பட்டிமன்றம் 7 - சங்கப்பலகை!!!!

எல்லோருக்கும் வணக்கம் வந்தனம்...

தலைப்பு தேடவே ஒரு வாரம் ஆகுது அதனால் 1.5 வாரம் இதனை வைத்து வாதம் செய்யனும்ன்னு எல்லாரையும் கேட்டுக்கிறேன்....
தலைப்பு மாலி அவர்களின் தலைப்பு...
"நம் நாட்டில் மக்களுக்கு உடல் நலம் குறித்த விழிப்புணர்வு இருக்கா இல்லயா"

இதையே அவங்க சொன்ன பொருள் வைத்து நாம எப்படி எடுத்துக்கணும்ன்னா...
அம்மி ஆட்டாங்கல்லு... வீடு பெருக்கி துவைக்கும் போதே என்ன வலின்னாலும் எல்லாரும் நல்ல ஆரோக்கியமா இருக்கறாங்களா....
இல்லை... நாங்க ப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் வேக்குவம் எல்லாம் வச்சிகிட்டாலும் ஆரோக்கியமா இருக்கறோம்ன்னு ஒரு சாராரும் நினைக்கறாங்க.. இவிங்க ஏன் இப்படி நினைகிறங்கன்னா எங்களுக்கு எல்லாம் உடல் நலம் பத்தி ஒரு விழிப்புணர்வு இருக்கு அதனால்...அப்ப எங்களுக்கெல்லாம் என்ன ..... இல்லையான்னு ஒரு சாராரும் கேட்டாங்க.. நான் சொல்லிபுட்டேன்... இங்க அருசுவை மக்கள் அதனை முடிவு செய்வாங்கன்னு....

நானும் பல தலைமுறை மக்களிடம் பேசியதும் ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.. உங்க கைல தான் இருக்கு என் முடிவு....

எல்லாரும் நல்லாத்தேன் குழம்பிபோயிருக்காங்கைய்யா...

விதிமுறை எல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன்.. ஒன்னுமில்லை.. கடைசி தீர்ப்பு எழுதும்போது கூட உங்க வாதத்தை சேர்க்கலாம்...
இந்த தலைப்பை தேர்ந்து எடுக்க காரணம் ஒன்னும் இருக்கு... தலைப்புக்கும் அருசுவைக்கும் ஒரு பந்தம் இருக்கு....

எல்லாருக்கும் பிஸ்கோத்து இப்பதைக்கு நல்ல மசாலா டீயும் ரெடி.. ஜில்லுன்னு வேணுமின்னா ஜூசுக்கு ஆர்டர் கொடுங்க... 2 வாதம் ( ஒரு ஆளுக்கு ) செய்து முடிக்கும் போது ஜூஸ் வரும் :))

சூடாத்தேன் வாதத்தை ஆரம்பிப்போம்ன்னு இருக்கவங்க உடனே இந்த சங்கபலகைக்கு(டீக்கடை) வந்துடுங்கோ....

பட்டிமன்றம் - 7 சங்கப்பலகை...
எல்லாரும் வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்... உங்களுடைய பொன்னான வாதங்களை கேட்க ஆவலாக இருக்கிறோம்... நோன்பெல்லாம் நல்லவிதமாக முடிந்து இருக்கும் ஆகையால் தோழிகளே/தோழர்களே இந்த இழை பட்டிமன்றம் முடியும் வரை டாப் டென்னில் வைப்பது உங்க கைல தான் இருக்கு... காத்திருக்கிறேன்... சங்கப்பலகையில்....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா - வாழ்த்துக்கள்.. தலைப்பு புரிந்தது, ஆனா உங்க விளக்கம் புரியலை :))

வாதாடறவங்க எப்படி வாதாடனும் - எல்லாரையும் மனசுல வச்சுத் தானே - அதாவது குப்பன் சுப்பன் மாரியம்மா இவங்க எல்லாரையும் சேர்த்து தானே.. இல்லை படித்து வேலைக்கு போகும் மக்களை வைத்தா?

அப்புறம் விழிப்புணர்வு இருக்கா இல்லையான்னா என்ன அளவுகோல்? கொஞ்சமா தெரிஞ்சிருந்தாலும் இருக்குன்னு வைக்கவா? அப்படியில்லாம, குறைவா இல்லை அதிகமான்னு வாதாடலாமா?

ரொம்ப முக்கியமா - இதுல நம்ம நாடுன்னு எதைச் சொல்லறீங்க?? :))

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வாங்க சந்தனா!!! இந்தியர்கள் என்று எடுக்கணும்... இப்பல்லாம் எல்லாருக்கும் கொஞ்சம் விவரம் இருக்கு அதனால் குப்ஸ்.. சுப்ஸ்... மாரி.. எல்லாரும்..
கொஞ்சம் தெரிஞ்சாலும் அதனை கொண்டு அவர்கள் தங்கள் வாழ்வினை/உடல்நலனில் மேலும் அக்கறை எடுக்கிறார்களா என்பது தான் அளவுகோல்...இதுல பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றி பேசவேண்டாம்...

வாழ்த்துக்கு நன்றி!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா தங்களின் விளக்கத்துக்கு மிக்க நன்றி.. நல்ல தலைப்பு.. மாலிக்கு நன்றி.. அவங்க இப்ப ஆபர் என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்கன்னு நினைக்கறேன் :)) பேசப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நான் அப்புறமா வாறன்.. (எப்புறமா ன்னெல்லாம் கேட்கப்படாது.. வர வேண்டிய நேரத்துல வரேன்)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அப்பாடா ஒருவழியா இந்த பட்டிமன்றத்தில் வாதாட வாய்ப்பு கிடைச்சிடுச்சு :)

நடுவருக்கும் தோழிகளுக்கும் வணக்கம். நம்ம மக்களுக்கு எல்லாம் தெரியும். ஆனா வர்றப்போ பார்த்துக்கலாம்னு இருக்கற மனோபாவம் அதிகம். அதனாலேயே உடல்நலனை சரியா கவனிக்காம சிக்கல்ல மாட்டிகறாங்க.

சின்ன தலைவலி பிரச்சினைல இருந்து ஆரம்பிப்போம். மூன்று வகையான ஆட்கள் உண்டு. முதல் வகை ஆட்கள் முதலில் தைலம் தேய்ச்சு பார்ப்பாங்க சரியாகலைன்னா அடுத்த நாள் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துப்பாங்க. இது சரியான அணுகுமுறை ஆனால் இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு.

இரண்டாவது வகை ஆட்கள் தலைவலி வந்துட்டாலே கூகுளில் தேடி என்ன வியாதியா இருக்கும்னு தேடி அதா இருக்குமோ இதா இருக்குமோன்னு குழம்பி ஸ்பெஷலிஸ்டுகளைத் தேடி ஓடுவாங்க. இவர்கள் கொஞ்சம் கவனிக்கப் பட வேண்டிய ஆட்கள். இவர்களின் சதவீதமும் குறைவு.

அடுத்து வர்றாரு நம்ம ஆளு. எல்லாம் தெரிஞ்சவரு! தலைவலியா இருக்கா ஒரு பாரசிட்டமால் எடுத்துட்டா சரியாயிடும்னு எடுத்த எடுப்பிலேயே மாத்திரையை போட்டுக் கொள்வார். இவர் தன் தலைவலிக்கு மட்டுமல்ல ஊரிலுள்ள எல்லார் தலைவலிக்கும் மருந்து சொல்வார்! சாதாரண தலைவலின்னா பரவாயில்லை காய்ச்சல் இருக்கா அமாக்சிலின் எடுத்துக்கோ வாந்தியா ஸ்டெமட்டில் போட்டுக்கோ பேதியா லோப்ராமைட் சாப்பிடு கால்வலியா ஐபுப்ரூஃபன் சாப்பிடுன்னு தானே மருத்துவரா மாறி இல்லாத வியாதியையும் இழுத்து வச்சுக்குவார். இப்படிப் பட்டவர்கள்தான் நாட்டில் அதிகம் பேர். இப்படிபட்ட ஒருவரைப் பற்றி பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஒரு காட்சி இருக்கும். அதைப்பார்த்த பிறகு கொஞ்சம் பேராவது மாறியிருந்தால் சந்தோஷம்.

இன்று நாட்டில் படித்தவர்கள் அதிகம். மீடியாக்களின் உதவியால் நோய்கள் பற்றியும் அது எப்படி வருகிறது எப்படி தடுக்கலாம் என்பதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு வந்திருக்கிறது. உண்மைதான் ஆனால் இந்த விழிப்புணர்வு அவர்களை தங்கள் உடல் நிலையை கவனித்துக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுத்தியிருக்கிறதா என்றால் கேள்விக் குறிதான்.

பெண்கள் பற்றியே பேசுவோம். நம் நாட்டில் பெண்களை தாக்கும் புற்றுநோயில் முக்கியமானது கர்ப்பப்பை வாய் புற்றுநோய்(cervical cancer). இதை பேப் ஸ்மியர் எனப்படும் பரிசோதனையை 30 வயதுக்கு மேல் செய்து கொண்டால் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து எளிதில் குணப்படுத்த முடியும். நம் நாட்டு பெண்களில் படித்த முக்கால்வாசி பேருக்கும் தெரியும். ஆனால் இச்சோதனையை முறையாக செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. படிக்காத கிராமத்து பெண்களின் நிலை? இதைப்பற்றிய அடிப்படை ஞானம் கூட கிடையாது. பின் எங்கே உடல்நலனைப் பேணுவது?
குடும்பத்தில் புற்றுநோய் பாரம்பரியம் இருந்தால் வருடாவருடம் மெமொகிராம் மற்றும் பேப்ஸ்மியர் செய்து கொள்ளவேண்டும் என எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி தெரிந்தாலும் எத்தனைபேர் அதை சரியாக செய்கிறார்கள்? செய்யமாட்டாங்க ஏன்னா அந்த வியாதி நமக்கு இருக்குன்னு சொல்லிடுவாங்களோ அப்படீங்கற பயம். நோய் முற்றி தாங்க முடியலங்கற போதுதான் சிகிச்சைக்கே போறாங்க.

அட எல்லாத்தையும் விடுங்க. எய்ட்ஸ் விழிப்புணர்வு நம் மக்களுக்கு கொடுக்க ஆரம்பித்து எத்தனை வருடங்களாகிறது? விழிப்புணர்வு வந்திடுச்சுன்னா நோயால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கணுமே மாறாக அதிகரித்திருக்கிறதே! இதை என்னன்னு சொல்றது? எய்ட்ஸ்னா என்ன, எப்படி பரவுதுன்னு எல்லாருக்கும் தெரியும் ஆனாலும் நமக்கு இதெல்லாம் வராதுன்னு குருட்டு தைரியம்.

உடல் நலனில் அக்கறை கொண்டவர்கள் நம் மக்கள் அப்படீன்னா துரித உணவு(ஃபாஸ்ட் ஃபுட்) கலாச்சாரம் நாட்டில் பெருகியிருக்காதே!

40 வயதுக்கு மேல் முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் மிகக் குறைவு. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் மிக அதிகம். காரணம் தவறான உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சியின்மை. விழிப்புணர்வு சரியாக இருந்திருந்தால் எண்ணிக்கை குறைந்திருக்குமே! நம்ப ஆட்கள் வாக்கிங்-ம் ஜாகிங் ம் செய்ய ஆரம்பிப்பதே சர்க்கரை வியாதி இருக்குன்னு தெரிஞ்ச பின்னாடிதானே! அதிலும் சில பேர் வாக்கிங் போவாங்க. தினம் ரெண்டுமணி நேரம் நடக்கறேன் டாக்டர் ஆனா சர்க்கரை அளவும் குறையவே மாட்டேங்குதுன்னு குறை பட்டுப்பார். டாக்டருக்கு சின்ன சந்தேகம் தொடர்ந்து பேசினால் இவர் நடக்கும் அழகு புரிந்தது. அன்ன நடை பயின்று இரண்டு மணிநேரம் நடந்திருக்கிறார். இரண்டு எட்டு வைத்தால் எதிர்த்த வீட்டு ஏகாம்பரத்திடம் 5 நிமிடம் பேச்சு அடுத்த இரண்டு எட்டில் அடுத்த வீட்டு அழகேசனிடம் கதை 3நிமிடம் அடுத்த எட்டில் பக்கத்து வீட்டு பரமேஸ்வரனிடம் 5நிமிடம் அளந்து விட்டு இவர் இப்படியே இரண்டு மணிநேரம் நடந்திருப்பார். வாகிங் செய்வது கூட எப்படி என்று தெரியாமல்தான் நிறைய பேர் நானும் வாக்கிங் போகிறேன் என்று போய்க் கொண்டிருக்கிரார்கள்.
குறிப்பு: நடுவர் அவர்களே சத்தியமா நான் உங்களை சொல்லவில்லை :) எதிரணியினர் இப்படி உங்களிடம் போட்டு கொடுத்தால் நம்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

திருமணமான தம்பதிகள் குழந்தைப் பேறை தள்ளிப் போட நினைத்தால் எத்தனை பேர் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை கேட்கிறார்கள்? தானாக எதையாவது செய்து கொண்டு மீறி கர்ப்பம் தரிக்கும் போது சரி என்று குழந்தையை பெற்றுக் கொண்டால் சந்தோஷம். வேண்டாம் என்று நினைத்தால் அதையாவது மருத்துவரிடம் செய்கிறார்களா? தானே மருந்து சாப்பிட்டு சரியாக கலையாமல் காலம் கடந்து மருத்துவரிடம் சென்றும் பயனில்லாமல் மூளைக்குறைபாட்டுடன் குழந்தை பெற்று அவர்களும் கஷ்டப்பட்டு குழந்தைகளையும் கஷ்டப்பட வைக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் மூன்றுபேர் இப்படி செய்து இன்றும் கஷ்டப்படுகிறார்கள். இத்தனைக்கும் படித்தவர்கள். விழிப்புணர்வு எங்கே போனது?

குழந்தை வேண்டும் என்று தயாராகும் போது எத்தனை தம்பதிகள் மருத்துவரின் ஆலோசனை பெறுகிறார்கள்? கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் என்று வரும்போதுதான் மருத்துவரையே தேடுகிறார்கள். கர்ப்பம் தரிக்கும் முன்னேயே உடலையும் மனதையும் தயார் படுத்துதல் என்பது மிக மிக அவசியம்.

மருத்துவத் துறை எவ்வளவோ வளர்ந்து விட்டது. இன்றும் நோய் அண்டாமல் இருக்க குழந்தைகளுக்கு சூடு போடும் பழக்கம் உள்ள கிராமங்களும் நம் நாட்டில் இருக்கின்றன. இவர்களுக்கு எப்படி விழிப்புணர்வை ஊட்டுவது? விழிப்புணர்வு இருக்குன்னு சொல்றவங்க இவங்களுக்கும் அதை கொஞ்சம் கொடுங்கப்பா!

வாய்ப்புக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் இலா'கு வாழ்த்துக்கள். :) நல்ல தலைப்பு, நல்ல நேரத்தில் வந்திருக்கு..... அவசியம் நான் எப்பவும் போல் வந்துடுவேன்.

நம்ம கவிசிவா கட்சி தான்.... "விழிப்புணர்வு இல்லை.... இல்லவே இல்லை"னு சொல்ல போறேன்.... இல்லை வாதாட போறேன். பிறகு வருகிறேன் வாதத்தோடு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முத்துக்களோ கண்கள்...
தித்திப்பதோ கன்னம்....
சந்தித்த வேளையில்....
சிந்திக்கவே இல்லை....
தந்துவிட்டேன் என்னை..... விழிப்புணர்வே இல்லை என்ற கட்சிக்கே......

சந்தனா... சட்டுப் புட்டென முடிவெடுங்கோ... அதிகம் யோசித்தால் வெல்லும் கட்சியில சேர்ந்திடுவீங்க...:):).

நடுவர் அவர்களே.... ஆரம்பம் ஒண்ணுமே புரியல்லே.... எப்படி கவிசிவாவுக்கு புரிஞ்சுதுன்னு நினைச்சேன்... நடுவரே ..சீ..... உங்க பதிவைப் படிச்சே எனக்கு உங்க பாஷையா வருது:)...

இப்போ புரிந்துகொண்டேன்.... எதுக்கும் இந்தாங்கோ சொக்கலேட் மில்க்... குடிச்சிட்டுத் தென்பா இருங்கோ.... எப்படிப் பேசலாம் என யோசித்துவிட்டு வருகிறேன்....

எனக்கென்னமோ சிரிப்பை அடக்க முடியவில்லை.... வனிதா நான் ஏன் சிரிக்கிறேன் எனத் தெரியுதோ?:)... இம்முறையும்...:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹா ஹா அதிரா எதற்கு சிரிச்சீங்கன்னு எனக்கு புரியுது. இந்த தடவையும் வனிதா அதிரா நான் எல்லாம் ஒரே கட்சி நல்ல ராசியான கூட்டணி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க கவிசிவா... வந்ததும் வராததுமா எதிரணியில யார் இருக்காங்க இல்லை என்று பார்க்காமல் உங்க பாயிண்ட் பாயிண்டா அடிக்கிறீங்களே...
//உடல் நலனில் அக்கறை கொண்டவர்கள் நம் மக்கள் அப்படீன்னா துரித உணவு(ஃபாஸ்ட் ஃபுட்) கலாச்சாரம் நாட்டில் பெருகியிருக்காதே!
இப்படி கேள்வி கேக்கறாங்க கவிசிவா.. யார் பதில் சொல்ல போறீங்க???

//இத்தனைக்கும் படித்தவர்கள். விழிப்புணர்வு எங்கே போனது?
ஆஹா அப்ப படிச்சிட்டா வேலைக்கு போயிட்டா விழிப்புணர்வு வராதா...

யாரவது பதில் சொல்லுங்க... இப்படி சூடா நம்ம சங்கபலகையில் வந்து சேர்ந்து இருக்கும் கவிக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண சொல்லலாம்... ஒரு ஜூஸ் ( பெசல் ஜூஸ்)

வாங்க வனிதா! வாழ்துக்கு நன்றி!!! சீக்கிரம் உங்க வாததோட வாங்க.. கத்திருக்கிறோம்...

வாங்க அதிரா!!! வரும் போதே பாட்டு பலே பலே.. நானும் உங்க பாடல் வரியில் கொஞ்சம் தலைப்புக்கு எடுத்துகிட்டேன்... சொக்கலேட் மில்க்.... ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு.. காலையில் உங்க பதிவைப்பார்ததும் வந்தது கொஞ்சம் தெம்பு இப்ப பாருங்க...

விழிப்புணர்வே இல்லைன்னு 3 பேர் சேர்ந்திட்டாங்க... இருக்குன்னு யாருமே பேசவரலை இன்னும்... சிலர் எந்த பக்கம்ன்னு முடிவு செய்யாம இருப்பாங்க.. அவங்களுக்கு இது தான் சரியான நேரம்....

முந்தைய பட்டிமன்றத்தில கலந்துகிட்டவங்க இப்ப சமைத்து அசத்தியதும் இங்க வந்துடுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்...

முதல் ரவுண்ட் ரோல்-கால்: ஸ்வர்ணா... மிசஸ் ஹுசைன் .. யோகராணி... சந்தனா.. சந்தோ.... தேன்மொழி.... சீதாலஷ்மி அம்மா....ஹேமா ...ஆசியா அக்கா...இஷானி.....ரேணுகா...வானதி அக்கா... மாலி ( தலைப்பே உங்களது)....அனாமிகா( லக்ஷ்மிஷங்கர்)...விஜி....தனிஷா..... தளிகா.. மர்லி..... உத்ரா....சுபா.....சுஸ்ரீ......

அடுத்த ரவுண்ட் அடுத்த பதிவில்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இப்ப விழிப்புணர்வு அதிகம்,எங்கு பார்த்தாலும் யோகா,வாக்கிங்,ஜிம்,டயட்,ஆரோக்கிய உணவு இன்னும் எல்லா விஷயத்திலும் எல்லாரும் உஷாராக இருக்காங்க.பத்திரிக்கை,சினிமா,டி.வி,கணினி என்று எதை தொட்டாலும் நம்ம விழிப்புணர்வை தூண்டும் படி தான் விஷ்யங்கள் வெளிச்சம் போட்டு காட்டப்படும் போது எப்படி விழிப்புணர்வு வராமல் போகும்.நாற்பது வயதானால் கம்பிளீட் செக் அப் இது மாதிரி, வரும் முன் காப்போம் ரொம்ப பரவி இருக்கு.சின்னதாக அப்ப அப்ப முடிந்தால் வந்து பதிவு போடுவேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்