அருசுவையால் பயனடைந்தேன்

Dear Deva madam நான் அபுதாபி(வளைகுடா நாட்டிற்க்கு) வந்ததிலிருந்தே முடிகொட்டுதல் பிரச்சனையால் அவதியுற்றேன்.உங்கள் ஆலோசனையால் Anti Dandruff shampoo உபயோகிப்பதை நிறுத்தினேன்.இப்பொழுது Baby ஷாம்பு உபயோகிக்கிறேன்.மற்றும் உங்கள் அறிவுரைப்படி எலுமிச்சை பழத்தின் சாருடன் தண்ணீர் சேர்த்து தலையில் ஊறவைத்து தலைகுளித்தேன்.இப்பொழுது நல்ல முன்னேற்றம் தெரிகிறது.முடி கொட்டுவது குறைந்துள்ளது.உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.மேலும் என்னுடைய தலையில் பொடுகும் இருக்கிறது.இந்த எலுமிச்சை உபயோகிப்பதால் அதுவும் குறைந்து வருகிறது.மேலும் அழகுகலை நிபுணர் உமா அவர்களுக்கும் எனது நன்றி உங்கள் ஆலோசனைப்படி வெந்தயம் ஊறவைத்து குளிக்கிறேன் வெந்தயம் ஊறவைத்து குளிப்பதால் குளிர்ச்சியாகவும் உள்ளது அதனுடன்.தலை குளிக்கும் அன்று முடி மென்மையாகவும் உள்ளது.மேலும் என்னுடைய நெற்றியில் பொடுகு அதிகமானால் பொரிபொரியாக பரு வரும் அதுவும் உங்கள் எலுமிச்சை டிப்ஸ் மூலம் நன்றாகவே போய்விட்டது.மிகவும் நன்றி.அருசுவைக்கும் நன்றி.அருசுவையால் பயனடைந்தவர்களும் உங்கள் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.அனைவர்க்கும் உபயோகமாக இருக்கும்

மேலும் சில பதிவுகள்