புறை ஏறுகிறது

என் 20 நாளான மகனுக்கு பாலூட்டுகையில் புறை ஏறுகிறது..பெரும்பாலான சமயங்களில் இப்படி தான்.பயமா இருக்கு சில சமயம்..இரவில் இப்படி ஆனால் மூச்சு திணறி விடுகிறான்..என்ன செய்வது..என்ன காரணம்?

தளிகா, நலமா? வாழ்த்துக்கள். பால் கொடுக்கும் போது இடையில் பால் கொடுப்பதை நிப்பாட்டி, தோழில் போட்டு, முதுகை மெதுவாக தடவி விடவும்.
பால் கீழே போக வேண்டும். அதோடு இரவில் பால் கொடுக்கவே அலுப்பாக இருக்கும். அப்போது புரை ஏறும் சந்தர்ப்பங்கள் அதிகம். பால் கொடுத்து முடிந்ததும் நன்றாக முதுகில் தட்டி படுக்க வைக்கவும்.
(He must burp)
வாணி

பால் இறங்கும்போது(let down) மடமடவென்று வருவதால் குழந்தையால் வேகமாக குடிக்க முடியாததால் புறை ஏறலாம்.அந்த சமயத்தில் வேகமாக வரும்பொத(when u start feeling like letting down) கொஞ்சம் பாலை வெளியெற்றிவிட்டு பின் குழந்தைக்கு குடுத்து பாருங்கள்.சீக்கிரமே சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பால் இறங்கும்போது(let down) மடமடவென்று வருவதால் குழந்தையால் வேகமாக குடிக்க முடியாததால் புறை ஏறலாம்.அந்த சமயத்தில் வேகமாக வரும்பொத(when u start feeling like letting down) கொஞ்சம் பாலை வெளியெற்றிவிட்டு பின் குழந்தைக்கு குடுத்து பாருங்கள்.சீக்கிரமே சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஹாய் வாணி நலமா?
நீங்கள் சொன்னபடியே செய்கிறேன் இன்றும் புறைஏறும் என்றாலும் முன்பிருந்த அளவுக்கு இல்லை..நீங்க சொன்னது சரி தான் இரவில் தான் ரொம்ப பயம்.உடனடி பதில் தந்தது ரொம்ப சந்தோஷம் வாணி

ஹாய் அமிழ்தினி
நல்ல தமிழ்பெயர் ஆமாம் நீங்கள் சொன்னது சரி தான்.முதல் சில நிமிடங்கள் தான் அப்படி புறைஏறும்..பெரியவர்களுக்கு தலையில் லேசாக தட்டுவோம் குழந்தைகளுக்கு உச்சியில் ஊதுவார்களாம்..அப்படி செய்யலாமா சரியா?

ennaku etheil anubavam eillai endalum enka urel uilla varkal kulanthaiku purai earenal 2du kathaium kelnoke eluparkal aillathu nathen nadu pakutheel aluthe thaeparkal pa ethai sethu parukal

benazirjaila

தாராளமா செய்யலாம்.எங்கள் அம்மா அப்படிதான் தலையில் ஊதுவார்கள்..உச்சியில் ஊதி (லேசாகத்தான்,2,3 முறை) பின் தொளில் போட்டு தட்டலாம்..படுத்துக்கொண்டே feed பண்ணுவதை முதல் சில மாதங்கள் தவிர்க்கலாம் அதனாலும் புறை ஏறும்.

தளிகா,

பால் கொடுக்கும்போது மகன் தலையைச் சற்று உயர்த்தி இருக்கும்படி சாய்வாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

பால் கொடுக்கும்போது, பால் வேகமாக இறங்குவதால், காம்பை (nipple) விரலால் இறுக்கிப் பிடித்துக் கொள்ளச் சொல்வார்கள் பெரியவர்கள். செய்து பாருங்கள்.

துணைக்கு யார் இருக்கிறார்கள்?

மேலும் சில பதிவுகள்