தொடர் கதை - எழுத வாருங்கள்..

சமையல், கைவேலைகள் என்று மட்டுமல்லாது கதை, கவிதை என்று எல்லாவற்றிலும் அசத்தக்கூடிய ஏராளமான அறுசுவை நேயர்கள் இருக்கின்றார்கள் என்பது எமது அனுபவத்தில் கண்ட ஒன்று. அத்தகைய திறன் கொண்டோரை உலகம் அறியச் செய்ய அறுசுவையால் இயன்ற வழிமுறைகளை உருவாக்கி கொடுத்து வருகின்றோம். அந்த வரிசையில், கதை எழுதும் ஆர்வம் உள்ள பலரை அறிமுகப்படுத்தும் விதமாக, ஒரு கதையை பலர் எடுத்து எழுதும் "தொடர் கதை" பகுதி தொடங்கப்படுகின்றது.

விதிகள்:

1. கதை எழுத ஆர்வம் உள்ளவர்கள், முன்பே தங்கள் விருப்பத்தினை arusuvaiadmin அட் gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்தவும்.

2. கதை எழுத கண்டிப்பாக ஆர்வம் மட்டும் போதாது. எழுத்துத் திறனும், பிழையின்றி எழுதும் அளவிற்கு தமிழும் தெரிந்திருத்தல் அவசியம். எழுத்துப் பிழைகளுடன் எழுதுபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

3. எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றார்கள் என்பதை வைத்து கதையின் அத்தியாயங்கள் எத்தனை என்பது முடிவு செய்யப்படும். ஒருவருக்கு ஒரு அத்தியாயம் மட்டுமே. தொடக்க அத்தியாயம் எங்கள் பக்கம் இருந்து கொடுக்கப்படும். அடுத்த அடுத்த அத்தியாயங்கள், குலுக்கல் முறையில் நேயர்களுக்கு ஒதுக்கப்படும். இதில் எங்களின் முடிவே இறுதியானது.

4. அடுத்த அத்தியாயம் எழுதுபவர்களுக்கு முதல் அத்தியாயம் முன்பே மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுவிடும். அதைக் கொண்டு அவர்கள் 3 நாட்களுக்குள் அடுத்த அத்தியாயத்தை தயார் செய்து எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். முன்னவர் எழுதியவற்றில் மாற்றங்கள் செய்ய அடுத்து எழுதுபவருக்கு உரிமை கிடையாது.

5. முதல் நான்கு அத்தியாயங்கள் கிடைத்த பின்பு தொடர் மன்றத்தில் வெளியாகும். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு புதிய த்ரெட்டில் வரும். தினமும் ஒரு அத்தியாயம் வருமாறு பார்த்துக்கொள்வோம்.

6. முதல் கால்பகுதி அத்தியாயங்களை எழுதுபவர்களுக்கு, கதையில் புதிதாக எத்தனை பாத்திரங்களை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளும் உரிமை வழங்கப்படும். அதாவது 20 அத்தியாயங்கள் உள்ள கதையில் முதல் 5 அத்தியாயங்கள் எழுதுபவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படும். அடுத்த கால் பகுதி (5 அத்தியாயங்கள்) எழுதுபவர்கள் புதிதாக 2 கேரக்டர்களை உட்புகுத்தலாம் (தேவைப்பட்டால் மட்டும்) அடுத்த கால் பகுதி (5 அத்தியாயங்கள்) எழுதுபவர்கள் புதிதாக ஒரு கேரக்டர் சேர்க்கலாம். கடைசி கால் பகுதி (5 அத்தியாயங்கள்) எழுதுபவர்களுக்கு புதிய பாத்திரங்கள் சேர்க்க உரிமை இல்லை. இருக்கும் கதாபாத்திரங்களைக் கொண்டு கதையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இங்கே கதாபாத்திரம் என்று குறிப்பிடுவது கதையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களை. காய்கறி கடைக்காரர், சலூன் கடைக்காரர் என்று வந்து போகும் பாத்திரங்கள் அல்ல.

7. ஒவ்வொரு அத்தியாயமும் கதையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். தனி ட்ராக்கில் செல்லக்கூடாது. இரண்டு ட்ராக் கதையென்றால் எதேனும் ஒரு ட்ராக்கில் சம்பந்தப்பட்ட அத்தியாயத்தை எழுத வேண்டும். கடைசி கால் பகுதியில் இருப்பவர்கள் இணைப்புகள் செய்யலாம். தற்போது இரண்டு ட்ராக்கிற்கு மேல் செல்ல வேண்டாம். இதன் வெற்றியைப் பொறுத்து மல்டி ட்ராக் கதைகளுக்குச் செல்லலாம்.

8. கதாபாத்திரங்களை தேவையில்லாமல் கொல்லக்கூடாது. அடுத்த அத்தியாயம் எழுதுபவரை தர்மசங்கடத்தில் கொண்டுவிடும் விதமாக, குடும்பமே சூசைட் செய்து கொண்டது என்றெல்லாம் முற்றும் போடுவது போல் எழுதக்கூடாது. கதையில் திருப்பங்கள் இருக்கலாம். சஸ்பென்ஸ் இருக்கலாம். தொடர்ச்சி எந்த காரணம் கொண்டும் விட்டுப்போகக்கூடாது. ஒவ்வொரு அத்தியாய முடிவும் அடுத்து என்னவாகும் என்ற எதிர்பார்ப்பை கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும்.

இது ஒரு சோதனை முயற்சி. இது சிறப்பாக வரும்பட்சத்தில் இன்னும் நிறைய புதுமைகளுடன் இந்த பகுதி மேம்படுத்தப்படும். இது குறித்த உங்கள் சந்தேகங்களை இங்கே கேட்கலாம். ஏதேனும் தகவல்கள் விடுபட்டு போயிருந்தால், பின்னர் அவை இந்த த்ரெட்டில் சேர்க்கப்படும்.

இந்த த்ரெட்டை பார்ப்பதற்கான அழைப்பு இது :-)

நல்ல ஐடியா தொடர்கதை எழுத இருக்கும் அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள். இத இங்கு சொல்லலாமா?

Jaleelakamal

நல்ல ஐடியா தொடர்கதை எழுத இருக்கும் அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள். இத இங்கு சொல்லலாமா?

Jaleelakamal

என் இனிய தோழிகளே! தொடர்கதை எழுத வரும் தோழிகளை
வருக வருக என்று வரவேற்க்கின்றேன்:)
நான் அதிகம் எழுதமாட்டேன் ஆனால் நன்றாக வாசித்து ரசிப்பேன்.
வாருங்கள் உங்கள் ஆக்கங்களையும், படைப்புக்களையும் அறுசுவையில்
பதியுங்கள். அது தடையின்றி பாயட்டும். வாழ்த்துக்கள். நன்றி அன்புடன் ரசிகை

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வாழ்த்துக்கள்...
இப்படியொரு நல்ல ஐடியாவை ஆரம்பித்திருக்கும் எங்கள் அறுசுவையின் அட்மினுக்கு முதலில் அன்பான வாழ்த்துக்கள்.

நல்ல விஷயம்தான். ஆனால் விதிமுறைகளைப் பார்க்கும்போது, பயமாக இருக்கு. அதுவும் 3 நாட்களுக்குள் முடித்து அனுப்பவேண்டும் என்பது மிகக் குறுகிய காலமாக இருக்கு. கடைசி ஒரு வாரம் என்றால், எமது வேலைகளோடு இதையும் செய்யலாம். அதுதான் யோசனையாக இருக்கு.

இது நல்லபடி ஆரம்பமாக என் வாழ்த்துக்கள். தொடங்குவதாயின் எப்போ தொடங்குவாதாக முடிவெடுத்திருக்கிறீங்கள்?. முடிந்தால் தெரிவியுங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நல்ல ஐடியா!!! இது ரிலே ரேஸ் மாதிரி.. யார் எப்படி ஓடுவாங்கன்னு தெரியாது.. ஆனா ஒன்னு மட்டும் தெரியும் .. இங்க ஒரு பத்தி எழுதினாலே 10 நாள் படிச்சி சிரிப்பேன்.. எனக்கு தெரிந்து ரொம்ப காமெடி குவீன்கள் இருக்காங்க.. அதிலும் காணாம இருக்கவங்க வந்தா இன்னும் ஜோரா இருக்கும்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தொடர் கதை பகுதியில் பங்கேற்க, நன்றாக எழுதக்கூடிய சிலரை நானே அழைக்கலாம் என்று இருந்தேன். அதனால் மற்றவர்கள் வருத்தம் கொள்வார்களோ என்ற சந்தேகம் இருப்பதால், நான் தனிப்பட்ட முறையில் யாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள், கதை எழுத விருப்பம் என்று arusuvaiadmin அட் gmail.com க்கு ஒற்றை வரியில் ஒரு மெயில் அனுப்பவும். அல்லது இந்த த்ரெட்டில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.

இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளவர்கள்

1. திருமதி. சீதாலெட்சுமி
2. திருமதி. ஆசியா உமர்
3. திருமதி. உமா
4. திருமதி. இமா
5. திரு. ஹைஷ்

ஆர்வம் உள்ள மற்றவர்கள் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் உங்கள் விருப்பத்தினை தெரிவிக்கவும். புதன்கிழமை கதையின் தலைப்பு எத்தனை பேர், எத்தனை அத்தியாயங்கள் என்ற அறிவிப்பு வெளியாகும். அடுத்த திங்கட்கிழமையில் (12/10/09) இருந்து கதை வெளியாகும். எழுதுபவர்கள் குறைவாக இருந்தால் இரண்டு சுற்றாக வாய்ப்பு வழங்கப்படும். ஒருவருக்கு இரண்டு அத்தியாயங்கள் எழுதும் வாய்ப்பு வழங்கப்படும். புதன்கிழமைக்கு பிறகு விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு இரண்டாவது தொடர் கதையில் பங்கு பெற வாய்ப்பு அளிக்கப்படும்.

வாழ்த்துக்கள்!! அருசுவையில் கவிதையுடன் கதையும் இருந்தால் எப்படி இருக்கும் என்று பலமுறை நான் யோசித்திருக்கிறேன்..ஆனால் இதில் எனக்கு நிறைய குழப்பங்களும் சந்தேகங்களும் இருக்கிறது,முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது,

இது என்ன மாதிரி கதையாக(திரில்,குடும்பம்,காதல்) இருக்க வேண்டும் என்று யார் தீர்மானிப்பது? அதாவது முதல் அத்தியாயம் எழுதுபவர் திரில்லாக தொடங்கி 2வது எழுதுபவர் குடும்பமாக தொடர்ந்து கடைசியில் காதல் கதையாக முடிந்துவிடாதா?

இரண்டாவதாக, முதல் அத்தியாயம் எழுதுபவர் ஒரு பாத்திரத்தை ஒரு காரணத்திற்கு உருவாக்கி அடுத்து எழுதுபவர் அதை முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிட்டால் முதலில் எழுதியவருக்கு வருத்தம் இருக்காதா?

மூன்றாவதாக, கதை(அத்தியாயம்) குறிப்பிட்ட காலத்தில் எழுதி அனுப்ப முடியாமல்(தவிர்க்க முடியாத சில காரணங்களால்) போய்விட்டால் என்ன செய்வது?

நான்காவதாக, தொடர்கதை எழுதுபவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி எழுதமுடியாது இல்லையா? அதாவது சிலபேர் A to Z தெரிந்து எழுதுவார்கள், என்னை போல் உள்ளவர்கள் நுனிபுல்தான், எப்படி அவர்களை தொடர்ந்து எழுதமுடியும்? படிப்பவர்களுக்கு முதலில் சுவாரசியமாகவும் அடுத்த அத்தியாயம் படிக்கும்போது ஆர்வம் குறைந்து விடாதா?

இன்னும் நிறைய சந்தேகமும் குழப்பமும் இருக்கிறது, உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பதில் எழுதுங்கள்...அடுத்தடுத்த பதிவில் தொடர்கிறேன்..

சகோதரி தாமரை அவர்களுக்கு,

நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், இது முற்றிலும் ஒரு பரீட்சார்த்த முயற்சி. உங்களுக்கு உள்ளது போலவே எனக்கும் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. ஒரு சுற்று சென்ற பிறகு என்ன பிரச்சனைகள் வருகின்றன என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்து, அதனை சரி செய்ய என்ன மாற்றங்கள் தேவைப்படும் என்பதை முடிவு செய்யலாம்.

கதை காதல் கதையா, மர்மக் கதையா, நகைச்சுவை கதையா.. இப்படி என்ன மாதிரி கதை என்பதை நாங்கள் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு விடுவோம். இருந்தாலும், மர்ம கதையில் காதலும் வரலாம். நகைச்சுவையும் வரலாம். நகைச்சுவை கதையில் மற்ற இரண்டும் இருக்கலாம். இது தவிர்க்க முடியாது. மீண்டும் நான் ஏற்கனவே குறிப்பிட்ட விதிமுறையை நினைவூட்ட விரும்புகின்றேன். கதை ஓட்டம் தொடராக இருக்க வேண்டும். சம்பந்தம் இல்லாமல் இருக்கக்கூடாது.

இந்த தொடரை நாங்கள் படித்து தேவைப்பட்டால் எடிட் செய்துதான் வெளியிடுவோம். எழுதுபவர்கள் நேரடியாக பதிவு செய்ய கூடாது. எனவே சம்பந்தம் இல்லாமல் எழுதினால் அவற்றை நீக்க அல்லது மாற்ற எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எழுதப் போவது யார்.. நம்மில் சிலர்தானே. எனவே எல்லோரும் நிலையறிந்து நல்ல முறையில் எழுதுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஒருவர் முக்கியத்துவம் கொடுத்த பாத்திரத்தை மற்றவர் முக்கியத்துவம் குறைப்பது, பாத்திரத்தை கொல்வது இவையெல்லாம் சில நேரங்களில் தவிர்க்க முடியாது. வேண்டுமென்றே செய்யாமல், கதையின் தேவைக்கு செய்தால் அதில் தவறு இல்லை. சில நேரங்களில் அவை சுவாரஸ்யம் தரும் திருப்பமாக இருக்கும்.

நீங்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல், எழுத்து திறன், பொது அறிவு திறன் இவையெல்லாம் நபருக்கு நபர் வித்தியாசப்படும். அவர்களது எழுத்து அவற்றை பிரதிபலிக்கும் என்பது உண்மைதான். அதே சமயம், இங்கு எழுத இருப்பவர்கள் யாரும் அனுபவம் வாய்ந்த கதாசிரியர்கள் கிடையாது. எல்லோருக்குமே இது ஒரு புதிய, வித்தியாசமான அனுபவம்தான். எனவே ஒவ்வொருவரும் அவர்களால் இயன்ற பெஸ்ட்டை கொடுக்க முயற்சி செய்வார்கள் என்று நம்புகின்றேன். அப்படி கொடுக்கையில், தொடர் படிப்பதற்கு மிகவும் இண்ட்ரஸ்டிங்காக இருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. மீண்டும் இதைத்தான் சொல்வேன். "ஒரு ரவுண்ட் ஓட விட்டுத்தான் பார்ப்போமே.. "

அடுத்து, மூன்று நாட்கள் நேரம் போதாது என்று ஒருவர் சொல்கின்றார். மூன்று நாட்களில் கதை முழுவதையும் எழுதப்போவதில்லை. ஒரு அத்தியாயம் எழுத மூன்று நாட்கள் போதுமான நேரம் என்றே நம்புகின்றேன். மூன்று நாட்களில் ஒருவர் எழுதிக் கொடுப்பதை அடுத்தவருக்கு அனுப்பி அடுத்த அத்தியாயத்தை எழுதி வாங்க வேண்டும். அதிக நாட்கள் டைம் கொடுத்தால் அடுத்த அடுத்த அத்தியாயங்கள் கிடைக்கப் பெற தாமதம் நேரிடும். கதையை இடைவெளி இன்றி தொடர்ந்து வெளியிட முடியாது. மூன்று நாட்கள் நேரம் ஒதுக்க இயலாதவர்கள் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் அவர்களுக்கு வேறு ஒரு அத்தியாயம் எழுத வாய்ப்பு தரலாம். அவர் இடத்தில் அடுத்துள்ளவரை எழுதச்செய்யலாம்.

எப்படி இருப்பினும் கதையின் நான்கைந்து அத்தியாயங்கள் கிடைத்தப் பிறகே தொடரை வெளியிடுவோம். அதன்மூலம் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று நம்புகின்றேன். நாம் எதிர்பாராத வேறு சில பிரச்சனைகளும் வரலாம். இது வெள்ளோட்டம்தானே. எல்லாவற்றையும் சரி செய்து, புது தளத்தில் குறைகள் இல்லாத பகுதியாக இதை கொண்டுவரலாம்.

---- கதை எழுத ஆர்வம் காட்டியுள்ள மேலும் சிலர் ---
6. திருமதி. அதிரா
7. திருமதி. ஹேமா
8. திருமதி. தாமரை

தலை லேசாக சுத்துது:)
எனக்கும் கதை எழுத்தத்தெரியும் என நினைத்து, நானும் சம்மதம் தெரிவித்துவிட்டேன். இப்போ நினைக்க தலைசுத்துவதுபோல இருக்குது.

பயத்தில் யோசித்துக்கொண்டிருந்தேன், பின்னர் நினைத்தேன், அதிகமானோர் பங்குபற்றினால்தானே கதையும் நன்றாகப்போகும் என்று, ஏதோ ஒரு தைரியத்தில் சம்மதித்துவிட்டேன். ஆனால் எனக்கு குடும்பக்கதைகள் போன்றவைதான் எழுத வரும். துப்பறியும் கதை, மர்மக்கதைகள் என்றால்.. குளிரும் கடலுக்குள் தள்ளினால்கூட எழுதவராது, அப்படியான கதைகளை நான் படிப்பதும் குறைவு.

எனவே அப்படியான கதையில்தான் தலைப்பு ஆரம்பமாகப்போகுதெனில், என்னை தவிர்த்து ஏனையோரை குலுக்கோ குலுக்கென்று குலுக்குங்கோ:), குலுக்கல் முறையில் தெரிவு செய்வதைச் சொன்னேன்:). மற்றும்படி நானும் இணைகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்