'அதிரா & ரேணுகா' சிறப்புச் சமையல் வாரம் - அசத்த போவது யாரு!! முடிவுகள்
அறுசுவையினர் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.
சமைத்து அசத்தலாம் பகுதியைச் சிறப்பாகக் கொண்டு நடாத்திய சகோதரிகள் அதிரா, ரேணுகா இருவரையும் கௌரவிக்குமுகமாக ஆரம்பிக்கப்பட்ட 'சிறப்பு சமையல் வாரத்தில்' இணைந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் முதலில் என் நன்றிகள். இந்தப் பகுதியை ஆரம்பித்து வைத்த சகோதரி வனிதா வில்வராணி முருகன் அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றி.
ஏறத்தாள நிறைவினை அண்மித்துக் கொண்டிருக்கிறோம். பங்களித்துள்ளவர்கள் இதுவரை சமைத்த குறிப்புகளை (பதிவு இல.85 வரை) இங்கு பட்டியலிட்டிருக்கிறேன். இது முடிவு அல்ல, இது வரையிலான கணக்கெடுப்பு மட்டுமே. கணக்கில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சகோதர சகோதரிகள் சுட்டிக்காட்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன். அறுசுவையில் ஆவணி 31 தேதி அன்று பதிவாகும் இறுதிப் பதிவுடன் கணக்கினை நிறைவு செய்து முடிவுகளை நாளை வெளியிடுவேன்.
உங்கள் அனைவரது பங்களிப்பிற்கும் ஒத்துழைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
லக்ஷ்மி ஷங்கருக்கு என் விசேட நன்றிகள்.
அன்புடன் இமா
கணக்கெடுப்பு சரிபார்க்க வாருங்கள்
பதிவு 85 வரையிலான கணக்கெடுப்பு இதோ, சரிபார்க்க வாருங்கள். :)
1) தனிஷா
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. மீன் குழம்பு
2. ரணபீன்ஸ் கறி
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
3. நக்கெட்ஸ்
4. வெஜ் ஸ்ட்யூ
~~~~~~~~~~~~~~~~~
2) வனிதா
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. வாழைக்காய்ப் பிரட்டல்
2. காராமணி வடை
3. கத்திரிக்காய் சம்பல்
4. பொரித்து இடித்த சம்பல்
5. கத்திரிக்காய் பொரிக்கறி
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
6. காரகுழம்பு
7. முட்டை மசாலா வறுவல்
8. தக்காளி சாதம்
9. உருளை வறுவல்
10. கறிவேப்பிலை சாதம்
11. சந்தவை
12. மசாலா பால் (பொடி)
~~~~~~~~~~~~~~~~~
3) சுகா
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. சிக்கின் பிரட்டல் கறி
2. உருளைக்கிழங்கு பிரட்டல்
3. கத்தரிக்காய்ப் பொரிக்கறி
4. தாளித்த சொதி
5. கறிபன்
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
6. சிக்கன் நெகட்ஸ்
7. ஸ்பினாஜ் கீரைக்கறி
~~~~~~~~~~~~~~~~~
4) இமா
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. புரோகோழி அவியல்
2. பொரிச்சு இடிச்ச சம்பல்
3. கறிபண்
4. உருளைக்கிழங்கு பிரட்டல்
5. தாளித்த சோதி
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
6. பிரட் டோஸ்ட் - காரம்
7. கலகலா
8. இனிப்பு கோதுமை போண்டா
9. கீரை ப்ரெட் டோஸ்ட்
10.முட்டை மசாலா வறுவல்
~~~~~~~~~~~~~~~~~
5) ஸ்வர்ணா
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. பாகற்காய் பிரட்டல்
2. வெந்தயக் குழம்பு
3. வெங்காய வடகம்
4. காலிஃப்ளவர் பொரியல்
5. கத்தரிக்காய் சம்பல்
6. பொன்னாங்கண்ணிக்கறி
7. வாழைப்பூக் கறி
8. உருளைக்கிழங்கு பிரட்டல்
9. பொரித்து இடித்த சம்பல்
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
10. . பட்டாணி குருமா
11. தேங்காய் தயிர் சட்னி
12. சப்பாத்தி சன்னா மசாலா
13. ஓட்ஸ் கஞ்சி
14. வெஜ் சன்னா பிரட் சாண்விச்
15. கறிவேப்பிலை சாதம்
16. சேமியா ரவா இட்லி
17. மசாலா பால் (பொடி)
~~~~~~~~~~~~~~~~~
6) ப்ரியா
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. பொரித்து இடித்த சம்பல்
2. உருளைக்கிழங்கு பிரட்டல்
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
3. காரக்குழம்பு
4. சன்னா மசாலா
~~~~~~~~~~~~~~~~~
7) வத்சலா
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. மீன்குழம்பு
2. பீற்றூட் கறி
3. புரோகோழி (Broccoli)அவியல்
4. பொரித்து இடித்த சம்பல்
5. சிக்கின் பிரட்டல் கறி
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
6. ஓட்ஸ் கஞ்சி
7. சிக்கன் மஞ்சுரியன்
~~~~~~~~~~~~~~~~~
8) அதிரா
அதிராவின் குறிப்புகளிலிருந்து !! :)
1. பீற்றூட் கறி
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
2. தேங்காய் தயிர் சட்னி
3. பிரட் ரோஸ்ட் காரம்
4. புதினா கொத்தமல்லி சாதம்
5.முட்டைக்குழம்பு
~~~~~~~~~~~~~~~~~
9) ரேணுகா
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. கத்திரிக்காய் பொரிக்கறி
2. வெண்டைக்காய் வெள்ளை கறி
3. ரண பீன்ஸ் கறி
4. காராமனி வடை
5. உருளைகிழங்கு பிரட்டல்
6. இடித்த சம்பல்
~~~~~~~~~~~~~~~~~
10) வின்னி
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. உருளை கிழங்கு பிரட்டல்
2. பொரித்து இடித்த சம்பல்
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
3. கோவக்காய் சாதம்
4. காரக் குழம்பு
~~~~~~~~~~~~~~~~~
11) யோகராணி
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. வெந்தய குழம்பு
2. மீன்சொதி
3. மரவள்ளிக்கிழங்கு வறை
4. பீட்ருட் கறி
5. கறி பன்
6. வாழைக்காய் பிரட்டல்
7. பாகற்காய் பிரட்டல்
8. பொரித்து இடித்த சம்பல்
9. மீன்குழம்பு
10. புரோகோழி அவியல்
11. நெத்தலி கருவாட்டு கறி
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
12. தேங்காய் தயிர் சட்டினி
13.முட்டைக்குழம்பு
14. காரக்குழம்பு
15. கருவேப்பிலை சாதம்
16. கறி வறுவல்
17. வதக்கிய தேங்காய் சட்னி
18. மசாலா பால்
~~~~~~~~~~~~~~~~~
12) லக்ஷ்மிஷங்கர்
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. காராமணி வடை
2. உருளைக்கிழங்கு பிரட்டல்
3. பொரித்து இடித்த சம்பல்
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
4. கருவேப்பிலை சாதம்
6. மற்றும் தக்காளி சாதம்
5. தேங்காய் தயிர் சட்னி
6. கோவக்காய் சாதம்
7.பட்டாணிகுருமா
8. காரக்குழம்பு
9. சன்னா மசாலா
~~~~~~~~~~~~~~~~~
13) சீதாலக்ஷ்மி
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. கத்தரிக்காய் சம்பல்
2. காராமணி வடை
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
3. வதக்கிய தேங்காய் சட்னி
4. சன்னா மசாலா
~~~~~~~~~~~~~~~~~
14) உத்ரா
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. வெண்டைக்காய் பால்கறி
2. காலிப்ளவர் பொரியல்
~~~~~~~~~~~~~~~~~
15) அதீ
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. பாகற்காய் பிரட்டல்
~~~~~~~~~~~~~~~~~
17) சந்தனா
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. வெந்தயக் குழம்பு
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
2. முட்டை மசாலா வறுவல்
3. உருளை வறுவல்
4. தக்காளி சாதம்
~~~~~~~~~~~~~~~~~
17) வாணி
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. கத்திரிக்காய் பொரிகறி
2. மரவள்ளிக்கிழங்கு வறை
~~~~~~~~~~~~~~~~~
18) ஆசியா உமர்
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. மீன் குழம்பு
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
2. உருளை வறுவல்
~~~~~~~~~~~~~~~~~
19) சுஸ்ரீ
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. பீற்றூட் கறி
2. வெண்டைக்காய் வெள்ளைக்கறி
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
3.காரக்குழம்பு
4. ஓட்ஸ் கஞ்சி
~~~~~~~~~~~~~~~~~
20) ஹைஷ்
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. தாளித்த சொதி
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
2. முட்டை மசாலா வறுவல்
3. தக்காளி சாதம்
~~~~~~~~~~~~~~~~~
21) இலா
அதிராவின் குறிப்புகளிலிருந்து
1. ப்ரோக்கோழி அவியல்
~~~~~~~~~~~~~~~~~
22) கோமு
ரேணுகாவின் குறிப்புகளிலிருந்து
1. தக்காளி சாதம்
2. உருளை வறுவல்
- இமா க்றிஸ்
இமா, என் கணக்கில் தவறிருக்கிறதே...
இமா... நல்ல அழகாக பட்டியல் போட்டுவிட்டீங்கள்...
///8) அதிரா
அதிராவின் குறிப்புகளிலிருந்து !! :)
1. பீற்றூட் கறி ///
இதைச் சேர்ப்பது அழகல்ல சேர்க்கவேண்டாம். அதிராக்குதான் எவ்வளவு பெரிய மனது என நீங்கள் சொல்வது கேட்கிறது:), புரிஞ்சாச் சரி:)...
ஹைஷ் அண்ணனே... 3 செய்துவிட்டார்(எனக்கு வயிறெரிகிறதென்பது வேறுகதை:)), எங்கட இலாவுக்கு மட்டும் குழல்புட்டுக்கேட்குதாமோ????
சரி சரி எனக்கேன் ஊர்வம்பு:)....
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
அதிரா
அதிரா உங்கட பாகற்காய் பிரட்டல் ரொம்பவும் சுவையக இருந்தது.பின்னூட்டம் கொடுக்க 2 தரம் முயற்சி செய்தேன் முடியாமல் போய்விட்டது. அடுத்த சமையலுக்கு குறிப்பு தேடினேன் ஒன்றும் open ஆகவில்லை. இருந்தாலும் சமைத்து பின்னூட்டம் அனுப்புவேன். இப்போதான் உங்களின் குறிப்பை தனியே பிரித்து தந்துள்ளீர்களே.
அன்புடன் அதி
இமா -
இமா - அதிராவை நினைத்து கொண்டே பிரட்டி பிரட்டி செய்த எம் சிக்கன் பிரட்டல் கறியையும் சேர்த்திடுங்கோ..
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா
இமா....
இமா.... முதலில் உங்க தமிழுக்கு தலை வணங்குகிறேன். :) அத்தனை அழகுத்தமிழ். உங்கள் முன்னுறையை தான் சொன்னேன். கூடவே அத்தனை அழகாக லிஸ்ட் குடுத்திருக்கீங்க. எல்லாரும் சரி பார்த்து சொல்லட்டும். நாளை தீர்ப்போடு பார்ப்போம். மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அதிரா.... ரொம்ப நல்லவங்க ;)
சந்தனா.... எப்படி இப்படிலாம்??? ஒரு சிலர் அதிராவை நினைச்சு இடிச்சு இடிச்சு சம்பல் செய்தாங்க.... நீங்க அதிராவை நினைச்சு பிரட்டி பிரட்டி சிக்கன் செய்தீங்களா??? ஏன் எல்லாருக்கும் அதிரா மேல் இந்த கொலை வெரி? உங்க பதிவை பாடிச்சு சிரி சிரின்னு சிரிச்சுட்டேன்.
அதிரா.... கவனிங்க.... எல்லாரும் உங்களை பாடாக படுத்தறாங்க. பாவம் அதிரா நல்ல பொண்ணுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. (இவன் ரொம்ப நல்லவன்யா.... எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்.....!!!)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி, இமா
வனி, இமா சாரி ரொம்ப லேட். நான் இந்த வாரம் அதிராவின் பீட்ரூட் பிரியாணியும் ரேணுவின் உருளைகிழங்கு வறுவலும் செய்தேன். கொஞ்சம் பெரிய மனது வைத்து ரெயினில் ஏற்றுங்கோ.
ஆமா வனி என்னை தேடினீங்களோ?
அறுசுவையின் செல்லப் பிராணி
எனக்கு செவ்வாய்க்கிழைமை தொடங்கிவிட்டது. :)
இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. விரைவாக வந்து கணக்கினைக் கொடுங்கள், அப்படியே சரிபார்த்தும் சொல்லுங்கள். இங்குள்ள பதிவுகளையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளுகிறேன்.
அதிராவின் வேண்டுகோள் ஏற்கப்பட்டுவிட்டது. :)
அதி, சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள், பெயரில் பிழை இருப்பதை. :) நன்றி.
என்ன சந்தனா, இவ்வளவுதானா??? :)))))))
நன்றி, அதிரா & வனிதா. அழகாக இருந்து பயனில்லை, சரியாக இருக்க வேண்டும். :) நெட் வேகம் போதாது இருப்பதால் இங்கு ஒரு தட்டு, நடுவே வேறு வேலை என்பது போல தான் கணக்குகளை முடித்தேன். தவறுகள் இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. எனவே உங்கள் அனைவரது உதவியையும் நாடி நிற்கிறேன். விரைவில் வருக. :))))) (அமைப்பு நான் நினைத்தது போல் வரவில்லை. 'ஸ்பேஸ்' தன் இஷ்டத்துக்குப் பதிவாகி இருக்கிறது. மாற்றத் தெரியவில்லை. மன்னிக்க வேண்டும்.)
அன்பான பூனை, அறுசுவையில் எல்லோருக்கும் செல்லப் பிராணி என்பதால் எல்லோரும் அதனோடு விளையாடுகிறார்கள் வனி. :) பூனையாரும் எல்லாவற்றையும் ரசிக்கத்தான் செய்கிறார். :)))))
இணைந்துகொண்டமைக்கு நன்றி மாலி. இன்னும் நேரம் இருக்கிறது. :)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
இமா டென்ஷன் வேண்டாம்
இமா என் கணக்கு சரியே,இந்த ஸ்பேஸ் அப்படி தான் படுத்தும்,இதற்க்கு ஏன் மன்னிப்பு எல்லாம் கேட்கறீங்க,திங்கட் கிழமை என்ற டென்சனே இல்லாமல் நான் இருக்கேன் ஜாலியா:)))ஆனால் உங்களை டென்ஷன் தொற்றிகிட்டது:((((மிகவும் நன்றி உங்களுக்கு பல வேலைகளுக்கு நடுவேயும் இங்கும் அங்கும் நடக்கறீங்க,
அன்புடன்
ரேணுகா
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
இமா
என்னுடைய கணக்கு சரியே
//சந்தனாவுக்கு இரண்டு ஸ்கோர் கொடுத்தல் எனக்கு ஆறு ஸ்கோர்// நல்ல கதை. நானே 'வாக்யூம் க்ளீனர்' ஒழுங்கா வேலை செய்ய மாட்டுதாம் என்று யோசினையில இருக்கிறன், நீங்கள் வேற. :)//
எனக்கு இதனுடைய correct அர்த்தம் புரியவில்லை:(
வேறு மாதிரி புரிதிருகிறது, அனால் நம்ம இமா கண்டிபா அந்த அர்த்தத்துல போட்டுருக்க மா
ட்டங்கனு நம்பி விளக்கு மாறு :) கேட்டுகொள்கிறேன்.
ஸ்வர்ணா
நன்றிகளுடன்
ஸ்வர்ணா