'லேடிபர்ட்' வடிவிலான ஒரு பின் குஷன்

தேதி: August 26, 2009

4
Average: 4 (5 votes)

இந்த அழகிய லேடிபர்ட்டை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

 

ஸ்பாஞ்ச் - கறுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் ஒரு துண்டு
ஸ்டாகிநெட் - சிவப்பு நிறம்
பைப் க்ளீனர்கள் (கறுப்பு நிறத் துண்டுகள்) - 2
ஃபெல்ட் துணி - கறுப்பு
கறுப்பு நிறக் கம்பி
கண்கள் - ஒரு சோடி
கத்தரிக்கோல்
குண்டூசிகள்
நூல் - கறுப்பு, சிவப்பு
ஊசி
குரடு
க்ராஃப்ட் நைஃப்
க்ளூ

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கறுப்புநிற ஸ்பாஞ்ச் துண்டில் க்ராஃப்ட் கத்தியைக் கொண்டு 8 செ.மீ அளவிலான சதுரம் ஒன்றை வரைந்து தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியுள்ள வடிவம் வருவதற்கு அதன் விளிம்புகளைக் கத்திரிக்கோலினால் வெட்டி விடவும்.
ஸ்டாகிநெட் துணியில் இரண்டு அடுக்குகள் (layers) வருமாறு எடுத்துக் கொள்ளவும். அதனை வெட்டி வைத்திருக்கும் ஸ்பாஞ்ச் துண்டின் மேற்பக்கம் முழுவதும் மறைத்துக் கொண்டு மீதி துணியை அடிப்பக்கம் வழியாக சேர்த்து சிவப்பு நூலால் தைத்துக் கொள்ளவும்.
ஊசியில் கறுப்புநிற நூலை இரண்டாக கோர்த்துக் கொண்டு ஸ்டாகிநெட் துணி சுற்றிய ஸ்பாஞ்சின் நடுவில் வண்டின் இறக்கைகள் பொருந்தும் இடம் போல் வருமாறு சுற்றிக் கட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது வண்டின் முதுகின் மீது கறுப்பு ஃபெல்ட் துணியை ஏழு சிறிய வட்டங்களாக வெட்டிக் கொண்டு படத்தில் உள்ளது போல் க்ளூ தடவி ஒட்டிக் கொள்ளவும். (இதற்குக் கறுப்பு நிற ஸ்டிக்கர் பொட்டுக்களையும் பயன்படுத்தலாம்.)
மீதி இருக்கும் கறுப்புநிற ஸ்பாஞ்சிலிருந்து 15 செ.மீ x 7 செ.மீ x 1 செ.மீ என்ற அளவிலான ஒரு ஸ்பாஞ்ச் துண்டை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டிய ஸ்பாஞ்ச் துண்டை உருட்டிக் கொண்டு இரண்டு பக்கங்களையும் சுருக்கிக் கட்டிக் கொள்ளவும். இது பார்ப்பதற்கு வண்டின் தலைப்பகுதி போன்ற வடிவத்தில் இருக்க வேண்டும். (அதாவது நீள்வட்ட பண் வடிவில்)
இதனைச் செய்து வைத்திருக்கும் வண்டின் உடல் பகுதியோடு சேர்த்து தலைப்பகுதி வரவேண்டிய இடத்தில் வைத்து குண்டூசியால் பொருத்திக் கொள்ளவும். பிறகு கறுப்பு நூலினால் அந்தப் பகுதியை தைத்து விடவும்.
கண்களில் க்ளு தடவி அதனை வண்டின் தலைப்பகுதியில் ஒட்டிக் காயவிடவும்.
பைப் க்ளீனரில் இருந்து 15 செ.மீ அளவான மூன்று துண்டுகள் வெட்டி எடுத்து, அதனை செய்து வைத்துள்ள வண்டின் அடிப்பகுதியில் ஒவ்வொரு துண்டிற்கும் சிறிது இடைவெளிவிட்டு வைத்துக் கறுப்பு நூலால் தைத்துக் கொள்ளவும்.
வண்டின் உடற்பகுதியை விடச் சிறியதாக கறுப்பு ஃபெல்ட் துணியை ஒரு வட்டமாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய ஃபெல்ட் துணியை கால்கள் தைத்துள்ள பகுதியை மூடி வருமாறு வைத்து சுற்றிலும் கறுப்புநிற நூலால் தைத்து கொள்ளவும்.
கறுப்புக் கம்பியிலிருந்து 8 செ.மீ அளவு துண்டு ஒன்று வெட்டி, வண்டின் தலைப் பகுதியில் உணர்கொம்பு போல் வைத்துக் கறுப்பு நூலால் தைத்துக் கொள்ளவும். இப்பொழுது கால்களையும் உணர்கொம்பினையும் பொருத்தமான விதமாக மடித்து வடிவமைத்துக் கொள்ளவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இமா நலமா?நாங்கள் நலம்.ஏதோ ஒரு த்ரெட்ல விசாரித்திருக்கிங்க அது எந்த த்ரெட்னு தெரியல.அதனால் இதுல பதிவு.ரொம்ப அழகாயிருக்கு இமா,பாராட்டுக்கள்.பார்ப்பதற்க்கு நிஜ வண்டு மாதிரியே இருக்கு.

இமா.... ரொம்ப வித்தியாசமா, அழகா இருக்கு... நான் இதுவரை இது போல் பார்த்ததே இல்லை. கலக்கல்.... உண்மையை சொல்லுங்கோ.... நீங்கள் செய்ததா, செபா ஆன்டி செய்ததா???!!! ;) யார் செய்திருந்தாலும் சரி...... உண்மையில் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா அம்மா பார்க்கவே ரொம்ப சூப்பார இருக்கு சும்மா கலக்குறீங்க :) வாழ்த்துக்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் மேனகா,
அங்கு பார்த்ததற்குத் தான் இங்கு பதிவா? வண்டுக்கு இல்லையா? :) சும்மா சொல்ல வேண்டாம், நிஜ வண்டுக்குக் கண்கள் இப்படி இராது. :) பாராட்டுக்கு நன்றி மேனகா. உங்கள் குட்டிப் பையன் எப்படி இருக்கிறார்?

வனி,
//நான் இதுவரை இது போல் பார்த்ததே இல்லை.// வண்டு மாதிரி இல்லை என்கிறீர்களா? :) இது இங்குள்ள வண்டு. :)
//நீங்கள் செய்ததா, செபா ஆன்டி செய்ததா?// செபா ஆன்ட்டி செய்த, இமா செய்தது. :) பாராட்டுக்கு நன்றி வனி.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி லக்ஷ்மி. அது சரி, நீங்க எனக்கு எதுக்கு நன்றி சொல்றீங்க?? செய்து பார்த்து விட்டு நன்றாக வந்தால் வந்து நன்றி சொல்லுங்கள். :)

மூவருக்கும் என் அன்பு

இமா

‍- இமா க்றிஸ்

என் குறிப்புகளை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தும் அட்மின், பாப்பி மற்றும் அறுசுவை குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ரொம்ப க்யூட்டா இருக்கு இமா.. உங்களை மாதிரியே.. :)))))))))))))

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் இமா அக்கா ரொம்ப நல்லா இருக்கு. சூஊஊஊஉப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

இமா நான் இதே லேடிபக்கை சோடா பாட்டில் மூடிகளில் பெயின்ட் அடித்து செய்வதை தான் பார்த்திருக்கிறேன்.உங்களுடையது மெகா சைஸில் அழகு.

Patience is the most beautiful prayer!!

நன்றி சந்தனா. :)))))))))) :))))))))))))) :))))))))))))
நன்றி உத்ரா & பிரபா. :)

‍- இமா க்றிஸ்

செபா ஆன்டி, நல்ல அழகாக இருக்கு லேடி பேட்... பக்.... (செபா ஆன்டி செய்த இமா, இமா செய்த லேடி பேட்... ). ரொம்பத்தான் பொறுமை உங்களுக்கு... என்னைப்போலவே:)... ஆ.. எங்கோ புகைகிறதே..

///ரொம்ப க்யூட்டா இருக்கு இமா.. உங்களை மாதிரியே.. :)))))))))))))/// சந்தனா இது ரொம்ப ஓவர் எனக்கே வெட்கமாக இருக்கு:).

இமா ஒரு வரியில் நன்றி சொல்லப்படாது:) எனக்கு ஒரு வரிப்பதில்கள் பிடிப்பதில்லை:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் இந்த லிங்கில் வச்சு இருந்த ஒரு லேடி பக்கை(மட்டும்) யாரோ சுட்டு அதுக்கு சிவப்பு நிறத்தில் அழகா சட்டை தைச்சு போட்டு அருசுவை உள்ள விட்டுடாங்க ... அழகான லேடி பக் பக் பக்.....காணாமல் வாடும்

http://picasaweb.google.co.in/haish12/ZrIAvC#5374626065211309714

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இமா, மிகவும் அழகான வண்டு.

ஒரு சீசனுக்கு நிறைய வண்டுகள் எங்கள் வீட்டுப்பக்கம் வரும். தொட்டாலே ஒரு மணம் அடிக்கும்.

அதென்ன ஓரவஞ்சனை சந்தனாக்கு மட்டும் உங்கள் போட்டோ காட்டினீர்களா??

ஹைஷ் அண்ணா நலமா??
வாணி

//உங்கள் குட்டிப் பையன் எப்படி இருக்கிறார்?// போங்க இமா அநியாயத்துக்கு என் பொண்ணை ஆணாக மாத்திட்டீங்க.எனக்கு ஒரு பொண்ணு இமா.நீங்களும் செபா ஆண்ட்டியும் நலமா?

அதிரா - வெட்கப்பட்டது போதும்... கையை எடுங்கள் முகத்தை விட்டு... நீங்கள் ஒரு வரி பதில்கள் பிடிப்பதில்லை என்று சொன்னதால், அவ்வொரு வரி பதிலையும் இப்போ காணவில்லை. :))

இமா - ரொம்ப சிரிச்சுட்டீங்க போல.. வாய் அப்படியே ஸ்தக் ஆகிடலியே? :)

வாணி - செபா செய்த மணிமகுடத்தை அணிந்து ஒருவர் போஸ் கொடுத்திருந்தார்.. அம் மணிமகுடத்தை போல அழகில்லை என்றாலும், சுமாராக க்யூட்டாக இருந்தார் :))) லாங் ஷாட் புகைப்படம் என்றாலும், காட்சி கிடைக்கப் பெற்றோம்.. உங்களுக்காக அந்த லிங்க்..

http://www.arusuvai.com/tamil/crown?from=0&comments_per_page=10

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சந்தனா, மறந்துபோயிருந்தன், ஞாபகப்படுத்திப்போட்டீங்கள். இமாவின் பதில் எனக்கு இன்னும் வரவில்லை:), பறவாயில்லை... இது என்ன எனக்குப் புது விஷயமோ?:), காத்திருந்து காத்திருந்து எல்லாம் இப்ப பழகிப்போச்சு:).

இருப்பினும் அங்கே ஹைஷ் அண்ணன் புகார் கொடுத்துள்ளார், தன் லேடி பக்கைக் காணவில்லையாம் என. அந்தப் பயத்தில்தான் இமா தலைமறைவாகிட்டாரோ என, இமாவின் மெளனத்தைப் பார்க்கத் தெரிகிறது:). உங்களுக்கு எப்படித் தெரியுது சந்தனா?:).("அப்பாடா காற்றுள்ள போதே தூற்றிப்போட வேண்டும்", அதிராவுக்கு பரிசெனச் சொல்லி, மணியாம் மணி:):), நம்பி ஏமாந்திட்டேன், அதுதான் இப்படி:)).

ஹைஷ் அண்ணன் உங்கள் மண் சிலைகள் மிக மிக அருமை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சந்தனா, பிரபா & உத்ரா,
அட்மின் கூட ஒன்றும் சொல்லவில்லை, அதிரா மேடம் வந்து விரட்டுறாங்க...;( ;( அதுதான் திரும்பி வந்திருக்கிறேன். :)

அதிரா,
என்ன, அதிராவுக்குத் 'தமிழ் மலர்' எல்லாம் நினைவு வருகிற மாதிரி இருக்கிறதே!!
சொன்னது 'பாயசம் வைக்க வேண்டும்' பாட்டு மாதிரி இருக்கிறது. :)
நீங்கள் ஒரு வரி பதில்கள் பிடிப்பதில்லை என்று சொன்னதால், பொறுமையாக வந்து பெரிய பதிவு போட்டிருக்கிறேன். இப்போ சரிதானே? :)
//இமாவின் பதில்// அடுத்த ப்ராஜெக்ட் அதுதான். என்னவோ தெரியவில்லை, எழுதவே மனது வரவில்லை. :(

//ஹைஷ் அண்ணன் புகார்// விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. ஜீனோவையும் உதவி கேட்கலாம் என்று இருக்கிறேன். பொறுங்கள் வரட்டும்.

ஹைஷ் அண்ணா,
//என்னோட அழகான லேடி பக் பக் பக்.....காணவில்லை// ??? :) யாரு, லதா அண்ணிதானே? சரி, சொல்லீட்டீங்க, யோசிக்க வேண்டாம், நானே கண்டு பிடித்துத் தருகிறேன். :)
//ஹைஷ் அண்ணன் 'உங்கள்' மண் சிலைகள்// செய்தவர் தம்பியோ அண்ணாவோ என்று காற்று வாக்கில் காதில் விழுந்ததே, அப்படி இல்லையா? :)

ஐடியா தந்திருக்கிறீங்கள் உத்ரா. கட்டாயம் சோடா பாட்டில் மூடிகளில் பெயின்ட் அடித்து செய்து பார்க்கப் போகிறேன்.

வாணி,
ஒரு சீசனுக்கு நிறைய வண்டுகள் எங்கள் வீட்டுப்பக்கமும் வரும். தொடவே வேண்டாம், ஒரு மணம். நான்காம் வகுப்புப் படிக்கிற போது என்று நினைவு ஒருமுறை ஒரு கறுப்பு வண்டு என் காதில் நுழைந்து வெளியே வர முடியாமல் கடித்து விட்டது. :)

வாணிக்கு உதவியமைக்கு நன்றி சந்தனா.
//அம் மணிமகுடத்தை போல அழகில்லை என்றாலும், சுமாராக க்யூட்டாக இருந்தார்// :))) நன்றி.

மேனகா,
நானாகவே பெஞ்ச் மேலே ஏறி நின்று விடுகிறேன். ;( ஷிவானி நலமா? எனக்கு அன்று என்ன நடந்தது! தூக்கக் கலக்கமோ தெரியவில்லை. எப்படி இருந்தாலும் தப்பு தப்புத் தான். மன்னிப்பைக் கோருகிறேன். நாங்கள் இருவரும் நலம். விசாரிப்புக்கு நன்றி.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இந்த செய்முறையை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் செய்த லேடி பர்ட்டின் படம்

<img src="files/pictures/lady-bird-imma.jpg" alt="picture" />

அப்பாடா... என் லேடி பேட் கள்"" வந்துவிட்டன. நீண்ட.... நாட்களாயிற்றே... ஏதும் கடைக்கு வித்திட்டாரோ:) எனப் பயந்தே போனேன். மிக்க நன்றி இணைத்தமைக்கு.

இமா எப்படி இருக்கின்றன சோடி வண்டுகள்?. தனியே ஒன்று செய்தால், யாரும் சண்டைக்கு வந்திடுவார்களோ, தன் ஒன்றைக் காணவில்லையென, என்ற பயத்தில் சோடியாகவே செய்திட்டேன்.. இனி யாரும் அதட்ட முடியாதெல்லோ என்னை:).

சரி சரி இதுதான் என் முதல் கை வண்ணம், இதன் அழகைப் பார்த்ததும், பொத்துப் பொத்தெனக் கண்ட நிண்ட இடத்திலெல்லாம் மயங்கி விழுந்திடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி அதிரா.

நீங்கள் வெள்ளை நிற ஸ்பஞ்ச் வைத்திருக்கிறீங்களோ??
நாலஞ்சு நாள் பட்டினி போட்ட மாதிரியும் இருக்கு. இப்பதான் சாப்பாடு குடுத்திருக்கிறீங்கள் போல. நல்லாச் சாப்பிடுகினம் ரெண்டு பேரும்.
பின்..னால.. சுப்பவைஸ் பண்ணுறது.. ஓ.. :)

கலாதியா இருக்கு அதிரா. மினக்கெட்டு செய்து பார்த்திருக்கிறீங்கள், அதுவும் ரெண்டு. ரெண்டுமே வடிவா இருக்கு. நல்ல சந்தோஷம். மிக்க நன்றி.

ஹைஷ் அண்ணா, பார்த்து விட்டீங்களோ? நீங்கள் படம் போட்டு லிங்க் தந்தீங்கள். மொப்ஸ் பிடிச்சுக் கொண்டு வந்து விட்டா. அதுவும் ரெண்டு கலர் ஆக்கள். :)
(புழுவுக்குப் பயப்பிடுற ஆக்கள் வண்டுக்குப் பயப்பிடுறது இல்லையோ!!)

படம் போட்டதற்கு நன்றி அட்மின். (எந்தப் படம் எண்டு கேட்கக் கூடாது. அதிராட வண்டுக்கு மட்டும்தான்.) :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா, உண்மையைச் சொல்லட்டோ?
உடம்புக்கு வைத்தது, பாத்திரம் கழுவும் பொஞ்ச். தலைக்கு வைத்தது, அலுமினியப் பொஞ்ச். அதுதான் நல்ல ஸ்ரெடியாக நிற்குது:).

கால்களுக்கு கம்பி கிடைக்கவில்லை, கறுப்பு லேஸ் வச்சுத் தச்சேன்.

சத்தியமாக நான் நல்ல குழுகுழுவான வண்டாகத்தான் அனுப்பினனான்..:).. மொட்டைமாடியிலதான் பட்டினி போட்டிருக்கினம்:(..

(புழுவுக்குப் பயப்பிடுற ஆக்கள் வண்டுக்குப் பயப்பிடுறது இல்லையோ!!)/// வண்டு நெளியாதெல்லோ:) அதனால பயமில்லை:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதுதானோ விஷயம்!! நானும் நினைச்சனான், பச்சை!! வண்டுக்கு முன்னங்கால் தத்ரூபமா இருக்குது எண்டு. தாங்க்ஸ் அதிரா.

‍- இமா க்றிஸ்

தப்பு இமா தப்பு...
அது பச்சை இல்லை நீநீஈஈஈஈஈலம்!!!
நீல வண்டு Boy..... பிங்கி வண்டு Girllllllllllllll.
மிக்க நன்றி பாராட்டுக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஓ.. அப்பிடியா அதீஸ்? நான் நினைச்சன் ஹைஷ் அண்ணா தேடின பச்சைச் சட்டை போட்ட வண்டோ எண்டு. :))
நீங்கள் இப்பிடிக் 'கலர் கோடிங்' எல்லாம் வச்சு விளையாடி இருக்கிறீங்கள் எண்டு விளங்கேல்ல. விளக்கத்துக்கு நன்றி. :)))

‍- இமா க்றிஸ்

"லேடி பேட்"கள் அழகாக இருக்கின்றன. நல்ல கை வண்ணம். மேலும் நிறையச்செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செபா.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta