திறப்பு விழா அரட்டை - 95

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க ?? நான் மெதுவா அப்பறமா வரேன் எல்லாரும் இங்க வந்து அரட்டை அடிங்க :)

aiswariyalakshmi

// அம்மா அப்பா அக்கா தங்கை அண்ணன் தம்பி தோழி தோழன், கணவரை தவிர எல்லாமே நம்ம அறுசுவை தான் உங்கள எல்லாம் பரன்மேல :)) (ரொம்ப ரொம்ப ஒயராமன்) எடத்துல வெச்சுருக்கேன்:))//

எங்களை எல்லாம் பரணிலே ஏத்தியாச்சா? கடவுளே இங்கே ஒரே தூசியும், குப்பையுமாக இருக்கு. அது போதாது என்று என் பக்கத்தில் அதிராவும், இமாவும். ஒரே குடைச்சல் பேர்வழிகள். என் மறுபக்கத்தில் ஒரு எலி குடும்பம். ஏதோ கொறித்துக் கொண்டிருக்கிறார்கள். அட என் எதிரில் ஹூசைனம்மா என்னையே வெறித்தபடி. இலா ஏதோ சீரியஸாக யோசித்தபடி. விரைவாக ஏணியை கொண்டு வாங்கோ. இறங்கி ஓட வேண்டும்.
பரணிலிருந்து வாணி

வாணி! பரணிலே எவ்வளவு நேரம் இருப்போம்.. வாங்க கீழ போயி யாராவது அன்புள்ளங்கள் தனியா இந்த பக்கம் வர்ராங்களான்னு வெயிட் பண்ணலாம் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாணி அத சொன்னது ஸ்வர்ணலக்ஷ்மி ஐஸ்வரியலக்ஷ்மி இல்ல :)
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அனாமிகா, தவறுக்கு வருந்துகிறேன். இதைப் படிக்கிறவர்கள் தயவு செய்து பெயரை மாற்றி படிக்கவும். காலையில் அவசரமாக பதிவு போட்டேனா சொதப்பிட்டேன்.
வாணி

இலா, இன்று வெள்ளிக்கிழமை அல்லவா. அன்புள்ளங்கள் எல்லாம் மிகவும் பிஸியாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எதற்கும் பரணிலே கொஞ்ச நேரம் பதுங்கி இருப்போம்.
வாணி

யாரோ எலி இருக்கென்றார்களே!!! எங்கே எங்கே... கொஞ்சம் பொறுங்கோ... முதலில் அவர்களைப் பிடித்துக்கொண்டு அரட்டைக்கு வருகிறேன்:)... அதுவரை எனக்கு பிரசெண்ட் மார்க் போட்டு வையுங்கோ....

இலா... வாணி அங்கேயே இருங்கோ..:) இறங்கினால் ஆபத்து:)..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வாணி நான் இங்குள்ள லைப்ரரி போனதே இல்ல இங்க தமிழ் புக்ஸ் இருக்குமா? அஞ்சலியும் வந்து லைப்ரரில படிப்பாங்களா?? காலையில் நானும் அவசரமாக பதிவு போட்டு விட்டு சென்றுவிட்டேன்
இலா,வாணி,அதிரா நலமா?
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அதிரா,இமாஅம்மா,இலா,வனிதா,வாணி,சுபா,சந்தனா
,உமா(பாப்ஸ்),ஹுசைனம்மா,ஸ்வர்ணா,சுகா,பிரபா,
உத்ரா,தாமரை,மகேஷ்வரி,சோனியா,வானதி அக்கா,மாலினி,தேன்மொழி அக்கா ,ரூபா,கலா,நளினி மற்றும் அனைவருக்கும் எனது ஹாய் மற்றும் வார இறுதி நாட்கள் மற்றும் வரும் வாரமும் இனியதாக அமைய வாழ்த்துக்கள். எல்லோரும் நலமா??

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அனாமிகா,நலமா? இங்குள்ள லைப்ரரியில் தமிழ் புக்ஸ் இருக்குமா என்று தெரியவில்லை. நான் எப்போதும் குழந்தைகள் செக்ஸெனில் தான் நேரத்தை ஓட்டுவேன். மற்ற பிரிவுகளில் போய் பார்த்ததில்லை.

அஞ்சலி இன்னும் புக்ஸ் படிக்க ஆரம்பிக்கவில்லை. நான் தான் படித்து, படங்களை காட்டி விளக்கம் சொல்வேன். எனது மகனுக்கு பழைய புக்ஸ் எல்லாமே அலுத்து விட்டது.ஏதாவது புதுசு புதுசாக கொடுக்கவேண்டும். மகன் ஓரளவு ரீட் பண்ணுவார்.
மிக்கி மவுஸ், சின்ட்ரெல்லா, Tinker Bell , Beauty and the Beast, என்று படங்களுடன் இருக்கும் புக்ஸ் குழந்தைகளின் பேவரைட். Dr. Seuss புக்ஸ் ம் நன்றாக இருக்கும்.
நூல் நிலைய புக்ஸ் 3 வாரம் வரை வைத்திருக்க அனுமதிப்பார்கள். நிறைய விளையாட்டு சாமான்கள், ஸ்டோரி டைம் என்று நிறைய இருக்கு.
வாணி

பரண் மேல இடம் கிடைக்குமா... ப்ளீஸ்.. என்னையும் சேர்த்திக்கோங்கோ.. வெரி நைஸ் அண்ட் குட் கேர்ள் :))

இலா- இது உங்களுக்கே ஓவரா இல்லை? தக்காளிக்கும் வெங்காயத்துக்கும் தனித் தனி கடையா? அதுவும் வாங்க வச்சீங்களா?? அப்ப ரொம்பவே லொள்ளு தான்.. இப்போ நான் வாங்கறதும் குறைஞ்சு போச்சு.. சமையல் பண்ணறது எப்படின்னு புக்ல படிக்கறது காலேஜ் லைப்.. அது முடிஞ்சு போச்சு :(( இப்போ செப் மேற்பார்வையில சமைச்சுகிட்டு இருக்கேன்.. இதுவும் கல்வி தானே..

இமா.. உப்பும் சரி சக்கரையும் சரி, தனித் தனியா இருந்தா சமையலுக்கு உபயோகப்படுத்தலாம்.. ரெண்டும் கலந்த மாதிரி ன்னு ஒண்ணுக்கும் ஆகாத உதவாக்கரை ன்னு சொல்லிட்டீங்களே :))
//மூச்சு வாங்குது // மூச்சு உங்களை வாங்கிட்டதா?? கிலோ என்ன விலை?? :))
அது பாம்பு பாட்டு இமா.. அதிராவை நினைத்து நினைத்து பாடறது.. :))
அதுசரி, எனக்கு என்னவோ தெரியும்னு சொல்லியிருக்கீங்க.. நல்லபடியா விழுந்தீங்களோ?? அடி நல்லா பலமா பட்டதோ?? :))

மகேஸ்வரி - அடுத்த பதிவுல கண்டிப்பா நலமான்னு கேட்கக் கூடாது.. வேற ஏதாவது பேசணும் சரியா? :))

ஸ்வர்ணா - என்ன கனவு?? வந்து சீக்கிரம் சொல்லுங்க.. கொதிக்கற எண்ணையில போட்டு பொறிக்கர மாதிரி எதுவும் வரலையே?? :)) ஒரே பயமா இருக்கு எனக்கு இப்போ.. :)) அப்புறம், பரண் மேல வேலைக்காத பழைய சாமானெல்லாம் போட்டு வச்சிருப்பீங்க தான.. அதுக்கு பக்கத்துல தான் எங்களையெல்லாம் வச்சிருக்கீங்களா?? :))

அதிரா.. எந்த சமையல் சாமானும் அலுவல் முடிஞ்சா ஒன்னு வயித்துக்குள்ளார போகும் இல்லாட்டி குப்பைக்கு போகும்.. உங்களை மென்னு முழுங்க வேண்டாமே ன்னு நினைச்சேன்.. (ஜீரணம் ஆகாதல்லோ :)) ).. சரி, உங்க ஆசைய ஏன் கெடுப்பானேன்.. இன்னைக்கு ஊறுகாய் தான் தொட்டுக்க சரியா?? :))
நீங்க தலைமறைவா இருக்கச் சொன்னா தான் நான் வெளியவே வருவது.. :))
அது சரி, "அதைப்" பற்றி மட்டும் மேற்க்கொண்டு பேசாமல் அடக்கி வாசிப்பது போல இருக்கே?? :))
நீங்கள் கிழிக்க சொன்னதை பொறுப்பாக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.. தத்துவ முத்துக்களை அவ்வப்போது உதிர்த்து விட்டு போறீங்க !!
உங்க சோகமும் புரிந்தது.. ஆனா நீங்க அழறதை பாத்து அழற ஆள் நாங்க கிடையாது.. இந்த இடத்துல மட்டும் நாங்க சிரித்து வைப்போம்.. :))) (பிகு - பகிடிக்குத் தான் சொன்னேன்)

பிரபா - வந்துட்டோம்.. உங்களோட விளையாட நாங்களும்.. என்ன விளையாட்டு? பரண் மேல இருந்து குதிக்கற விளையாட்டெல்லாம் வேண்டாமே?? :))

லக்ஷ்மீ - ஆமா, நானும் ஒரு வாரந்தான் வராம விட்டேன்.. பாத்தா ரெண்டு இழை ஓடிடுச்சு.. நான் கடைசியா பாத்தப்போ அந்த கூகிள் மேப் வேலை பாத்துகிட்டு இருந்தது.. அதனால, உங்களுக்கு கூகுள் வெப் வேலை தரோம்.. பொறுப்பா பண்ணுவீங்க தானே?? நாங்கள் நலமே.. உங்க நலமெப்படி??

அப்பப்போ வந்து போயிட்டு இருப்பதால என்னையெல்லாம் பரண் லிஸ்ட் ல சேர்க்காத வாணி - உங்க கூட டூ எல்லாம் கிடையாது.. இந்தாங்கோ ஏணி.. கெட்டியாத் தான் பிடிச்சிட்டு இருக்கேன்.. தைரியமா நம்பி இறங்குங்கோ.. :)) பயந்திராதீங்கோ.. :))
நல்ல பழக்கம் - குழந்தைகளை லைப்ரரி கூட்டிப் போயி வாசிக்க கற்று கொடுப்பது.. வாழ்த்துக்கள்..

கவிசிவா - எப்படி இருக்கீங்க? உங்களை தேடிட்டு இருந்தோம்.. நலமா??

ஹாய் அஷாரா.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்