இவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்...??? சொல்லுங்களேன்...

அனைவருக்கும் வணக்கம்,

தோழிகள்,தோழர்கள்,சகோதரர்கள்,சகோதரிகளே!!!
நாம் தினமும் எத்தனையோ மனிதர்களை பார்க்கிறோம்,பேசறோம்,பழகறோம். மாடிவீட்டு மல்லிகா முதல் கடை வீதி பெருக்கி சுத்தம் செய்யும் சுப்பன் வரை அனைவரையும் பார்த்திருப்பதுண்டு.

அவரவர் தேவைகளுக்காக,பொருள் ஈட்ட அவர்களின் தொழில் அமையும்.இப்படி வரிசை படுத்தினால் நமது சமுதாயத்தில் பலர் உண்டு.
ஆனால் நான் குறிப்பிட போகிறவர் படும் கஷ்டமும் நாம் அனைவரும்(பெரும் பாலானோர்) நேரில் பார்த்து இருக்கிறோம்.

" ஹாஸ்டல் வார்டன் " - ஹாஸ்டலில் வார்டனாக இருப்பது, அதுவும் students sக்கு வார்டனாக இருந்தால் அவங்க நிலையை யோசித்து பாருங்க!!!!!!!!!! நாம் அந்த tudent ஆக இருக்கும் பொழுது இதெல்லாம் யோசிச்சே இருக்க மாட்டோம். ஆனால் இப்போ parents ஆகி இருக்கும் பொழுது நம்ம parents பட்ட கஷ்டம் தெரிவது போல...
நாமே வேளைக்கு(ஆசிரியர்) செல்லும் பொழுது ஹாஸ்டலில் தங்கவும் அந்த வார்டன் பொறுப்பும் கூட கிடைத்தால் எப்படியிருக்கும்...............???

சும்மா சொல்லக்கூடாது, இந்த பசங்க கிட்டே வார்டன் எல்லாம் மாட்டிகிட்டு படும் பாடு இருக்கே அப்பபப்பா..............

உங்களுக்கும கண்டிப்பாக இப்படி பல அனுபவம் இருக்கலாம். அதனால கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, நீங்க வார்டனை என்னவெல்லாம் பாடு படுத்துநீங்க? அவங்க உங்களை என்ன செய்தாங்கன்னு வந்து சொல்லுங்க.............

கண்டிப்பாக interesting ஆக இருக்கும் என நினைக்கிறேன்.

அனைவரும் வருக...வருக...வருக... என்று அழைக்கிறேன்.

Hi all, இந்த தலைப்பு உருவாக காரணம் வேற எதுவுமில்லை. நேற்று "நினைத்தாலே இனிக்கும்" புது மூவி பார்த்தேன், அதில் வார்டனாக வரும் நடிகர் இளவரசு படும் பாடு இருக்கே!!! இது போல் எத்தனையோ students,வார்டன் மூவி எல்லாம் வந்திருக்கு...

ஆனால் நாம் student ஆக இருக்கும் பொழுது இப்படி எல்லாம் நினைத்து பார்த்திருக்க மாட்டோம் அவங்க நிலையைப்பற்றி... இப்போ ச்சே என்னடாயிது இந்த பசங்க இப்படி கொடுமை படுத்தராங்கலோன்னு கூட தோணுது... அதனால நீங்க அனைவரும் உங்க அனுபவம் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கண்டிப்பாக interesting ஆக இருக்கும் என நினைக்கிறேன்.

அனைவரும் வருக...வருக...வருக... என்று அழைக்கிறேன்.

எங்க வார்டனை கண்டால் சுத்தமாக பிடிக்காது எங்களுக்கு.. அவருக்கு அதிகார/அரசியல் பலம் எல்லாம் இருந்ததாக சொல்லியிருக்காங்க சீனியர்ஸ்.. அதனால் ரொம்பவெல்லாம் படுத்தவில்லை.. ஆனால் பையன்கள் தங்களுடைய வார்டன்களை ரொம்பவே படுத்தினதாக கேள்விப்பட்டோம்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

யாருக்கும் அனுபவமில்லையா...???

இந்த இழை யார் கண்களிலும் படவில்லையா? இல்லை யாருக்கும் அப்படி எதுவும் சுவாரசிய அனுபவமில்லயா??? கொஞ்சம் சொல்லுங்களேன்... நாங்களும் தெரிஞ்சுகறோம்.

உமா, நலமா? எனக்கு இதில் அனுபவம் இல்லை. நான் எப்போதும் வீட்டுப் பறவை. ஹாஸ்டல் அனுபவம் ஒன்றும் இல்லை.

ஆனால், என் தங்கை மருத்துவக் கல்லூரியில் படித்த போது நடந்த சம்பவங்கள் நிறைய சொல்வார். எனக்கு அவரின் வார்டன் கதையை விட குரங்கின் கதையே நினைவில் இருக்கு. பூட்டி இருக்கும் கதவை லாவகமாக திறப்பது, ஜன்னல் வழியாக கைவிட்டு அகப்படும் நொறுக்கு தீனி, மேக்கப் சாமான்களை எடுத்துக் கொண்டு ஓடுவது. எடுத்த மேக்கப் பொருட்களை வீணடிக்காமல் பவுடர், லிப்ஸ்டிக் போட்டு கொண்டு ஒரு மார்க்கமாக அலையும் குரங்குகளின் சேட்டைகளையே ஆர்வமாக கேட்பேன்(இந்த குரங்குகளின் முன்பு அந்த வார்டன் எம்மாத்திரம்).
வாணி

வாணி, நலம். நீங்களும் குழந்தைகளும் நலமென நினைக்கிறேன்.

நிஜம் தான், எனக்கு கூட நிறைய அனுபவமிருக்கு ஆனா முன்ன மாதிரி எனக்கு அடிக்கடி வர முடியல அதனால் நானும் எல்லாத்தையும் வந்து சொல்றேன்.

So, bye now.

மேலும் சில பதிவுகள்