மைதா சீடை

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - முக்கால் கிலோ
பொட்டுக்கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 300 கிராம்(அல்லது டால்டா)
தேங்காய் - ஒரு மூடி
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிது


 

துருவிய தேங்காய், பெருங்காயம், உப்பு, மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மைதாவை மெல்லிய வெள்ளைத் துணியில் கொட்டி மூட்டையாக கட்டி, அடுப்பில் இட்டு பானை ஆவியில் மூன்று நிமிடம் வேக வைக்கவும்.
அந்த மாவில் பொட்டுக் கடலை மாவு, அரைத்த விழுது எல்லாவற்றையும் சேர்த்து கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
மாவினை சிறிது சிறிதாக கிள்ளி, விரல்களாலே சீடைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்