please help me out

வணக்கம் தோழிகளே எனக்கு வெந்தய களி குறிப்பு தாங்க.வெந்தய களி சாபிட்டால் பால் சுரக்கும் என்கிறார்கள். குழந்தை பிறந்து 3 மாதமே ஆகிரது. தாய் பால் போதவில்லை. non-veg சாப்பிட்டால் குழந்தைக்கு ஒத்துகொள்ளமாட்டிங்குது ரொம்ப அலுகிறது.ஏதாவது வலி இருக்கிரதா?
please help me out.

ரவையை வறுத்து பாலில் காய்ச்சி நிறைய குடியுங்க..சுவைக்கு இனிப்பும் நெய்யில் சின்ன வெங்காயம் வறுத்து சேர்த்து குடிக்கலாம்..நல்ல வித்யாசம் தெரியும்

பால் சுரக்க வெந்தயத்தை எண்ணெய் இல்லாமல் வறுத்து அப்படியே பொடி செய்து இரண்டு வேளை சாப்பிடலாம். அதே போல் சீரகத்தையும் சாப்பிடலாம். நிறைய தண்ணீர் குடியுங்கள். பால் நிறைய சாப்பிடுங்கள். சுரக்காய், காளிபிலோவேர், கத்தரிக்காய், பீர்கங்காய், அரை கீரை நெறைய சாப்டுங்க. இரும்பு சத்து உள்ள காய்கறிகள் நறைய சேர்த்துகோங்க. பூண்டை வதிக்கி பாலில் கொதிக்க வைத்தும் சாப்பிடலாம். "lactare" என்ற ஆயுர்வேதிக் மாத்திரை கிடைக்கிறது. அதில் எந்த வித சைடு எபெக்டும் இல்லை. உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து உபயோகிக்கவும்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

முதலில் பால் அதிகம் சுரக்கவில்லை என்ற எண்ணத்தை கைவிடுங்கள்.குழந்தைக்கு தேவயான பால் நிச்சயம் உங்களுக்கு சுறக்கும்.Non veg spicyயா சாப்பிடாமல் சூப் வைத்து குடியுங்கள்.குழம்பு மீன்(வஞ்சிற மீன்,பால் சுறா) சாபிடுங்க.நிலக்கடலை ஒரு பிடி,முளை கட்டிய பாசிப்பயறு,வேக வைத்த பூண்டு,பாலக் கீரை சாப்பிடுங்கள்.மொத்தத்தில் அதிக காய்களும்,கீரையும் பாலும் எடுத்துக்கொன்டு சந்தோசமாய் இருந்நால் போதும்,பால் நன்றாய் சுறக்கும்

மேலும் சில பதிவுகள்