ஸ்டீல் பீரோவில் நல்ல வாசனை வர

அன்புத் தோழிகளே தயவு செய்து உதவவும்.

ஸ்டீல் பீரோவில் நல்ல வாசனை வர என்ன செய்யலாம்.மேலும் பூச்சி வராமல் இருக்க நாப்தலின்பால்ஸ் தவிர வேறு என்ன உபயோகிக்கலாம்.

நன்றி
திவ்யா

ஸ்டீல் பீரோவில் நல்ல வாசனை வர

1) மாத உபயோகத்துக்கு வாங்கும் குளியல் சோப்புகளை உரை பிரித்து, ஒவ்வொரு தட்டிலும் வைத்து விடுங்கள்.

2) ஊதுபத்திகள் பாக் செய்து வரும் அட்டைப் பெட்டிகளைப் பிரித்து பீரோவின் உள்ளே வையுங்கள்.

3) சந்தன வில்லைகளை போட்டு வைக்கலாம்.

4) கடைகளில் இதற்கென்றே ஃப்ளவர் டஸ்ட் பாக் கிடைக்கிறது. அதையும் பீரோவில் வைக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா மேடம்..இதை இந்த இடத்தில் சொல்ல கூடாது தான்..ஆனால்..கவனிக்கும்போது பழைய பிரயோஜனப்பட்ட இழை எல்லாம் தூசி தட்டி புத்துயிர் கொடுக்குற மாதிரி பீல் ஆகுறேன்..சூப்பர்..

Madurai Always Rocks...

செண்ட் பாட்டில்,அத்தர் ஆகியவற்றை திறந்து வைக்கலாம்.!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

திவ்யா

என் அம்மா... மரிக்கொழுந்து பூ வாடி காய்ந்து போன உடன் வைப்பார்கள் உங்களுக்கு கிடைக்குமானு தெரியல.. ஊது பத்தி பெட்டிகளும் வைக்கலாம்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான் ஸ்டீல் பீரோல எப்பவுமே கற்பூர வில்லைகளைத்தான் எல்லா தட்டுக்களிலும்
போட்டு வைப்பேன். வாசனைக்கு வாசனையும் இருக்கும் பூச்சிகளும் அண்டாது.

மேலும் சில பதிவுகள்