ம.பொ.ர 06

~~~அருட் காப்பு~~~

அருட்பேராற்றலின் கருணையினால்
இரவும், பகலும்
எல்லா நேரத்திலும்
எல்லா இடங்களிலும்
எல்லா தொழில்களிலும்
உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்துவதாகவும் அமையுமாக.
*****************

மறைபொருள் பகுதி 1,2,3,4,5 தொடர்புகள் வரிசையாக கொடுக்கபட்டு உள்ளது.
http://www.arusuvai.com/tamil/
forum/no/12198
forum/no/12522
forum/no/12826
forum/no/13122

மறைபொருள் பகுதி 1,2,3,4,5,6 விளக்கப் படங்களின் தொகுதி தொடர்புகள்
http://picasaweb.google.co.in/
Haish12

haish126@yahoo.in

தூலம், சூக்குமம், காரணம் இதில் தூலம் எனபது உடல், சூக்குமம் எனபது உயிர், காரணம் எனபது மெய்பொருள்(பிரம்மம் அல்லது Void). இந்த உடலுக்கு மையப்புள்ளி, சுற்று வட்டம் இரண்டும் உண்டு. அதாவது உடலுக்கு எல்லை உண்டு, உயிருக்கு மையப்புள்ளி உண்டு. ஆனால் மெய்பொருளுக்கோ மையப்புள்ளியும் இல்லை, எல்லையும் இல்லை. அந்த உயிரின் மனமானது விரிகின்ற போது, பிரம்மம் வரையிலும் போவதால் சுற்று வட்டம் இல்லை, அதனால் பிரம்ம நிலைக்கு மையப்புள்ளியும் இல்லை, சுற்றுவட்டமும் இல்லை.

இங்கு பிரம்மமே அறிவாக இருப்பதனால் அந்த பிரம்மம் என்ற நிலையிலே முற்றறிவு (Total Consciousness), உயிராக வந்தமையால் இயங்கி பெற்ற கற்றறிவு (Character), இதுவரை இயங்கி பெற்ற பதிவுகள் அனைத்தையும் அடக்கமாக கொண்டது. அதற்கு மேலெ இந்த உடல் வரையில் நின்று புலன்கள் மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது அது பற்றறிவு. இந்த மூன்று நிலைகளில் இருக்கும் முற்றறிவு, கற்றறிவு, பற்றறிவு அனைத்திலும் இருப்பது “அறிவு” ஒன்றுதான். அது இருக்கும் நிலைக்கும் தன்மைக்கு ஏற்றவாறு அதன் பெயர் வெறுபடுகிறது. இதைதான் சிக்மெண் ப்ராய்ட் என்னு நவீன உளவியிலின் தந்தை என குறிப்பிட படுபவர் மேல் மனம், நடுமனம், உள்மனம் என்றும் அதையே ஆங்கிலத்தில் Id, Ego, Super Ego or Conscious, Sub conscious, Un conscious என்று சொல்கிறார் அதனால்தான் கோமாவில் இருக்கும் நோயாளிக்கு புலனறிவு எனப்படும் பற்ற்றிவு இல்லாமலும், உயிர், பிரம்ம எனும் கற்ற்றிவு, முற்ற்றிவு உணராவிட்டாலும் இயங்கிக்கொண்டு இருக்கும்.

உ.ம்: ஒரு ஞானியார் என வைத்துக் கொள்வோம், முற்றிலு உணர்ந்தவர், அவருக்கு பிரம்ம நிலையிலே நினைவு அதிகமாக இருக்கும், உயிர் என்ற நிலையிலே அதைவிட குறைவாக கற்றறிவு இருக்கும் அதைவிட குறைவாகவும் மனம் என்ற நிலையிலே பற்றறிவு இருக்கும். அதே போல் புலன் அளவிலே இயங்கிக் கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு (அதாவது நாக்கு, மூக்கு, காது, கண், தோலுக்கு முக்கியதுவம் கொடுப்பவர்கள்) பற்றறிவு அதிகமாகவும், கற்றறிவும் மிக மிக குறைவாகவும், முற்றறிவு என்று ஒன்று இருப்பதே தெரியாமலும் இருக்கும்.

வாழ்த்து என்றாலே அதை நினைக்கும் போதும், அதைச் சொல்லும் போதும் மனத்திலே ஒரு அமைதியான இயக்கம் ஏற்படும். ஏனென்றால் பிறர் நலமாக வாழவேண்டும் என்ற கருத்தோடு எழும் ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். எனவே நமது சுயநலத்திற்காகவாவது நாம் பிறரை மனதார வாழ்தினால் நம் மனம் அமைத்தியடையும். நமக்கு வரும் சினம் தானாக விலகிக் போகும். பகைமை அகலும். நாம் மனமார வாழ்த்தினால் வாழ்த்துபவருக்கும் வாழ்த்து பெறுபவருக்கும் உயிர்கலப்பு ஏற்படும் இனிய நட்பு உருவாகும். (இவை எல்லாம் மனதார வாழ்த்தினால் மட்டுமே உதட்டளவில் வாழ்த்தினால் வராது). அதே போல் அவரை நேருக்கு நேர் வாழ்த்த வேண்டும் என்று இல்லை. நமது எதிரியை கூட வாழ்த்திக் கொண்டு இருந்தால் அவர் மனம் திருந்தி விடுவார்.

இங்கு குறிப்பாக சொல்ல வேண்டியது. நமது வாழ்க்கை துணைக்குதான் நம்மை அதிகம் காயப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதனால் தினமும் முதலில் தியானம் முடித்தவுடன் இருக்கும் திறந்து விரிந்த மனநிலையில் அவருக்கு ”வாழ்க வளமுடன்” என வாழ்த்தினால் அதன் அலையதிர்வால் நல்லிணக்க்ம ஏற்படும். அடுத்து நாம் பெற்ற மக்கள் செல்வங்களை ஒவ்வொருவராக நினைத்து வாழ்த்த வேண்டும். உடன்பிறப்புகளை, நண்பர்களை, நம்முடன் வேலை செய்யும் கீழுள்ளவர்கள், மேலுள்ளவர்கள், கடைசியாக நம் எதிரியும் மனம் திருந்தி கருணையுடன் வாழ வாழ்த்த வேண்டும்.

மிகவும் நன்றி.

அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் மாற்றிடலாம்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அண்ணா உண்மையிலே ரொம்ப அருமையா இருந்தது... " வாழ்க வளமுடன்" அர்த்தம் தெரியும்...

ஆனா அதர்க்கு இவ்வளவு மகிமையா!!!!!!

என் அக்கா இந்த அளவுக்கு சொல்லைண்ணா.... ரொம்ப நன்றி.... வாழ்த்துக்கள்...

உங்க சேவை மெம்மேலும் தெடர வாழ்த்துக்கள்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

வணக்கம் சகோதரர் ஹைஷ் அவர்கட்கு.இதுவரை நான் உங்கள் பதிவுகளுக்கு எந்தவிதமான பின்னூட்டமும் தரவில்லை.மன்னிக்கவும். என்னைப்பொறுத்தவரை ஒரு கருத்துக்கு பதில் கருத்தோ அல்லது கேள்வியோ அக்கருத்தை நன்றாக உள்வாங்கி புரிந்தபின் தருவது மிக நல்லது என்பது என் கருத்து. அந்த வகையில் நான் ஆரம்பத்தில் உங்க பதிவை படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இப்பொழுதுதான் படித்துக்கொண்டுவருகிறேன்.பின்னர் என் சந்தேகங்களை கேட்கலாம் என எண்ணுகிறேன், இந்த வாழ்க வளமுடன் என்பது என் அப்பா அடிக்கடி கூறுவது. இப்பொழுது என் சகோதரி அடிக்கடி(தொலைபேசி எடுத்தவுடன் இதைதான்) கூறுகிறார்கள்.அத்துடன் அவர்கள் நல்லதையே நினைக்கவேண்டும் நல்லதே நடக்கும் எனவும் கூறுவார்.அதை இன்றளவும் செய்துகொண்டுதான் இருக்கிறார்.எனக்கும் இப்பயிற்சி பலனைத்தருகிறது. நான் ஒரு கேள்வி கேட்கலாமா.வாழ்த்துவதற்கு வயசில்லை என கூறுகிறார்களே.வயதில் சிறியவர்கள் பெரியவர்களுக்கு வாழ்த்தலாமா?நல்மனதோடு வாழ்த்தினால் வய‌து ஒரு தடையல்ல என்பது என் கருத்து. தவறு இருப்பின் மன்னிக்கவும். உங்களுடைய இப்பணி மேன்மேலும் தொடர இறை அருள் கிடைக்கட்டும்.

உங்களுக்கு, எங்கள் வாழ்த்துக்கள் ஹைஷ் அண்ணன்...

இது்வும் ஒரு டெஸ்ட்தான்(ஓபாமா-Power, பில்கேட்ஸ் - Money அன்னை தெரசா - Service அதில் எதை உதாரணம் எடுக்கிறார்கள் என) அன்னை தெரசா கூட வேறு ஒரு ஆள் வைத்துதான் சமூக சேவை செய்தார்களாம். //// ஒபாமாவைச் சொன்னதும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.. எனக்கு கதை சொல்லவும் பயமாக்கிடக்கு ஹைஷ் அண்ணன், சிலர் நல்ல வடிவா ருசிச்சு:) படிச்சிட்டு:), பிறகு என்னவோ எல்லாம் சொல்லீனம்:):), சரி இப்ப எனக்கெதுக்கு ஊர்வம்பு. எங்கள் மூத்தவர் உண்டியலில் பணம் சேர்க்கிறார், அப்போ நான் கேட்டேன் "என்ன செய்யப்போறீங்கள் காசு சேர்த்து" என்று? அதுக்குச் சொன்னார், நான் பெரியாளாக வந்ததும், ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் கட்டி, அதில நானே "செவ்" ஆக இருந்து ஒபாமாக்குச் சமைத்துக்கொடுக்கப்போகிறேன் என்று. 9 வயதுதான் ஆகிறது.

இதுவரை பதிந்த மறைபொ்ருள் ரகசியம் 1-5 இழைகளுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மிகவும் நன்றி. ஐந்து இழைகளிலும் இடைவிடாது ஊக்கம அளித்த அன்பு சகோதரி அதிராவிற்கு (ஒரே ஒரு) சிறப்பு நன்றி. வேண்டுகோளை தட்டமுடியாமல் முடிந்த அளவு வரபோகும் கேள்விகளை பொருத்து தொடர்கிறேன்///// என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, வேண்டுகோளை ஏற்று புதிய தலைப்பை ஆரம்பித்தமைக்கு மிக்க மிக்க நன்றிகள். "மபொர6" எனப் போட்டதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கு(கடைசியைக் காணவில்லை). இப்படியே தொடர என் வாழ்த்துக்கள்.

இருப்பினும் ஒரே ஒரு சிறப்பு நன்றியோ.... அள்ளிக்கொடுக்க மாட்டேன், கிள்ளிக் கிள்ளித்தான் கொடுப்பேன் என்கிறீங்கள் பறவாயில்லை... மிக்க நன்றி சொன்னமைக்கு.

நல்ல விஷயங்களை, நாம் யாருக்குச் சொன்னாலும், கேட்பவர்களால் எமக்கு நன்மை கிடைக்காவிடினும், நல்ல விஷயத்தை மற்றவர்களுக்குச் சொன்னதுக்காக, வேறு யார் மூலமோ அல்லது கடவுள் மூலமோ உங்களுக்கு நன்மையேதான் கிடைக்கும். எனவே தொடருங்கோ... இதில் பதிந்துள்ள முழுவதையும் படித்துப் புரிந்துகொள்ள இப்போ நேரம் போதவில்லை, இது வரவேற்பு பதிவு மட்டும்தான். புரிந்ததும் கேள்விகள் தொடரும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தங்களின் ஊக்கத்திற்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

மனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

//நான் ஒரு கேள்வி கேட்கலாமா.வாழ்த்துவதற்கு வயசில்லை என கூறுகிறார்களே.வயதில் சிறியவர்கள் பெரியவர்களுக்கு வாழ்த்தலாமா?// உண்மைதான். யார் வேண்டுமானலும் யாரையும் வாழ்த்தலாம். வயது ஒரு தடையல்ல. அதே போல் நம் பெற்றோரை தவிற வேறு யாருடைய காலிலும் விழக்கூடாது என முதுநூல்கள் கூறுகின்றன.

மிகவும் நன்றி.

மனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

தங்களின் வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.

மனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

முதலில் உங்களின் இந்த அரிய பணிக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்!அத்தனை விடயங்களும் மிகமிக அருமை. அறுசுவை தள நிர்வாகத்தினருக்கும் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம். நான் நீண்ட காலமாக இவ் இழையின் ரகசிய வாசிப்பாளர். இங்கு கருத்துகளை பதியும் சகோதரி அதிரா,மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சகோதரனே! வாழ்த்துதல் பற்றி எனக்கு உள்ள சந்தேகத்திற்கு விளக்கம் தாருங்கள்.
உ+ம்: வயது மிகமுதியவர்கள் அவர்களின் பிள்ளைகளின் பிறந்த தினத்தையோ அன்றி சில முக்கிய தினங்களையோ மறந்துவிடுதல் இயற்கை. அவர்களுக்கு விஷயத்தை கூறி அவர்களிடமிருந்து வாழ்த்து பெறுதல். மேலும் ஒருவருக்கு தெரியாத, குறிப்பிடத்தக்க(முக்கியமான)ஒரு விஷயத்தை, நாம் அவசியமென கருதும் நபரிடம் சொன்னால்தானே அவருக்கு அது தெரியவரும் அப்படித் தெரிவித்து அவரிடமிருந்து வாழ்த்து பெறுதல்.
அதாவது, ஒரு விடயத்திற்காக எமக்கு மிக வேண்டப்பட்டவரிடமிருந்து 'வாழ்த்தினை கேட்டுப்பெறுதல்' பற்றி விளக்கினால் நல்லது. ஏதும் தவறாக (சொற்குற்றம், பொருட்குற்றம்) இருந்தால் மன்னிக்கவேண்டுகிறேன்.

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

தங்களின் வரவு நல்வரவு ஆகுக என அருட்பேராற்றலிடம் கேட்டுகொள்கிறேன். தங்களின் பாரட்டுகளுக்கும், ஊக்கத்திற்கும் மிகவும் நன்றி.

எல்லா மனிதருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும் இல்லாதவர் மனிதரே இல்லை எனலாம். இங்கு நம் எதிர்பார்ப்பு ஆசி மட்டுமே. ஏன் அவர் நினைவுவைத்து வாழ்த்த வேண்டும் என நினைக்க வேண்டும். அதனால் முக்கிய நாட்களில் நாம் யார் மீது அன்பும் மதிப்பும் வைத்து இருக்கிறோமோ அவர்களிடம் நாம்தான் சொல்லி ஆசி வாங்கவேண்டும். அதுதான் நாம் அவ்ருக்கு கொடுக்கும் மதிப்பின் அடையாளம்.

மனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

பகுதி ஐந்தில் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை அல்லது ஆண்ணாசை (பாலியல் ஆசை) என்ற மூன்று ஆசைகளையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மண்ணாசையும்+பொன்னாசை = பணத்தாசையாகும். ஆக இன்றய நிலையில் ஒரு சராசரி மனிதனின் தேவைகள் இரண்டே இரண்டுதான் ஒன்று பணத்தாசை மற்றது பாலியல் ஆசை.

பாலியல் ஆசை எனபது இருவகைப் படும் ஒன்று உடல் சார்ந்த்து அடுத்து மனம் சார்ந்த்து. உடல் சார்ந்த்தை காமம் எனவும் மனம் சார்ந்த்தை காதல் அல்லது அன்பு எனவும் சொல்கிறோம். இங்கு உடல்சார்ந்த காமம் வேதியல் மூலகூறுகளினால் நம்மை தொல்லை பண்ணுவது. அதிலும் குறிப்பாக “டோப்பமைன்” எனும் ஹார்மோனின் விளையாட்டுதான். ஆனால் காதல் என்னும் அன்பு நமது உடலில் உள்ள உயிர் துகள்களின் வேக சூழற்சியினால் ஏற்படும் காந்த அலைகளினால் வருவது இதைதான் ஜீவகாந்தம் என்கிறோம். ஆங்கிலத்தில் அறியாமலே “வைப் - Vibe (Vibration)” என்கிறோம்.

உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ கருவுறுதல் நிகழும் போது ஆணின் உயிரணுவிலுல்ல 46 குரோமோசோன்களும் (22+1 சோடிகள்) பெண்ணின் 46 குரோமோசோன்களும் இணையும் போது ஒரு புது உயிர் உண்டாகிறது. இதில் ஒவ்வொரு குரோமோசோன்களிலும் எண்ணிலடங்கா DNA இழைகள் உள்ளது. அதில் இன்னும் சில நுணுக்கங்களும், சூட்சமங்களும் இருக்கிறது. அதில் உள்ள 22+1 எனபடும் அந்த கடைசி சோடி இழைகள்தான் X & Y எனும் சோடிதான் பிறக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தீர்மானிப்பது அதையே திருமூலர் 4000 வருடங்களுக்கு முன் “ல” & “வ” என்ற இழைகளைப் பற்றி தனது “திருமந்திரத்தில்” தெளிவாக விளக்கியுள்ளார்.

http://www.daviddarling.info/encyclopedia/C/chromosome.html

http://www.daviddarling.info/encyclopedia/C/cell_division.html

மேலே உள்ள லிங்கில் சில விளக்க படம் உள்ளது புரிதலுக்காக.

இரு உயரணுவும் இணைந்த உடன் அவை இரண்டு செல்களாக பிரியும், அதன் பின் அந்த இரண்டாக பிரிந்த செல்கள் மேலும் இரண்டாக பிரியும். இப்போது மொத்தம் நான்கு செல்கள் அல்லது நமது உடலின் 25% ஒரு செல். அந்த ஒரு 25% பிரியாமல் ஒரு குறிப்பிட நாள்வரை மௌனமாகிவிடும், மீதம் உள்ள மூன்று செல்கள் மட்டுமே செல்பிரிவு செய்யும். இந்த மௌனம் காக்கும் ஒரு செல்தான் பின்னாளில் பாலியல் ஆசைகளுக்கான உறுப்புகளாகவும் அதை இயக்கும் “புரோக்ராம்” ஆகவும் மாறுகிறது.

அந்த ஒரு செல்லின் வளர்ச்சி, வெளிப்பாடு, அது கையாளக்கூடிய ஆற்றலின் அளவு, அது தடைபடாமல் இயங்கும் காலம், etc... இவையனைத்தும் செவ்வாய், சுக்கிரன், புளுடோ என்ற கிரகங்களின் காந்த அலையதிர்வு வீச்சினால் நிர்ணயிக்கப் படுகிறது. இதில் இன்னும் பல நுண்ணிய சூட்சமரகசியங்கள் அடங்கியுள்ளது. அதே போல் காமத்தை “ஜூனோ”வும், காதலை “சீரான்” என்ற துணைகிரகத்தின் காந்த அலையதிர்வுகள் நிர்ணயிக்கிறது.

அந்த மௌனம் காத்த ஆற்றல்தான் பிற்காலத்தில் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை நிர்ணயிக்கும். அதாவது கீழ்மட்ட ஆற்றலாக இருந்தால் அதிகமாக பிள்ளைகள் உற்பத்தி செய்வார்கள். மேல்மட்ட ஆற்றலாக இருந்தால் இதே ஆற்றல்தான் சம்பாதிக்கும் திறமையாகவும் (பணம் உற்பத்திதிறன்), கலை & நுண்கலையாற்றலாகவும், பெயரும் புகழும் பெற இந்த ஆற்றலை நாம் சரியான முறையில் தன்மாற்றம் செய்ய கற்று கொள்ள வேண்டும். இதைதான் யோகத்தில் “குண்டலினி” ஆற்றல் என்கிறோம். தன்மாற்றம் செய்யும் முறையை “குண்டலினி யோகம்” என்கிறோம்.

மிகவும் நன்றி.

மனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்