அரபிக் மெகந்தி டிசைன்

தேதி: September 9, 2009

5
Average: 5 (4 votes)

கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள், அறுசுவை நேயர்களுக்காக நீங்களும் செய்யலாம் பகுதிக்கு வழங்கியுள்ள அரபிக் மெகந்தி டிசைன் இது.

 

மெகந்தி கோன்

 

முதலில் மணிக்கட்டில் சின்ன மாங்காய் போன்ற டிசைனை வரையவும். சின்ன இடைவெளிவிட்டு இதேப்போல் மற்றொரு கோடுகள் வரைந்துக் கொள்ளவும். பார்ப்பதற்கு இரட்டைக்கோடுகள் போட்டது போன்று இருக்க வேண்டும். வரைந்த மாங்காயின் உள்ளே சின்ன சின்ன கட்டங்கள் வரைந்துக் கொள்ளவும்.
மாங்காயின் மேலே இருப்பது போல் இலை வடிவிலான டிசைன் வரையவும். உள்ளே கோடுகள் போட்டு அதன் மேலே பூ இதழ்கள் போல் வரைந்து படத்தில் இருப்பது போன்ற டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
அடுத்து ஆள்காட்டிவிரல்களில் கொடி போன்ற இந்த டிசைனை வரைந்துக் கொள்ளவும். இப்போது மணிக்கட்டிலிருந்து விரல் வரைக்கும் போட்டு முடித்துள்ள டிசைன் இது. இனி மணிக்கட்டு கீழே உள்ள கைப்பகுதிகளில் வரைய வேண்டும்.
முதலில் வரைந்த இலையின் கீழே படத்தில் உள்ளதுபோல் டிசைனை வரைந்து அதன் உள்ளே உங்கள் விருப்பம் போல் கட்டங்களோ அல்லது கோடுகளோ போட்டுக்கொள்ளவும்.
அடுத்து அதன் கீழே இருக்கும் டிசைனை வரைந்து அதன் வெளிக்கோடுகளை சற்று கனமாகவும், உள்ளே இருக்கும் கோடுகளை மெல்லியதாக இருக்கும்படி வரைந்துக் கொள்ளவும்.
வரைந்த டிசைனில் கீழ் பகுதியில் பொருந்தும் விதத்தில் பூ இதழ்கள் வரைந்துக் கொள்ளவும். அதன் கீழே இதயம் போன்ற டிசைனை வரைந்து அதன் உள்ளே கட்டங்கள் அல்லது கோடுகள் போட்டு நிரப்பவும். அதன் மேலே மூன்று மொட்டுகள் போன்ற டிசைனை வரையவும்.
படம் 5,6- ல் காட்டப்பட்டிருக்கும் டிசைன்களின் ஓரத்தில் முத்துக்கள் போன்ற இந்த டிசைனை வரையவும்.
பிறகு மணிக்கட்டில் மேலே வரைந்த மாங்காய் டிசைனிலும் இதேப் போல் முத்துக்கள் வரையவும்.
அனைவரும் விரும்பும் விதமாக கைகளில் போடக்கூடிய அழகிய அரபிக் மெகந்தி டிசைன் இது.
இந்த அரபிக் மெகந்தி டிசைன் கைகளில் கோடு போல் டிசைன் வந்து ஒரு விரலில் மட்டும் போட்டுக் கொள்ளக்கூடியது. இதன் உள்ளே இருக்கும் கட்டம், கோடுகளை உங்கள் விருப்பம் போல் வரையலாம். ஒன்று விட்டு ஒன்று நிரப்பலாம், கோடுகள் வரையலாம், புள்ளிகள் வைக்கலாம். இவற்றில் உங்கள் கைக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதற்கேற்ப வரைந்து கொள்ளவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் வனிதா சூப்ப்பாரா இருக்குப்பா... டிசைனும் நல்லா பொருமையா போட்டு இருக்கிங்க.... நல்லா இருக்குப்பா... வாழ்த்துக்கள்.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மெஹந்தி டிசைன் மிக அழகு. உங்கள் திறமைக்கு எனது பாராட்டுக்கள்.
அன்புள்ள,
செபா.

வனிதா மெகந்தி டிசைன் ரொம்ப அழகா இருக்கு. :) எல்லாத்திலையும் கலக்கிறீங்க வாழ்த்துக்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

வனிதா மெகந்தி டிசைன் ரொம்ப அழகா இருக்கு. :) எல்லாத்திலையும் கலக்குறீங்க வாழ்த்துக்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

டிசைன் வெளியிட்ட விதம் ரொம்ப நல்லா இருக்கு. :) மிக்க நன்றி அட்மின்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி பிரபா.

மிக்க நன்றி அனாமிகா.... :)

செபா ஆன்ட்டி இதையும் இமா கையில் போட்டு சொல்லனும்.... சரியா?? மிக்க நன்றி ஆன்ட்டி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மெஹந்தி ஆசை கொஞ்சம் கூட இல்லாத எனக்கே ஆசையை வர வெச்சுருவீங்க போலிருக்கே.அழகா இருக்கு

Patience is the most beautiful prayer!!

உத்ரா! நான் வேணுமின்னா போட்டுவிடவா?? :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நீங்க ஏற்கனவே உங்க மெஹந்தி போடும் திறமை பத்தி எழுதியிருந்ததை படித்த நியாபகம்.துளிர்த்து வரும் ஆசையையும் மாத்திடுவீங்க போலிருக்கே!!

Patience is the most beautiful prayer!!

anbe sivam
ரொம்ப அழகா போட்டுருக்கீங்க வனிதா...பாக்க பாக்க ஆசையா இருக்கு..உங்க கையா அது..?ரொம்ப அழகா இருக்கு, மெஹந்தியும் உங்க கையும்.. :-)

கவிதாசிவகுமார்

anbe sivam

வனீ,

அழகாக இருக்கிறது, மெஹந்தி மட்டுமல்ல.. உங்கள் கையும்தான்.

போன தடவை உங்கள் டிசைன் ஒன்று (வளைவுகள் மட்டும் உள்ளது) போட்டேன். நன்றாக வந்தது.

ஆனால் ஒன்று புரிந்தது, உங்கள் கையில் அழகாகத் தெரியும் டிசைன் என் கைக்கு நன்றாக இருக்க வேண்டும் என்பது இல்லை. :) முழுவதும் போட முடியவில்லை. இங்கிருந்து பாதி டிசைன் போடுவதற்குள் கை முடிந்து விடுகிறதே. :(

கை நீளமாகிறதுக்கும் ஏதாவது ஐடியா சொல்லுங்க. :) இல்லா விட்டால் நான் இங்கு வராமல் என் டிசைனையே போட்டுக் கொண்டு இருப்பேன். :)

இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா! இது தான் என் பிரச்சனை.. என் குட்டிகையில் போட்ட :)) டிசைன் பெரியகைல எக்ஸ்ட்ராபோலேட் செய்ய முடியல.. :(( அதுக்கு போயி...

உத்ரா... நீங்களா சரின்னு சொன்னா கோழி.. டாக்கி.. இல்லைன்னா... கிரபிட்டி தான்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச்
சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா,

நேற்றுத்தான் உங்கள் போட்டோ பார்த்து (அதுவே குட்டியாகத்தான் இருந்தது. :) ) குட்டி ஆளாக இருப்பீர்கள் போல என்று நினைத்தேன். :)

பிறகு வருகிறேன் இலா. இங்கு கதைக்கப் பயம். பென்ச் மேல ஏத்துற ஆள் இருக்கிறாங்க. :)

இமா

‍- இமா க்றிஸ்

மெகந்தி டிசைன் சூப்பர். கைகளில் அந்த மருதாணி சிவப்பை பார்க்க ஆசை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக்க நன்றி உத்ரா...ரொம்ப நாளைக்கு பின் உங்க பதிவு பார்க்க முடியுது. சந்தோஷமா இருக்கு. :) நலமா? பிசியா?

இலா.... நலமா? மெஹந்தி போட ஒரு கையை தேடுற மாதிரி தெரியுது??? ;) உங்க கையிலயே போட்டு போடோ அனுப்புங்க, அப்பதான் நம்ம உத்ரா நம்பி கையை குடுப்பாங்க.

மிக்க நன்றி கவிதா..... நலமா? இன்னும் என்கிட்ட ஹென்னா போட்டுகிட்டு போட்டோக்கு கை காட்ட ஒரு நல்ல மாடல் கிடைக்கல.... :(( இப்போதைக்கு என் கை தான்.

இமா.... நலமா? மிக்க நன்றி போட்டு பார்த்ததுக்கும் சேர்த்து தான். உங்க கை அளவுக்கு ஏத்த மாதிரி கோன் கட் பண்ணும்போது சின்னதா வெட்டுங்க. (ஹென்னா மெல்லிசா வந்தா டிசைன் நிறைய போடலாம்). ட்ரை பண்ணுங்க. அதுக்காகலாம் இந்த பக்கம் வர மாட்டேன்னு சொல்ல கூடாது. ;) [கூடவே..... இதுக்குலாம் பென்ச் மேல ஏத்தமாட்டேன்.... ஹிஹிஹீ....]

மிக்க நன்றி ஆசியா.... நலமா? போன முறை போட்ட போது எடுக்க முடியவில்லை. இம்முறை அனுப்ப வைத்திருக்கும் டிசைன் கண்டிப்பாக மருதாணி சிவப்போடு அனுப்புகிறேன். :) ஏன் முன் போல் உங்களை காண முடியவில்லை..... பிசியா இருக்கீங்களா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta