வரலாமா?

ஹைய் மகேஸ்வரி,
நலமா? நான் நலம்,என்னை பற்றி விசாரித்துவிட்டு பின் உங்களை
பற்றி பதில் இல்லை
ஹைய் சுபா,
நலமா? மன்னிக்கவும்,என்னால் 4 நாட்களாக பதில் அனுப்பமுடியல.
எனக்கு உங்களை தெரியாது,பழகி தெரிந்து கொள்கிறேன். எனக்கு நட்பு ரொம்ப இஷ்டம்.
நான் இப்போ கத்தாரில் இருப்பதால் இங்கு யாரும் தமிழ் தோழிகள் இல்லை,பிலிப்பைனிஸ்
தான்.அவர்கள் பழக்கம்.
அதான் அறுசுவை ரொம்ப பிடிக்கும்.உங்களை போல் வாணி,பிரபா,அதிரா, மற்றும் எல்லாரிடமும் பழக ஆசை.
வரலாமா?ஆனால் நேரம் கிடைக்கவில்லை.
கிடைக்குபோதெல்லாம் வருவேன்.நன்றி

அன்புடன்,
சுபத்ரா.

ஹாய் சுபத்ரா வாங்கப்பா பழகலாம்.... நான் உங்க கிட்ட இதுதான் முதல் முறை பேசுரேன்.....

என் பெயரை குறிப்பிட்டது நன்றி.... நான் உங்க கூட பேசினது இல்லை எப்படி என் பெயரை போட்டிங்க?

சரி பிரி டைம்ல வாங்க பழகலாம்..... நட்பையும் தெடரலாம்....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் சுபத்திரா! என பெயர் யோகராணி, வாங்கோ எல்லோருடனும் பழகலாம்
அத்துடன் "பட்டிமன்றம்" "சமைத்து அசத்தலாம்" பகுதிகளிலும் பங்கு கொண்டு
உங்கள் ஆக்கங்களையும், திறமைகளையும் வெளிப்படுத்துவதன் முலம்
மேலும் எல்லோருடனும் நன்றாக பழகலாம், தனிய இருக்கும் உங்களுக்கு
பொழுது போனமாதிரியும் இருக்கும். அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹைய் பிரபா ,
நன்றி உங்கள் பதிலுக்கும்,நட்பிற்கும்.
பிரபா,
உங்களை தெரியாது,எனக்கு யாரையும் அறுசுவையில் தெரியாது.
மற்ற தோழிகளிகளிடம் பேசுவதை பார்த்து தான் தெரியும்.
வாணி , சுபா ,ஆசிய உமர், மகேஸ்வரியிடம் பேசி இருக்கேன்.
சுபாவும் இப்படி தான் கேட்டார்கள்.
மற்ற தோழிகள் எல்லாம் முதலில் இருந்தே பழக்கம் உண்டா.
நான் தான் தெரியாமலே தொந்தரவு செய்கிறேனா?

ஹைய் யோகராணி,
உங்களுக்கும் நன்றி, நிச்சயமாக பட்டிமன்றம் மற்றும் அரட்டையில் கலந்து கொள்கிறேன்.
அன்புடன்,
சுபத்ரா.

with love

subathra nalama?

ஹாய் கரீனா,
நான் நலம், நீங்க நலமா?
நீங்க கத்தாரில் எங்க இருக்கீங்க?
நன்றி,
அன்புடன்,
சுபத்ரா.

with love

ஹாய் சுபத்ரா எப்படி இருகிங்க, கத்தார் வெயில் எபப்டி இருக்கு, உங்கள பத்தி சொல்லுங்க, ஹரீனா எப்படி இருகிங்க. என்ன யாருனி தெரியுதா. கத்தார் ஹரீனா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனியா,
நீங்க எப்படி இருக்கீங்க?என்னை பற்றி பழகி புரிந்துகொங்கோ.
சோனியா தமிழ்நாட்டில் எங்க?
நன்றிப்பா,நட்பை தொடரவும்.
அன்புடன்,
சுபத்ரா.

with love

ஹாய் சுபத்ரா,

எனக்கு இங்க வந்து தான் எல்லாரும் பழக்கம். எனக்கு சுபத்ரா என்ற பெயரில் ஒரு தோழி இருந்தாங்க. அதனால தான் கேட்டேன். நீங்க யாரையும் குழப்பல.

நீங்க என்ன பன்றீங்க? உங்க சொந்த ஊர் எது?

நீங்களும் குறிப்பு தெரிந்தா சொல்லுங்க. கவிதை, பட்டிமன்றம், சமைத்து அசத்தலாம், அரட்டை அனைத்திலும் கலந்துகிட்டா உங்களுக்கு எல்லாரோட பழக்கமும் கிடைச்சிடும்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் என் சொந்த ஊர் நாகர்கோவில். உங்க சொந்த ஊர் என்ன, அப்புரம் வாங்க பழகலாம். என்ன பழக ரெடியா, வாங்க

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சுபா,
நலமா?குழந்தைகள் நலமா?
என்னுடைய சொந்த ஊர் மதுரை.உங்களுக்கு?நான் கத்தாரில் ஒரு வாட்ச் கம்பெனியில் பர்ச்சஸ் டிபார்ட்மன்ட்டில் வேலை செய்கிறேன்.ஒரு பெண் குழந்தை, பெயர் செனோரா- 21மாதம்.
என்னையும் வீட்டில் சுபா என்று தான் கூப்பிடுவார்கள்.
நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.
ஹாய் சோனியா,
நலமா?நான் நாகர்கோவில் ஒரு டைம் கல்யாணத்திற்கு வந்தேன்.
பழக ரெடி.நீங்க என்ன பண்றீங்க.

என்றும் அன்புடன்,
சுபத்ரா.

with love

மேலும் சில பதிவுகள்