தேதி: September 5, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பில்லிங்:
கருப்பு எள் - ஒரு மேசைக்கரண்டி (வறுத்தது)
வெள்ளை எள் - இரண்டு மேசைக்கரண்டி (வறுத்தது)
தேங்காய் - அரை முடி (துருவியது)
சர்க்கரை - முக்கால் டம்ளர்
நெய் - ஒரு தேக்கரண்டி
முந்திரி, பாதாம் - தலா ஐந்து ( பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
மாவு தயாரிக்க:
மைதா மாவு - கால் கிலோ
ரவை - ஐம்பது கிராம்
இட்லி சோடா - சிறிது
உப்பு - தேவைக்கு
டால்டா (அ) பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி









இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலத்தில் நோன்பு திறக்க செய்யும் பல வகை வடை பஜ்ஜி வகைகளில் இது ஒரு ஸ்பெஷல் பதார்த்தம் ஆகும். எள்ளை கல்லெடுத்து வடித்து வறுத்து கொள்ளவும், வறுக்கும் போது படப்படவென்று தெரிக்கும், சட்டியை சூடாக்கி வறுத்து உடனே அடுப்பை அனைத்து மூடி போட்டு விடவும். நிறைய செய்து ஃப்ரீசரில் வைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது, பொரிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு எடுத்து வைத்து பொரிக்கலாம். இதை நெய்யில் வதக்காமல் அப்படியே ப்ரெஷ் தேங்காயில் சர்க்கரை மற்றும் எள்ளை கலந்தும் வைக்கலாம். ஆனால் பில்லிங் சரியாக மூடனும் இல்லை என்றால் எண்ணெயில் உதிரும். இதற்கு கசகசா கிடைத்தால் அதை வைக்கலாம், சுவை நன்றாக இருக்கும்.இதில் உருளைக்கிழங்கு ஹல்வா மற்றும் கேரட் ஹல்வாவும் பில்லிங்காக வைக்கலாம்.
Comments
சூப்பர் ஜலீலாக்கா...
ஜலீலாக்கா சோமாஸ் நன்றாக இருக்கு, பெயரும் புதுமையாக இருக்கு. நோன்பு ஸ்பெஷலோ?
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
ஆமாம் அதிரா
ஆமாம் அதிரா நோன்பு ஸ்பெஷல்
நீங்கள் ஒரு ஆள் தான் இந்த ரெசிபிய பார்த்தீர்கள் போல இருக்கு
Jaleelakamal
ஜலீலாக்கா!!!
எப்படி இருக்கீங்க? எனக்கும் இது பிடிக்கும் யாராவது செய்து கொடுத்தா :)) ஒன்னோ ரெண்டோ சாப்பிடலாம்.. எப்ப செய்து தர்ரீங்க?
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
அருமை மேடம்...
ஹாய் ஜலீலா மேடம்,எப்படி இருக்கீங்க?தங்கள் செய்முறை நன்றாக உள்ளது.நாங்களும் இப்படிதான் செய்வோம்.தாங்கள் சொன்னதுப் போல் கசகசாவைதான் வறுத்து சேர்ப்போம்.அதிகம் எங்கள் ஊரு ஐட்டம் போல் தரும் தங்கள் குறிப்புக்கு வாழ்த்துக்குள்.
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
jasmine
somas is really very superb ,now adays v r doing this recepe very frequently,my husband n my child like this ,thanks 4 all ur receipe,pls if u can tell me i have also some receipe i want join wid u all, can u pls reply how can i join this n whts d format.
keep smilng
jasmine
somas is really very superb ,now adays v r doing this recepe very frequently,my husband n my child like this ,thanks 4 all ur receipe,pls if u can tell me i have also some receipe i want join wid u all, can u pls reply how can i join this n whts d format.
keep smilng
hai
அஸ்ஸலாம் அலைக்கும் ஜலிலாபானு நானும் துபாய்லதான் இருக்கேன் நீங்க செய்த சோமாஸை எங்க ஊர் காரைக்கால்ல பூரியான்னு சொல்வோம் எனக்கு ரொம்பப்பிடிக்கும் துபாய் வந்தால் எங்க வீட்டுக்கு வாங்க
nisa 72
தமிழ் ல டைப் பண்ண கத்து கிட்டீங்க போல.. .
வாழ்த்துகள் ..
வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.
hai
தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் எதை யும் சாதிக்கலாம். நன்றி