உங்க நிலை புரியுது... ஆனா சரியான தீர்வு தான் தெரியல. ஏன்னா நானும் இது போல் ஆட்களை மேய்க முடியாம அடிக்கடி அவஸ்தை பட்டவ தான். :( ஒரு யோசனை எனக்கு சிலரிடம் சரி வந்துச்சு.... அதனால் சொல்றேன். எதிர் பாராத நேரம் வந்துட்டா, "வாங்க வாங்க... இப்ப தான் ஒரு வேலையா வெளிய கிளம்பிகிட்டு இருந்தேன்...."னு சொல்லிட்டு உட்கார விட்டுட்டு அவங்க கூட நேரம் செலவு செய்யாம இல்லாத வேலைக்கு வெளிய கிளம்பி பாருங்க... தொடர்ந்து ஒரு 2, 3 முறை இப்படி செய்தா கடுப்பாயிடுவாங்க. :D. இல்லைன்னா... பாத்ரூமில இருந்தேன் அங்க இருந்தேன் இங்க இருந்தேன்னு கதவை திறக்காம விடுங்கோ.... 2 முறை காத்திருந்து போகட்டும். போன் பண்ணி தொந்தரவு பண்ணா ஹோல்ட்'ல போட்டுட்டு "ஒரு நிமிஷம் அடுப்பில் சற்று வேலையா இருந்தேன்"னு ஒரு 10 - 15 நிமிஷம் போடுங்கோ.... பில் கட்ட முடியாதல்லோ.... ;) முன்கூட்டியே சொல்லிட்டு வரும் ஆளாக இருந்தா.... கேக்கும்போதே சொல்லிடுங்கோ, "இப்பலாம் நேரம் கிடைப்பதில்லை.... கொஞ்சம் பெர்சனல் வேலை இருக்கு, இன்னொரு நாள் பார்ப்போம்"னு. இது எதுவும் முகத்தில் அடிச்ச மாதிரி இருக்காது... அதே சமயம் கொஞ்சம் அவங்க வருகையை கட்டுப்படுத்தும். இது என் அனுபவம் தான்... நீங்க சொல்லும் நபருக்கு இதெல்லாம் ஒத்து வருமா'னு தெரியாது.... உங்க நிலைக்கு ஏத்த மாதிரி நீங்க பண்ணுங்கோ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வந்தவர் குசும்பு பேசுபவராக இருந்தால் அவரிடம் அவரை பற்றி நல்ல தாக சொல்லுங்கள் அவர் செய்த நல்ல விஷயம் ஏதாவது இருந்தால் அதை பற்றி பெருமையாக் சொல்லுங்க
உடனே திருடனுக்கு தேள் கொட்டியது போல ஆகி விடும்
அவருக்கே நம் முகத்தில் முழிக்க வெட்கமாக இருக்கும்

இது நல்ல ஐடியா நான் தவிர்க்கும் நு நினைத்தா இப்டி தான் செய்வேன்
நீங்களும் ட்ரை பண்ணுங்க

என்றும் அன்புடன்
நந்தினி

என்றும் அன்புடன்
நந்தினி

ஹாய் தோழிஸ் நீங்க குடுத்த ஜடியா எல்லம் நல்லா இருக்கு.......

அண்ணா சென்னா மாதிரி நான் ஒருத்தரிடம் அப்படிதான் சொல்லிட்டேன்.... ஆனால் நான் அப்படி சென்னதுக்கு ஒரு காரணம் இருக்கு... அவங்க சும்மா இல்லைப்ப......

எனக்கும் என் கணவருக்கும் சண்டை ஏர்பட நினைச்சு சிலுமிசம் பன்னாங்கபா......

நான் எல்லத்தையும் என் கணவரிடம் செல்வதால் அது நடக்கவில்லை.....

அப்பரம் விசயம் தெரிஞ்சி நான் அவங்கலை அவாட்யிட் பன்னேன்......

அப்பையும் அந்த மரமண்டைக்கு உரைக்கலை... அதனால் நான் ரொம்ப யோசிச்சி ஒரு முடிவு எடுத்தேன்...

" கவிதாசிவக்குமார்" சென்னா மாதிரியதான் நானும் சொன்னேன்...... அதுவும் எடுபடலை....

அப்பரம் இந்த மாதிரி ஆலே நமக்கு நண்பன் தேவையில்லை என அவரை முகத்துக்கு நேரகா சொல்லிட்டேன்........

இந்த வேலையேல்லாம் எங்க கிட்ட வேண்டாம் என்று சொல்லி அனுப்பிட்டேன்...

வழியில் பார்த்தால்லும் பேசாம அவாயிட் பன்னேன்....... இப்பையும் அவங்க பேச தயார். ஆனால் நாங்க பேச வில்லை.......

இது என் அனுபவம்... ( நானும் என் கணவரும் சந்தோஷ்மா இருக்க கூடாது என அவர்கள் நினைத்தலால் இது நாங்க எடுத்த முடிவு)

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்